Tuesday, May 30, 2017

பீட்டாவும் காகித புலியும் மாட்டின் மீது பாய்கின்றது -- 3 ஆண்டு சாதனைகள் பற்றி கேட்ட மோடி பற்றி மக்கள் கழுவி கழுவி ஊற்றி இருப்பார்கள்

சென்ற வாரம் டிசிட்டல் இந்தியாவில் பாசக சாதித்ததும் இன்னும் சாதிக்க வேண்டியவைகளையும் பற்றியும் தெரிவிக்கும்மாறு நாள்ளிதழ்களில் செய்தியை அனைவரும் கண்டு இருப்போம்.

ஒரு வாரம் ஆகியும் மக்கள் என்ன சொன்னார்கள் என்ற விபரம் வெளிவர மறுக்கிறது என்றால் பணமதிப்பு இழப்பில் கள்ள மௌனம் சாதித்த பாசகவின் நோக்கமும் விளவும் என்ன என்றது வெளிப்படையாக மக்களுக்கு தெரிந்தது தான்.

வந்த நாள் முதல் இந்த நாள் வரை வெறும் காகித அறிக்கையிலும் முதலாளிகளின் ஏவல்களை ஏற்று நடத்தும் ஏவல் நாயக அவர்கள் தூக்கி எறியும் குச்சியை ஓடிச்சென்று பொறுக்கி கொண்டுவரும் பணியை மட்டுமே செவ்வன செய்து வரும் பாசக அரசு. 3 ஆண்டு சாதனைகளை பற்றி கட்டுரை வரைக என்று கேட்டதற்கு மக்கள் அனேகமாக கழுவி கழுவி ஊற்றி இருப்பார்கள்.

வெளியில் சொன்னால் வெட்க கேடு ஆகையால் ஆராய்ச்சியின் முடிவுகளை வெளியிடுவதற்கு பதில் இந்தியர்கள் யாரும் இனி இந்தியாவில் தயாராகும் பாலை குடிக்க கூடாது என்று ஆணையிட்டால் ஓரிரு வாரங்கள் சிற்சில போராட்டங்களையும், சமூக வலை தளங்களிலும் எழுதிவிட்டு போவார்கள். 3 ஆண்டு சாதனைகளை பற்றி அரவே மறந்து போவார்கள் என்று இம்சை அரசனுக்கு ஆலோசனை வழங்கி இருப்பார்கள் போலும்.

பாசகவின் காகித அரசு புலி தெற்கே மாட்டின் மீதும் வடக்கே மற்ற விலங்குகள் மீதும் பாய்ந்து இருக்கிறது. இந்த அழகில் உணவுக்கு தடை விதிக்கவில்லை ஆனால் தொழிழை மட்டும் தான் முடக்கியுள்ளோம் என்று பெருமை பட விவாதங்களில் சொல்கிறார்கள் இந்த இழி மக்கள்.

இனி அதாணி மற்றும் அம்பாணிகளின் கடைகளிலும் பாபா இராம்தேவனின் கடைகளிலும் மாட்டு சிறு நீருக்கு அருகிலேயே சுத்தமான, தரமான, உலகதரம் வாய்ந்த அக்மார்க் மாட்டிறைச்சி என்று ஏ1 வகை மாட்டு இறைச்சியை சாப்பிட வைத்து வகை தொகை இல்லாமல் நாட்டில் சர்க்கரை நோயை பரப்பி விடுவதாக திட்டம்.

முதலில் தமிழ் நாட்டில் எப்படி எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், அதற்கு ஒன்றும் சொல்லாமல் விட்டால் எவ்வளவு மக்கள் திரளுகிறார்கள், பிறகு ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அடித்தால் பிறகு என்ன என்ன செய்கிறார்கள். உதவிக்கு வரும் மக்களை தீயிட்டு கொளுத்தினால் என்ன என்ன எதிர்ப்புகள் எல்லாம் வருகின்றது. இதில் என்ன என்ன கட்சிகள் எல்லாம் என்ன என்ன நடவடிக்கையில் ஈடுபடுகின்றது என்று கணக்குகளை போட்ட காகித அரசு தற்பொழுது இப்படி ஒரு சர்க்கரை நோய் தாக்குதலை தொடுத்து இருக்கின்றது. பிறகு ஏழை மக்களின் சர்கரை நோய் துக் யோசனா என்று ஒரு திட்டம் தீட்டி அந்த பணமும் நேரடியாக அம்பாணிக்கும் அதாணிக்கும் கொண்டு கொடுக்க வழி வகுப்பார்கள் இந்த ஏவல் அரசு.

மக்கள் நீதிமன்றம் சென்று காகித அரசு இப்படி ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. இவர்களின் டிசிட்டல் இந்தியாவில் எது எங்கே போகின்றது என்று அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம் ஆகையால் ஒன்று அவர்களை ஆனையை திரும்ப பெற சொல்லுங்கள் இல்லையேல் எங்களது மாட்டை என்ன விலைக்கு விற்போமோ அந்த விலைக்கு எங்களிடம் அரசே வாங்க ஏற்பாடு செய்ய சொல்லுங்கள். மேலும் நாட்டில் இருக்கும் மாடுகளை இறைச்சிகாக பயன்படுத்த கூடாது என்றால் பிறகு உணவின் தேவையை எப்படி எல்லாம் பூர்த்தி செய்ய காகித அரசு தயாராக இருக்கிறது என்று விளக்க சொல்லுங்கள் என்றும் வழக்கு தொடுக்க வேண்டும்.

ஒரு முறை 2000 நோட்டுகளை கையில் ஏந்தி சில்லரை இல்லாமல் அலைந்தது போதும் மறுமுறையும் இந்த டிசிட்டல் இந்தியாவிற்காகவும் பீட்டாவிற்காகவும் அலைய முடியாது என்று மக்கள் இந்தியா முழுவதும் எதிர்ப்பது மட்டும் இல்லாது, பீட்டாவையும் அதன் இந்திய கிளைகளையும் நேராக பாக்கிட்தானுக்கு எடுத்து போக சொல்ல வேண்டும்.

உங்களை யாருயா 3 ஆண்டு சாதனைகளை எல்லாம் கேட்டக சொன்னார்கள் பிறகு இப்படி வாங்கி கட்டிக்க சொன்னார்கள். தமிழகத்திலும் தான் காகித அரசு இருக்கின்றது என்றைக்காவது 100 சாதனை, 110 நாள் சாதனை என்று எப்போவாத தம்பட்டம் அடித்து பார்த்து இருக்கிறீர்கள். அவர்களை போல் கொள்ளை அடித்தீர்களா மூட்டை கட்டினீர்களா என்று இருப்பதை விடுத்து ஏன் இந்த தேவை இல்லாத பந்தா எல்லாம்.

அதாணியும் அம்பாணியும் தூக்கி எறிந்த கூச்சிகளை எல்லாம் இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா என்று சென்று கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவர்கள் எறியும் எலும்பு துண்டை எடுத்துக்கொண்டு 35 இலட்சத்தில் உள்ளாடையும் 1 கோடியில் செருப்பும் என்று பந்தா காட்டி திரிவதை விட்டு விட்டு ஏன் இப்படி வாங்கிக்கட்டி கொள்ள வேண்டும் பிறகு வெளியில் சிரித்துக்கொண்டே இப்படி வயிர் எரியனும்.

0 comments: