Friday, May 5, 2017

நடிகை சபிதா ராய் நிறுத்து இதோடு நிறுத்து நடிகை சபிதா ராயின் தன்னிலை விளக்கத்தை அனேகமாக பார்த்து இருப்பீர்கள்.

அதுவும் நடிகையாச்சே பார்க்காமலா விட்டிருப்பீர்கள்....

பார்த்த கையோடு தற்குறிப்பேற்றி தனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பியும் இருப்பீர்கள். இந்த வன்மம் எல்லாம் தெரியாத மக்கள் அவர்கள் போக்கிற்கு யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பகிருவீர்கள்.

எங்கு எல்லாம் வீரத்தை எதிர்கொள்ளவும் வெல்லவும் முடியவில்லையோ அங்கே எல்லாம் சூழ்ச்சியும் துரோகமும் தான் வெல்லும்.

அந்த மாதிரியான வெற்றியில் வீழ்தியவர்களை விட அதிக பங்காற்றியவர்கள் சமூகம் தான் என்றது கசப்பான உண்மை.

எந்த ஒரு தனி நபரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்கும் உரிமை ஒருவருக்கும் இல்லை. சட்டங்களும் சட்டக்காப்பாளர்களுக்கு அந்த பணியை நாட்டிலும் இராணுவத்திற்கு எல்லையிலும் கொடுத்துள்ளார்கள். அவர்கள்: அவர்களது பணிகளை செய்யட்டும் விட்டு விடுங்கள்.

தனக்கு தெரியாத செய்திகளை அருகில் இருந்து பார்த்தவர் போல் சொல்லும் கதைவாகள் உலகில் அதிகம் அதுவும் வக்கிரம் படிந்த கதையாக இருந்தால் ஏன் என்ன என்று கேட்பவர்கள் கேள்வி கேட்பது இல்லை.

ஏன் என்றால் கேட்ப்பவனுக்கு அடுத்து என்ன நடந்தது என்றதில் தான் கவனம். அட முகம் தெரியாதவரை பற்றி இப்படி எல்லாம் பேசுகிறார்களே அதட்டுவோம் என்ற எண்ணமோ துணிவோ அவர்களுக்கு இருக்காது.

காரணம் அவளை ஆதரிக்க போய் என்னையும் நீ அப்படியா என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்ற பயம் கேட்பவர்களுக்கு.

பாதிக்கப்பட்டவரை நமக்கு தெரியாது என்னையும் அவருக்கு தெரியாது ஆனால் அவருக்கு ஆதரவாக பேசி வாங்கிக்கட்டிக்கொள்ளும் நபர் நமக்கு நன்றாக தெரியும். அது மட்டும் இல்லாது நம்மை பற்றி வீட்டு விலாசம் முதல் அலை பேசி எண் வரை கொடுத்து இல்ல வதந்திய பரப்புவார் என்ற பயம்.

அடுத்தவர் வீட்டு பிள்ளைகள் என்றால் நமக்கு எல்லாம் கிள்ளுக்கீரை என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம் எழுதலாம் சித்தரிக்கலாம்.

இன்னும் கொஞ்ச நாளில் சபிதா எங்கே ஆதாரம் காட்டு என்று சொன்னவைகளை காட்டி நான் தான் சாட்சி என்று ஒரு 3 நபர்கள் வந்து இதே போல் ஒரு தன்னிலை விளக்கம் கூட வெளியிடலாம்.

இதுவே உங்களுடன் படித்த தோழியாக இருந்தால் என்ன செய்வீர்கள் அல்லது அன்றாடம் பார்க்கும் பக்கத்து வீட்டு பெண்ணாக இருந்தால் என்ன செய்வீர்கள். இல்லை உங்கள் வீட்டு பெண்ணாக இருந்து இருந்தால் என்ன செய்வீர்கள்.

முதல்ல உள்ளே போ என்று சொல்வீர்கள் பிறகு தகறறு செய்பவனை விரட்டி அடிப்பீர்கள் ஆனால் அடுத்தவர் வீட்டு பெண்ணாக இருந்தால் விளம்பர படுத்துவீர்கள்.

என்ன ஆண்மை மிக்க சமுதாயம் இந்த தமிழகம், அடே வீரர்களா பேசாமல் நீங்கள் எல்லாம் இனி மாடு மேய்க்க போகலாம் உங்களுக்கு எல்லாம் படிப்பு எதற்கு. என்ன படிச்சீங்க இது வரையில் நீ கற்றுக்கொண்ட கல்வி இதை தான் போதித்தா.......

சபிதா ராய் இதோடு நிறுத்த வேண்டும், அவமானமாக நினைத்து அழுவதும். அவரை தவறாக நினைப்பவர்களுக்காக தன்னிலை விளக்கம் கொடுப்பதையும் நிறுத்தனும்.

நீ இப்படி கலங்க வேண்டும் என்று தான் அவர்கள் விரும்பினார்கள் அவர்கள் எதிர்பார்ப்பதை நடத்தி அவர்களை மகிழ்விப்பதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தன்னை நம்பாத நட்பு கூட பின்னாளில் வெறும் சுமை தான் சகோ விட்டு தள்ளுங்கள், கொஞ்சம் அமைதி கொள்ளுங்கள் பிறகு உங்களுக்கே புரியும் இந்த தன்னிலை விளக்கங்கள் எல்லாம் தேவையே இல்லை என்று.

0 comments: