Tuesday, August 19, 2008

பாக்கிட்தான் ஒரு மக்களாட்சி நாடுதான், மேலதிக விளக்கங்களுக்கு அமெரிக்காவை கேளுங்கள்.

ஒருவர் ஆட்சியை விட்டு சென்றால் நேராக துபைக்கு சென்று தான் வாழவும் அரசியல் நடத்தவும் முடியும் என்ற நிலை அந்த நாட்டில். அந்த நாடுதான் அமெரிக்கா உலகத்தில் மக்களாட்சியை மீள் கொள்ள போராடும் போராட்டத்தில் ஆசியாவில் நண்பன்.

இந்த பொருப்பற்ற நாட்டினிடம் அணு ஆயுதம் இருப்பது குழந்தையின் கையில் கிடைத்த கூர் வாளை போல் ஆகையால் அதை ஐ நா பெற்றுக்கொண்டு நிர்வகிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கும், அந்த நாட்டின் சர்வதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வரவும் பொருளாதார தடையை கொண்டு வரவேண்டும் என்று இந்தியா ஐ நா விடம் கோரிய போது. கோபி அன்னன் சொன்னார்.

மிகை அதிக பொருளாதார நெருக்கடிக்கு தள்ளினால் அந்த நாட்டின் அணு ஆயுதம் தீவிரவாதிகளின் கைக்கு சென்றுவிடும் அதனால் முடியாது என்றார். அப்படி இருந்தும் அமெரிக்கா சதாமின் மீது எடுத்த நடவைக்கைகளில் ஒரு அரை சதவிகிதம் கூட இந்த நாட்டின் மேல் எடுக்கமல் இருப்பதர்க்கு காரணம் அவர்கள் இந்தியர்கள் போல் அதிகம் சாப்பிடுவதில்லை என்ற காரணம் போலும்.....

பாக்கிட்தானின் அணு ஆயுதம் அமெரிக்காவை தாக்காமல் இருந்தால் சரிதான்.....

0 comments: