Sunday, December 27, 2009

அவதார் ஆங்கில படமும் - இளையராசா மற்றும் சாருவும்.( திரை விமர்சனம்)

சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் ஆங்கில திரைப்படம் இது. கிட்டத்தட 11 ஆண்டுகளுக்கு பிறகு சேம்சு கேம்மரூன் கொடுத்திருக்கும் படம் இது.

இந்த படத்தை பற்றிய விமர்சனங்களை பதிவர்கள் மிகவும் ஆழமாகவும் நுனுக்கமாகவும் எழுதிவிட்டபடியால் மறுபடியும் ஒரு மறுபதிவு என்று சொல்லும் அளவிற்கு செல்லாமல், மற்றவர்கள் சொல்லாமல் விட்ட விமர்சனங்களுக்கு செல்வோம்.

தொழில் நுட்ப மாயாசாலங்களாக இருக்கும் இந்த படத்தில் இசை தனது பங்கை சிறப்பாக செய்து இருக்கிறது. குறிப்பாக அந்த பென்டோரா காடுகளை காட்டும் காட்சிகளில் காட்சிகளின் தன்மைகளுக்கு ஏற்றார் போல் மிகவும் அருமையாக காட்சியை விட்டு தனித்து தெரியாமல் காட்சியோடு மிகவும் ஒன்றிப் போய் அமைந்து இருக்கிறது இந்த படத்தின் இசை.

காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமாக காட்டும் இயக்குனர், அந்த பிரம்மாண்டங்களை மனதிலே பதிய வைகிறார் அந்த இசையமைபாளர். பெரிது பெரிதாக காட்டப்படும் சுரங்க இயந்தரங்களும் சரி, சுரங்க தளபாடங்களும் சரி. அவர்களுக்கு பாதுகாப்புக்காக கொண்டு வந்து குவிக்கப்பட்டு இருக்கும் இரணுவ தளபாடங்களாக இருந்தாலும் சரி, அப்படி ஒரு பிரம்மாணமான பின்னனி இசை இந்த படத்திற்கு.

முதல் முறையாக கதையின் தலைவன் பென்டோரா காட்டில் மாட்டிக்கொள்வதும், அந்த மர்மம் நிறைந்த சூழலில் நடக்கும் செய்களுக்கு காட்சியும் இசையும் அமைந்து இருக்கும் பாருங்கள், அப்படி ஒரு திகிலாக அமைத்து கொடுத்து இருப்பார்கள். முதலில் காட்டும் அந்த பெண்மணியை வைத்து காட்சி எப்படி நகரும் என்று தெரிந்தாலும், காட்சியின் வீரியத்தை அந்த இசையும் காட்சி அமைப்பும் தூக்கி நிறுத்தி இருக்கிறது.

மனித இனம் எங்குமே பார்த்து இருக்காத ஒரு உலகத்தை படைத்து நமக்கு காட்டி இருக்கிறார் இயக்குனர். படம் முக்கால்வாசி காட்சிகள் அசைபடமாக அமைந்து இருக்கிறது. அசைபட பாத்திரங்களும் மனிதர்களும் ஒருங்கே ஒரே காட்சியில் நடித்து இருக்கும் காட்சிகள் குறைவு என்றாலும் அசைபட சறுக்கல்கள் இல்லாமல் எடுத்து இருக்கிறார்கள்.

படம் துவங்கிய நேரத்தில் இருந்து பென்டோரா காடுகளை காட்டும் வரையில் படத்தின் இசை இந்தகால இசையில் இருக்கும். தேவைக்கு ஏற்றார் போல் ஆங்காங்கே காட்சிகளுக்கு தகுந்தார் போல் ஓங்கி ஒலிக்கவும். இதமாக ஒலிக்கவும் இசையை அமைத்து இருப்பார்.

ஆனால் பென்டோரா காட்டையும், அந்த மனிதர்களின் நடமாட்டங்களையும் காட்டும் போது இசை அப்படியே சம்பந்தமே இல்லாத, அது வரையில் வந்த இசைக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத திசையில் பயணிக்கிறது.

இது முற்றிலும் வேறு உலகம், இதிலே வாழ்பவர்களுக்கும் மனிதர்களுக்கு உருவத்தில் ஒற்றுமை இருந்தாலும் அளவிலும், பழக்க வழக்கங்களிலும், உடல் வேதியல்களிலும் அவர்கள் மனிதர்களை போல் அல்ல என்று சொல்ல, காட்சி அமைபுகளும், அந்த அசைபட பாத்திரங்களும் மட்டும் அல்லாது நம்மையும் அறியாது நம்மை ஆட்கொள்ளும் அந்த இசை.

