Sunday, December 27, 2009

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 2

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 1


பான்டா எக்சுபிரசு(Panda Express) அனைவருக்கும் தெரிந்த இன்னும் ஒரு அவசர உணவகம். சீன வகையை கொண்ட நிறுவனம். சீன வகைகள் என்றாலே இந்தியர்களுக்கு ஏன் உலகுக்கே நினைவுக்கு வருவது அவர்களுடைய நூடுல்சு(Noodles) உணவு தான்.

அதுவும் இந்த கடையின் சிறப்பு அசைவம் சாப்பிடும் மக்கள் மட்டும் அல்ல சைவம் சாப்பிடும் மக்களும் அதிகமாக இந்த நூடுசுவை வாங்கி சுவைக்க இந்த கடைக்கு வருவார்கள். இத்தணைக்கும் இந்த கடைகளில் கை துடைக்கும் காகிதம் இரண்டு கூட கொடுக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு கருமியர்களாக அவர்கள் இருந்தாலும் அந்த உணவின் சுவைக்காக மக்கள் கூட்டம் அங்கே அலை மோதும்.

ஆனால் கடந்த ஒரு வருடமாக இந்த பான்டாவின் நூடுல்சை சாப்பிடவே முடிவதில்லை. காரணம், அந்த நூடுல்சில் ஒரு வீச்சம் வருகிறது. சரி ஏதோ ஒரு இரண்டு நாட்கள் என்றால், இனி எப்பவும் அப்படி தான் வேண்டும் என்றால் வாங்கு இல்லை என்றால் ஓடிப்போ என்றும் இருக்கிறார்கள்.

என்ன இப்படி ஆகிவிட்டதே என்று மற்ற கடைகளில் வாங்கலாம் என்று ஊரில் இருக்கும் அனேக சீன உணவகங்களிலும் இதே நிலைமை தான். பிறகு தான் தெளிந்தது இது ஏதோ ஒரு நாடு தழுவிவ வேலையாக இருக்கும் போலும் என்று. அனேக தமிழக சீன உணவு இரசிகர்களுக்கு இது தெரிந்து இருக்கும் என்று நினைக்கின்றேன்.

2007ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க இடாலரின் வீழ்ச்சியின் துவக்கத்தில், கிழக்கத்திய நாடுகளும், தெற்காசிய நாடுகளும் அமெரிக்காவிற்கு இனிமேல் தாணியங்களை விற்பது இல்லை என்று அறிவித்தது இந்தியா உட்பட.

அதுவரையில் 11 முதல் 16 இடாலர்கள் வரை விற்று வந்த அரிசி சிப்பங்கள், அன்றைய தினத்தில் இருந்து 30 இடாலர்களை தொட்டது. அரிசியை தொடர்ந்து, பருப்பு முதல் அனைத்து இந்திய உணவு பொருட்களின் விலைகளும் தலைவிரித்து ஆடத்துவங்கியது.

அந்த திகதியில் இருந்து இன்றைய நாட்கள் வரை இது வரையில் விலை குறையவும் இல்லை குறைப்பதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை.

இந்திய உணவு பொருட்களுக்குத் தான் கட்டுப்பாடு அதனால் விலையேற்றம் ஆனால் மற்ற பொருட்களுக்கு ஒன்றும் குறை இல்லை என்று 2009ஆம் ஆண்டும் மத்தியில் வரையில் இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் எந்த ஒரு விலையேற்றமும் இல்லாமல் இருந்த அமெரிக்க உணவு பொருட்களுக்கு விலையை கூட்டினார்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில்.

மக்கள் நினைக்கலாம் இந்த விலையேற்றங்கள் ஒன்றும் ஒன்றுக்கு நூறு என்று எகிறவில்லையே பிறகு இதற்கு போய் ஏன் இவ்வளவு விளக்கங்களும் பக்கங்களும் என்று கேட்பது காதில் விழாமல் இல்லை. இங்கே தான் அமெரிக்க முதலாளிகளின் அசல் முகம் தெரிய தொடங்கியது......

0 comments: