Friday, December 18, 2015

இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா - பாகம் 2

திருமணம் பேசிய நாட்களில் இருந்து இந்த நிகழ்வு வரை நான் செய்யும் எல்லா செய்கைகளையும் ஊக்குவிக்கும் இவன் இது வரை எந்த ஒரு விமர்சனமும் வைக்காமல் இருப்பதை நண்பர்களிடம் பகிர்ந்த போது ஒட்டு மொத்த குரலில் அவர்கள் சொன்னது, அனாவசியாமக சந்தேகப்பட்டு அவனை இழந்துவிடாதே என்று.

மனது அப்பவே சொன்னது ஏதோ சரி இல்லை என்று, என்னவாக இருக்கும் என்று யோசிக்க நினைத்து ஆழ்ந்த சிந்தையில் இருக்கும் போது என்ன யோசனை என்று கேட்பதும். உடம்பு சரி இல்லையா என்று கேட்டுவிட்டதோடு இல்லாமல் கையில் காப்பியுடன் வரும் அந்த பொழுதுகளில் அந்த சிந்தைகள் மீண்டும் மூட்டை கட்டப்பட்டு பரணில் ஏற்றி வைத்துவிட்டு நிம்மதியாக தூங்க சென்றது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

என்னைவிட மிகவும் சுமாராக படித்தவனாக இருந்தாலும் பரவாயில்லை, என்னை விட குறைவான சம்பளம். குடும்ப சொத்து எல்லாம் இவன் வந்து சம்பாத்திதது மட்டும் தான். விரல் விட்டு எண்ணிவிட கூடிய அளவிதான் மிக குறைந்த சொந்தங்கள் இப்படி ஒன்றொன்றாக அம்மாவும் அப்பாவும் அடுக்கும் போது, நான் வாழப்போது அவனோடும் மட்டும் தான அப்பா, மற்றவைகளை பற்றி எனக்கு என்ன என்று அல்லவா கேட்டேன்.........

ஒவ்வொரு முதல் தேதியிலும் எவ்வளவு ஆசையாக சம்பள கணக்கை காட்ட முற்படும் போதும் இது உன்னுடைய உழைப்பு அது இவ்வளவு அவ்வளவு என்று கணக்கு பார்க்க எனக்கு பிடிக்கவில்லை என்று முதல் நாள் முதல் இன்றைக்கு வரை என்ன சம்பாதிக்கின்றேன் என்ன சேர்த்து வைத்து இருக்கிறேன் என்று கூட கேட்க்காமல் விட்டு வைத்ததின் பின் புலம் இப்படி ஒரு இருட்டு பக்கமாக இருக்கும் என்று யாருக்கேனும் கற்பனையாவது தோன்றுமா என்ன....

ஒவ்வொரு முறை அலுவலகத்தில் எனக்கு பதவி உயர்வு வந்த போது எல்லாம், என்னை விட மிகவும் மகிழ்ச்சி அடைந்தவன் அவன் தான். அதை பார்த்து அவன் அடந்த சந்தோசத்தை பார்த்து வியந்து மகிழ்ந்தது எல்லாம் இந்த துயர முடிவை நோக்கி என்னை நகர்த்த  போட்ட திட்டத்தின் பகுதி என்று இன்றைக்கு விளங்கும் போது எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்தேனே என்று மிகவும் வெட்கமாக இருக்கிறது.

தனிமையில் மணிகணக்கில் இணையத்தில் மூழ்கி கிடப்பதும், நேரம் காலம் பார்க்காமல் வரும் அழைப்புகளை ஏற்றுக்கொண்டு ஊர் ஊராக பயணிக்கும் போது எல்லாம் ஒரு வேளை இதுக்காகத்தான் என்று சிறிதும் தோன்றவில்லையே, ஏன் இப்படி ஒரு ஏமாளியாக ஆனேன். இந்த சாதாரண அறிவுக்கூட எனக்கு இல்லாமல் போனது எனது தகுதியா இல்லை அறிவின்மையா.......

எனது அலுவலாக எங்கெங்கெல்லாம் சென்று வந்தேன், எத்தனை நாட்கள் வேலையே கதி என்று இருந்துவிட்டு வந்து இருக்கிறேன். ஒரு நாளேனும் கூப்பிட்டு என்ன கூப்பிடவே இல்லையே, இப்போ எங்கே இருக்கிற, எங்கே போகிற மாலையில் எங்கே எப்போ அறைக்கு வந்த என்று எல்லாம் கேட்காமல் இருக்கும் செய்கைகளை நினைத்து நினைத்து இவனை எப்படி மனதுக்குள் புகழ்ந்தும் எனக்கு போல் யாருக்கு கிடைக்கும் என்று இருந்த இறுமாப்புக்கு சரியான பாடத்தை விதி சொல்லிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

தொடரும்.....

இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா

என்னை ஏன் அவனுக்கு பிடிக்கவில்லை.......