இந்த வித்தியாசமான இசை அவ்வப்போது வந்து போனாலும், நீண்ட அளவில் வருவது கதை தலைவன் இறுதி கட்ட தேர்வுக்கு செல்லும் காட்சிகளில் தான். அந்த காட்சியின் அமைப்பு இது தான், தலைவன் அந்த போட்டியின் இறுதி நிலையில் தேர்ச்சி பெறுகிறான். அதோடு மட்டும் நில்லாது அந்த விந்தை உலகத்தில் அவனை ஒருவனாக ஒத்துக்கொள்ளும் தருணம் அது. மேலும் அந்த இடிராகன் பறவையின் முதுகில் அமர்ந்து அதை செலுத்த பழகிக்கொள்ளும் வேளையில் கற்றுக்கொடுத்தவளும் அவனோடு பறந்து மனதில் காதல் அரும்பும் காட்சிகளாக அவைகள் நீளும்.

இந்த காட்சிகளுக்கு ஒரு இசை கோர்வையை பின்னனியில் சேர்த்து இருப்பார்கள் இந்த படத்தில். அந்த காட்சிகளின் தீவிரம், பிரம்மாண்டம் என்று எல்லாவற்றையும் விலக்கிவிட்டு கவனித்தால் மட்டுமே அந்த இசையை தனியாக கவனிக்க முடியும், அப்படி ஒன்றிப்போய் இருக்கும் அந்த இசை.

இந்த இசையை கவனிக்கும் போது மனதில் இரண்டு நபர்கள் வந்து போனார்கள், ஒன்று இசைஞானி இளையராசா, இரண்டாவது சாரு.

1997ல் மலையாளத்தில் இளையராசா குரு என்று ஒரு படம் தந்தார். அந்த படத்திற்கு இசையமைக்க அங்கேரி சென்று, பழங்கால வாத்தியங்களை கொண்டு அந்த விந்தை உலக மக்களின் காட்சிகளுக்கும், கண் இல்லா அந்த மனிதர்கள் செவியை மட்டுமே வைத்து வாழுபவர்களிடம் இசை எவ்வளவு தரமாகவும் ஆழமாகவும் இருக்கிறது என்று காட்டும் வகையில் பாடல்களும் பின்னனி இசையும் என்று இசை மழை பொழிந்து இருப்பார் இராசா.

இளையராசாவின் பலமே காட்சிகளுக்கு ஒன்றிப்போய் இசையமைப்பது தான். அப்படி தான் குருவிற்கும் இசையமைத்து இருப்பார். அந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மிகவும் இனிமையாகவும், பழமையாகவும் இருக்கும். அந்த படத்திலும், நிகழ்காலத்தில் நடக்கும் கதை ஒரு விந்தை உலகுக்கு தாவும். அங்கேயும் அந்த விந்தை உலகை பார்க்கு மோகன்லாலின் உணர்வுகளையும், அந்த காட்சிகளுக்கும் என்று பின்னனியும், பாடல்களும் நிகழ்வு உலகத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு இசை வடிவத்தை கொடுத்து இருந்தார். அந்த கால இசை கருவிகளை கொண்டு. அதிலும், அந்த கருவிகளில் என்ன இசை வருமோ அந்த அளவிற்கு மட்டும் என்று அமைத்துகொடுத்து இருந்தார்.

அந்த படத்தின் இசை சாயல்கள் இந்த படத்தில் இந்த பென்டோரா காட்சிகளில் நம்மால் கேட்க முடியும். இங்கே சாயல் என்று சொல்வது, அதே இசையை எடுத்து அப்படியே போட்டுள்ளார்கள் என்று அல்ல. அந்த இசையை போல் இங்கேயும் வித்தியாசப்படுத்தி மண்ணின் மைந்தர்களது இசையாக அது பயணிக்கும் பாணியை சொல்கிறேன். அதாவது 1997ல் இளையராசா கையாண்ட அதே முறையை இன்றைக்கு இந்த அவதார் படத்தில் அப்படியே கையாண்டு இருக்கிறார்கள். அந்த ஒற்றுமையை நம்மால் கட்டாயம் அறிந்து கொள்ளமுடியும். இதற்கு இசை தெரிந்து இருக்கவேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை.

இந்த மாதிரியான காலசுவடு படங்களில், அந்த காலத்தில் குருடர்களால் என்ன என்ன இசைக்கருவிகள் எல்லாம் பழகிக்கொள்ள முடியுமோ அந்த கருவிகளை மட்டும் உபயோகிப்பது. அந்த கருவிகளில் வரும் எளிய ஏற்ற இறக்கங்கள் மட்டுமே வைப்பது (கர்னாடக சங்கீதத்தில் வருவது போல் நெளிவு சுளிவுகள் இல்லாமல் இருபதை சொல்கிறேன்). மேலும் அந்த இசைக்கோர்வைகளில் இசையை கலக்கும் அளவிலும் அந்த கருவிகளின் விகிதமும் அந்த அளவு விகிதாசாரத்திலேயே இருக்கும்.

