இந்த மூன்று படங்களும் வந்த வேகத்தில் லக்கியாரின் விமர்சனங்களும் வந்தது. இந்த மூன்று படங்களையும் நானும் பார்த்தேன். எனது பார்வையில் லக்கியாருக்கு எனது கேள்விகள் இங்கே.
தாம் தூம் படத்தை விமர்சிக்கையில் லக்கிக்யார் சொல்கிறார், அந்த படம் 1990இல் வந்த ரோசா படத்தை தான் தாம் தூமாக எடுத்து இருக்கிறார்கள் என்று.
இயக்குனரும், ஒளிபதிவாரும், மற்றும் நடிகனாகவும் இருந்த இசீவா இன்று நம்மோடு இல்லை, அமராகிவிட்டார். அவர் நாயகனாக நடித்துக்கொண்டு வந்த படம் தான் இந்த தாம் தூம் படம், இரசியாவில் படப்பிடிப்பில் இருக்கும் போது மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.
படத்தில் எந்த ஒரு இடத்திலும் இசீவாவின் நிழல் கூட இல்லை, அப்படி என்றால் இசீவா எடுத்து வைத்திருந்த பகுதிகளை முற்று முழுதாக அழித்துவிட்டு முதலில் இருந்து மறுபடியும் படமாக்கி இருக்கிறார்கள் என்று தான் பொருள். அதிலும் கூட இசீவாவின் படைப்பை தேவைக்கு ஏற்றார் போல் மாற்றியும் தான் படமாக்கி இருப்பதாக தெரிகிறது. காரணம், இரவி கதை முழுக்க அனைவரும் அலைகழிக்கும் ஒரு பாத்திரமாக வந்திருப்பதை வைத்து சொல்லலாம். அப்படி அலைகழிக்கப்படும் பாத்திரமாகவே படைக்கப்படும் பாத்திரத்தின் மேல் பார்ப்பவர்களுக்கு மனதை வருடும் பாத்திரமாக தான் படைக்கவேண்டும் என்றது இலக்கணம். காட்டாக சொல்ல மறந்த கதை, அழகி, வறுமையின் நிறம் சிகப்பு இப்படி அலைகழிப்பு நாயகன்களை கொண்ட படங்களை காட்டலாம்.
எந்த ஒரு படத்தையும் துவக்கும் முன்னர் முற்று முதலாக திரைகதையாங்கள் முடியும் முன்னர் யாரும் படத்தை துவக்குவது இல்லை. அதுவும் இப்போதும் இருக்கும் விலைவாசியில் ஒரு முழுமை பெறாத ஒரு திரைகதையாக்கத்துடன் பட பிடிப்புக்கு அதுவும் வெளி நாட்டு பட்பிடிப்புக்கெல்லாம் செல்வது நடக்கவே நடக்காத ஒன்று.
சரி அப்படி என்றால் இசீவாவின் கதையும் திரைக்கதையும் என்னவாகத்தான் இருந்திருக்க முடியும் என்றால் என்னுடைய கணிப்பில், THE SAINT என்ற ஒரு ஆங்கில படம் அந்த படத்தை தான் தமிழில் எடுக்க அவர் முனைந்திருக்க வேண்டும்.
அந்த படத்தின் கதை இது தான், ஒரு அனாதை சிறுவன், சுட்டிப்பையனான அவன் அடிக்கும் கொட்டங்களின் முடிவில் உடன் வசிக்கும் ஒரு சிறுமி (இவனுக்கு மிகவும் பிடித்தவள்) இறக்கிறாள். அன்றைக்கு விடுதியை விட்டு ஓடிய அவன் பின் நாளில் ஒரு மிக பெரிய திருடனாக வளர்கிறான்.
அவனிடம் இரசியாவின் ஒரு போக்கிரி பணக்காரன் ஒரு பெரும் தொகையை கொடுத்து அப்போது தான் வெளியான குறைந்த செலவிலும் மிக சிறிய இடத்திலும் அணு இனைப்பை உருவாக்கவும், அதன் மூலம் மின்சாரத்தை மிக சொர்ப்ப செலவில் பெறலாம் என்ற ஆராய்ச்சி இரகசியங்களை திருடிக்கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று பணிக்கிறார்.
ஆராய்சியின் இரகசியங்களை அந்த அழகு பதுமையான எலிசபத்து சூவிடம் இருந்து கைப்பற்ற நாயகன் பல கில்லாடி வேலைகளை செய்ய பற்பல மாறு வேடங்களை கொண்டு அடைகிறான்.
