Sunday, December 27, 2009

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 3

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 2

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 1

உணவை தயாரிக்கும் தாணிய வகைகள் எல்லாம் விலையேறிய காலத்தில் அது எப்படி நீங்கள் கொடுக்கும் உணவு வைகளின் விலைகளில் மட்டும் மாற்றமே இல்லையே. அதுவும் இப்போது போட்டி போட்டுக்கொண்டு விலையை குறைத்தும் தரும் வேலைகளும் நடந்துக்கொண்டு வேறு இருக்கிறது. எப்படி இது சாத்தியமாகும்.

கடுமையான பொருளாதார நெருக்கடி ஒன்றும் சமாளிக்க முடியவில்லை என்றால் சிக்கன நடவடிக்கள் தான் மேற்கொள்ள முடியும் இப்படி சலுகைகளை அள்ளி வீச முடியாது. பிறகு எப்படி இந்த அமெரிக்க முதலாளிகளால் இப்படி செய்ய முடிந்தது.

இரண்டே இரண்டு வழிகளில் தான் இது சாத்தியமாக முடியும் ஒன்று, இது வரையில் இவர்கள் அடித்து வந்தது கொள்ளை இலாபமாக இருக்க வேண்டும், அல்லது இப்போது விலை குறைத்து கொடுக்கும் பொருளின் தரமோ மிகவும் மலிவான தரமாக இருக்கும். இவைகள் இரண்டையும் தவிர்த்து தேசபக்தியின் காரணமாக விலையை குறைத்து அமெரிக்காவிற்கு சேவை செய்கிறார்கள் என்று பொருள் அல்ல.

பிறகு அந்த நூடுல்சின் வீச்சத்தின் மர்மம் புலப்பட துவங்கியது. அடக்கடவுளே சீனர்களின் உணவு ஊழலுக்கு அளவே கிடையாது என்றது ஊரரிந்த இரகசியம். 2008ஆம் ஆண்டு இறுதியில் பால் மாவில் மக்லைனை கலந்து விற்றதில சீனக்குழந்தைகள் சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டு இறந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். அதை தொடர்ந்து சீனாவில் இருந்து எந்த விதமான பால் பொருட்களும் இனிமேல் வாங்குவது இல்லை என்று மற்ற நாடுகள் தடைவிதித்ததும் உங்களுக்கு நினைவு இருக்கலாம். இந்த பால் கலப்பு பொருள் கழிவறைகளை சுத்தம் செய்ய பயன்படும் ஒரு வேதிப்பொருள் என்றது தான் வேதணையிலும் வேதணையான செய்தி.

அப்படியானால் இந்த வீச்சம் கொண்ட நூடுல்சுகள் எதை கொண்டு தயாரிக்கப்படுகிறது. சீனத்தின் இரும்பு திரைக்கு பின்னால் நடக்கும் காரியங்கள் ஒருவரின் அறிவுக்கும் அறிவிக்கப்பட போவது இல்லை. ஆனால் என்னவாகத்தான் இருக்கும் என்று தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களும் சரி, மற்ற தன்னார்வ நிறுவனங்களும் சரி இந்த செய்கைகளில் ஒரு ஆய்வை நடத்தி இப்படி பட்ட பொருட்கள் எல்லாம் உண்ண கொடுக்கலாம், கொடுக்க கூட்டாது என்றும் இதுவரையில் அறிவிக்காமலும் இருப்பது தான் மிகவும் திகில் நிறைந்த மர்மமாகவே இருக்கிறது.......

0 comments: