Wednesday, September 3, 2008

சத்யம் – திரைவிமர்சனம்


ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் வாழ்க்கை பற்றிய படம் இது. துவக்கம் முதல் இறுதிவரை காட்சிக்கு காட்சி தடால் அடியாக படம் நகர்கிறது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தனே தண்டனைகளை கொடுப்பது தான் இனிமேல் தீர்வு என்று சாமி படத்தில் சொன்னதை தவறு என்று சொல்லும் விதமாக படம் அமைக்கப்பட்டு இருக்கிறது.


இந்த வகையில் வரும் அனைத்து படங்களிலும் நாயகன் நீதியை காப்பாற்ற தனது மகனையோ(தங்க பதக்கம்) அல்லது தம்பியையோ (வால்டர் வெற்றிவேல்) ,தகப்பனையோ (சாமி), நண்பனையோ(குருதி புணல், சட்டம், அஞ்சாதே), காதலியையோ ( காக்க காக்க , அனேக படங்கள்) இழந்து ஒரு எதிர்மறையான தாக்கத்தை கொடுப்பர். இந்த வகை படங்களில் நாயகன் தன்னுடைய இழப்பு எதுவும் இல்லாமல் சாத்தித்தாக காட்டும் படங்கள் அரிது (உன்னால் முடியும் தம்பி ஒரு சிறந்த உதாரணம், அதிலேயும் தனது இளமை காதலை இடை நிறுத்தியதாக வரும் என்றாலும் கடைசியில் கைகூடும், மொத்தத்தில் இழப்பு இல்லை).

இந்த விதி தமிழ் படங்களில் மட்டும் இல்லை, அனேக உலக மொழி படங்களிலும் சாதாரணமாக தோன்றும் ஒரு கதை அமைப்பு தான்.

இந்த படம் சட்டத்தை மீறாமல், சட்டத்தை காக்கமுடியும் என்று தீர்மானமாக சொன்னாலும். நீதியை காக்க மனிதன் எல்லாவற்றையும் இழக்க வேண்டும் என்ற வழமையான கதையமைப்பு கொண்டமைக்காக இயக்குனரை கோவித்துகொள்ளாமல் விடமுடியவில்லை.

தயவு செய்து அடுத்த படைப்புகளில் இதிலும் கவனம் கொள்ளவும்.

ஊடகங்களில் ஊதி ஊதி சொக்கப்பானையாக சொல்வதை போல் படத்தில் நீள நீளமான வசனங்கள் ஏதும் இல்லை. சட்டத்தின் மேல் காவலர்களுகே நம்பிக்கை இல்லை என்ற நிலை படத்தில் வரும் இடங்களில் நாயகன் திருப்பி கேள்விகளை கேட்கிறான். அந்த இடங்களை தான் ஊடகம் ஊது ஊது என்று ஊதி இருக்கிறது. உண்மையில் படத்தில் ஒன்றும் அப்படி இல்லை.


நாயகனின் தோற்றமும் சரி, படத்தில் நாயகனின் சாகச செயல்களாக வரும் இடங்களாக இருந்தாலும் சரி விசால் அழகாக தோன்றுகிறார். முன்னே சொன்ன அத்தனை படங்களிலும் வரும் காவலர்களாக வரும் கதா பாத்திரங்களின் மேல் வரும் மதிப்பு இந்த பாத்திரத்தின் மீதும் வருகிறது. இந்த வகையில் நாயகன் விசாலுக்கும், இயக்குனருக்கும் வெற்றி.

0 comments: