பழையன கழிதலும் புதியன புகுதலும் புத்தாண்டாம் என்று சொன்ன நாட்களை மனதில் இத்தனை ஆண்டு காலம் வந்தோம்.
ஆனால் 2009 கொடுத்து இருக்கும் அழிவுக்கு அளவே இல்லை. மனித இனம் பார்த்திராத அவலம் கண்டு உலகமே வெட்கி தலை குனிந்த வருடமாக அல்லவா அமைந்தது இந்த ஆண்டு. எவ்வளவு ஏமாற்றங்கள். எவ்வளவு பெரிய துரோகம். மனித இனம் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்ததும். அதை அனைத்துலகம் கைகட்டி வேடிக்கை பார்த்த பிறகும் எப்படி நமக்கு எல்லாம் நல்ல உறக்கம் வரும்.
இனிமேல் என்ன என்ன செய்தாலும் அடைந்த இழப்புக்கு ஈடாகுமா அல்லது, அந்த இழப்புகளை சரி செய்ததா ஆகிவிடுமா.
காந்தி பிறந்த நாடும், புத்தன் அவதரித்த நாடும் செய்யும் காரியமா இந்த செய்கைகள். அன்பும் பண்பும் பயனும் அது என்று உலகுக்கு வழங்கிய தமிழர்களின் வாழ்கை இவ்வளவு மலிவா........
பக்கத்து மாநிலத்து மனிதர்கள் தண்ணீர் தர மறுத்த காலம் எல்லாம், உச்ச நீதிமன்றம் சொன்னாலும் கேளேன் என்றால் பிறகு எதற்கு சட்டமும் அதன் காவலர்களும்.
இந்த உரிமையை பாதுகாக்க முடியவில்லை பிறகு என்னதான் உனக்கு வேலை, இதிலே அரசு இது அது என்ற அலங்கார வார்த்தைகள்.............
இந்த ஆண்டு அல்ல, இன்னமும் எத்தனை ஆண்டுகள் ஓடினாலும் இனிமேல் எங்களுக்கு எல்லாம் புத்தாண்டும் இல்லை தீபாவளியும் இல்லை. என்றைகு எங்களுக்கு நீதி கிடைக்கின்றதோ அன்றைக்கு கொண்டாடி கொள்கின்றோம் இந்த நன்னாட்களை அது வரையில் எங்களது சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் நினைவு நாட்கள் மட்டுமே...............இவை இரண்டும்.....
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
1 comments:
தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html
Post a Comment