அந்த அழகு பதுமையை காதல் வசப்படுத்தும் முனைப்புகளில் அவனது பரிவிலும் வேடங்களிலும் தன்னை பரிகொடுக்கும் அவள் இரகசியங்களை பரிகொடுத்த பிறகு அவனிடம் சொல்வாள் என்னிடம் கேட்டிருந்தலே கொடுத்தே இருப்பேனே திருட வேண்டிய அவசியமே இருந்திருக்காதே என்ற வசனத்தில் வீழ்வான் நாயகன்.
அது வரை அக்கிரமங்களுக்கே துணையாக போனவன், அவள் இழந்ததை மீட்டுத்தரும் முயற்சியில் பல்வேறு இன்னல்களையும் சவால்களையும் அனாயசமாக எதிர்கொண்டும் சமாளிப்பது மிகவும் அழகாவும் அருமையாகவும் படமாக்கி இருப்பார்கள்.
தாம் தூம்மின் கதை என்ன, இதய அருவை சிகிச்சைக்கு ஒரு முற்றிலும் புதுமையான முறையை கொண்டு சாதனை நிகழ்திய நாயகன் இரசியா செல்கிறான் தனது ஆராச்சியை உலகறிய செய்யும் பொருட்டு. அப்போது சவால்களை மேற்கொள்ளும் பாத்திரமாக இசீவா இரசிய தெருக்கலில் அலையும் அதே கதையில் ஆக்கத்தில் வரும் திரைகதை சம்பவங்களின் பின்னனியில் எழுதி இயக்கி இருக்கவேண்டும். அந்த பாத்திரத்தின் சாகசங்களை விட திரைகதையின் வீச்சு மிகவும் அதிகமாக இருக்கும். அதற்கு என்ற நட்சத்திர முத்திரை பெற்ற நடிகன் எல்லாம் ஒன்றும் தேவை இல்லை என்று இசீவாவே நடிப்பதாக முடிவாகி இருக்க வேண்டும். மேலும் அசல் கதையின் நாயகன் திருடனாக வருவதால், அந்த திருடனாக நடிக்க எசு சே சூரியாக் கூட ஒத்துக்கொண்டு இருக்க மாட்டார்.
ஆக இசீவாவே நடிப்பதாக உருவாகி இருக்க வேண்டும் அந்த படம். படத்தில் இரவி இரசிய நகரின் நதியில் மூழ்கி தப்பிக்கும் காட்சி அசலில் ஒரு தியாக செயலாக வரும் ஒரு அருமையாக காட்சியை இங்கே சொதப்பலாக உப்பு சப்பு இல்லாமல் படமாக்கி இருப்பதை பார்க்கும் போது லக்கியார் போல் எனக்கும் எரிச்சலாகத்தான் இருக்கிறது.
அசல் படத்டின் இறுதியில் மற்றும் ஒரு இரசிய புரட்சி நடக்கும், அதை நாயகன் தலையிட்டு அதிபருக்கு சாதகமாக மாற்றி அந்த போக்கிரி பணக்காரனை மக்களுக்கு அடையாளம் காட்டுவாத அமையும். ஒரு வேளை இசீவா உயிருடன் இருந்திருந்தால், அந்த படத்தை அருமையாக தமிழில் கொடுத்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஆமாம் இதிலே லக்கியாருக்கு என்ன கேள்வி என்றால், இது இப்படி இருக்க இரோசா படம் தான் இது என்று எதை வைத்து முடிவு கட்டினீர் லக்கியாரே.
உங்கள் கூற்று உண்மை என்றால் அப்போ செயம் கொண்டான் படம் என்ன அரங்கேற்ற வேளையின் கதையின் பகுதியும், சரோசா அந்த தொழிலதிபரின் பெண்ணை கடத்தும் படமாக வந்தது என்று சொல்வீர்கள் போலும். குண்டு ஒன்னு வச்சிருக்கேன் வரும் இடத்தில் இங்கேயும் ஒரு நகச்சுவை பாட்டு வருதை கவனிக்கவும், பதில் சொல்லவும் லக்கியாரே, பதில் சொல்லவும்....
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
1 comments:
நன்றி லக்கியாரே, தெரியாமல் உங்களது பின்னூட்டத்தை விலக்கிவிட்டேன் மன்னிக்கவும்......
Post a Comment