இந்த செயல்களில் தான் இராசா மற்ற இசையமைபாளர்களை எல்லாம் தாண்டி தனியாக தெரிவார். இது அவருக்கு எந்த அளவிற்கு இசை தெரியும் என்ற புலமைகளை சாதாரண மக்களுக்கும் கூட அறியவைக்கும் அவரது செயல்கள்.

குருவில் கேட்கும் தாளங்களும், அந்த தாளங்களுக்கு ஊடாக வரும் மெல்லிய புல்லாங்குழல் மற்றும் மற்ற கிராமிய கருவிகளின் தாளங்களும் கீதங்களும் இங்கே வரும். மொத்தத்தில் இராசாவின் இசையை கேட்டுக்கொண்டு இருப்பது போல் ஒரு உணர்வு இந்த படத்தை பார்க்கும் போது.

இந்த இடத்தில் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது, ஆமாம் இந்த உலகதரமான இசை என்று பதிவர்கள் எல்லாம் எழுதித்தள்ளுவார்களே அந்த மாதிரி ஏன் இந்த படத்தின் பென்டோரா காடுகளின் காட்சிகளுக்கு இசை அமைக்காமல், காட்டுவாசிகளின் இசையாகவும், இடன்டனக்கா தாளமாகவே இந்த உலக தரமான படத்திற்கு இசை அமைத்துள்ளார்கள் என்று.

பிறகு சாரு வந்து கேட்பார் ஆமாம் அங்கே அவர்கள் எல்லாம் இடிராகன் மேல் அமர்ந்து பறக்கிறார்கள், அங்கே எப்படி இப்படி ஒரு துள்ளிய ஒளிப்பதிவில் அத்தணை வாத்திய கருவிகளை வைத்துக்கொண்டு வரவழைக்கும் இசையை கொடுத்துள்ளார்கள். இங்கே சரியான இசையாக இருக்கவேண்டும் என்றால் அது அங்கே பறக்கும் இடிராகன் பறவையின்(விலங்கின்) இரகு சத்தைகொண்டு அல்லவா இசை அமைத்திருக்க வேண்டும். அதை விடுத்து இப்படி ஒரு பெரிய இசை குழு வாசிக்கும் இசையாக அங்கே வருவது எல்லாம் பொருந்தாத இசையாகத்தான் இருக்கும் என்றும் விமர்சிப்பார் பாருங்கள்.

பார்ப்போம் அந்த உலகத்தரமான இசை இந்த படத்திற்கு வந்திருக்கிறதா இல்லை வெறும் இடன்டனக்காவாக தான் இசை வந்துள்ளதா என்று சாருவும், அவரை போல் இராசாவின் இசையை விமர்சிக்கும் குழுவிற்கும் கேள்விகளை வைப்போம், என்ன பதில் சொல்கிறார்கள் என்று பொருத்து இருந்து பார்ப்போம். அப்படி ஒரு வேளை இந்த படத்தின் இசை உலக தரம் என்றால், எப்படி ஏன் என்று தெரிவிப்பார்கள் என்றும் பார்ப்போம்.........

2 comments:

Anonymous said...

nanbar panimalar,

charuvirkku ilayaraja mel etho thanippatta kobam endru ninaikkiren.. pothuvaaga IR thaan thamilargalin isai mugam - thamilargalaiyum avargalin rasanaiyaiyum mattam thatta vendum endral IRin isaiyai mattam thattivittale pothum - ithai thaan charu seithu varugirar.

ungal katturai miga arumai - enakkum Avatar paarkum pothu ithe pondra unarchi thaan erpattathu
- Same pinch - :)

Selvakumaran

')) said...

செல்வகுமரன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சாருவிற்கு தான் எழுதுவது தான் சரி மற்றவைகள் எல்லாம் தவறு என்று எண்ணம். உதாரணமாக ஞானியை பற்றி அவதூராக எழுதியுள்ளார். அதிலே ஞானிக்கு பிடிக்கும் என்றால் அனைவருக்கும் பிடிக்கவேண்டும் என்று பொருளா என்று எல்லாம் கேட்டும் அதற்கு துணையாக காந்தியையும் இழுத்து எழுதியுள்ளார். சமீபத்தில் சாரு இரு விகட எழுத்தர் என்று குமுதத்தில் ஒருவர் எழுத போக, கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல், அதுவும் சம்பந்தமே இல்லாத பிரியமணியை எல்லாம் ஆபாசமாக விமர்சிர்த்து எழுதியுள்ளார் பார்க்கனும். அப்பா என்ன அடாவடி தனம். வடிவேல் நகைப்பாக சொல்வது போல் அடுத்தவனூக்கு வழிந்தால் அது தக்காளி சாசு, தனக்கு வழிந்தால் இரத்தம் என்ற பேர் வழி இவர்.