Friday, December 18, 2015

இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா

எல்லோரையும் போல் தான் எனக்கும் தான் திருமணம் ஆனது. படிப்பு முடிந்த கையுடன் வேலை கை நிறைய சம்பளம், புதிய வாழ்க்கை, புதிய நண்பர்கள் என்று விரிந்த வாழ்க்கை கடைசியில் இப்படியா வந்து முடியனும்.......

எப்படி இருந்த இவன் இப்படி மாறிப்போனான், அவனா இப்படி என்றால் எனது சொந்தங்களும் சரி அல்லது நண்பர்களும் சரி, இல்லை அவனது சொந்தமும் நண்பர்களும் அப்படி தான் அதிசயப்பட்டு போவார்கள்.

ஆணழகன் என்று இல்லாவிட்டாலும் வசிகரிக்கும் முகமும் அதில் மின்னி மறையும் அந்த புன்னகையும் கொண்டு தான் இத்தனை கொடூரங்களையும் மறைத்து வைத்து இருந்தானோ...

நிச்சயிக்கப்பட்ட பின்னும் திருமணத்திற்கு பின்னும் என்ன என்ன ஆசை வார்த்தைகளை பேசியவனா இவன்?..... இன்றைக்கு இப்படி இந்த கொடூரத்தை நிகழ்த்தி இருக்கிறான்.

எனக்கு தைரியமும், சுய சிந்தனையையும், சுய மரியாதையும் கொண்ட பெண்களை தான் பிடிக்கும் என்று அவன் சொல்லும் போதே வேறு கோணத்தில் சிந்தித்து இருந்தால் விளையு இதுவாகத்தான் இருக்கும் என்று கணித்து முன்பே ஏதாவது செய்து வாழ்க்கையை காப்பாற்றிக்கொண்டு இருக்கலாம். இப்படி கடைசியில் கழுத்து அறுத்துவிட்டானே படுபாவி....

இவனுடைய அம்மா அப்பா எல்லா என்ன என்ன எல்லாம் ஆசையாய் பேசினார்கள், அவனுக்கு என்ன விட அவன் அம்மாவை தான் அதிகம் பிடிக்கும், சரியான அம்மா புள்ளம்மா அவன் என்று மாமா சொன்ன போது இருந்த நிம்மதியும் சந்தோசமும் சுத்த ஏமாற்று வேலையா...... இல்ல அவர்களுக்கு இவனை பற்றி எதுவுமே தெரியாம மறைச்சு தான் வச்சு இருந்தான ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

இது எல்லாம் தெரிஞ்ச அம்மா அப்பா முகத்தில் எப்படி நான் முழிப்பேன். கொஞ்சம் பொருமையா இருன்னு அப்பா அப்பவே சொன்னாங்க, இவன் பெண்பார்த்துவிட்டு போன நாளில் இருந்து அனுப்பிய குறுஞ்செய்திகளும் மின்னஞ்சல்களும் அவனது அந்த வசீகர புன்னகையை மனதுக்குள் நொடிக்கு ஆயிரம் முறை மின்ன வைத்த மாயம் என்னவோ, அவைகளை எல்லாம் உண்மை என்று நம்பிதானே அப்பாவையும் அம்மாவையும் சம்மதிக்க வைத்தேன்.

கடைசியில்ல என்னை முட்டாளாக்கிவிட்டு போய்விட்டானே......எப்படி முழிப்பேன் அப்பா அம்மா முகத்தில் எனது மனது சொல்கிறது என்று சொன்ன வார்த்தைகளை மறுமுறை எனக்கே சொல்லி காண்பித்தால் நான்டுக்கொண்டு சாகதான் வேண்டும்........

இவனுக்கு தான் இப்படி என்று முன்னமே தெரிந்து தான் வைத்து இருந்தான் என்று என்ன தைரியம் இருந்தால் சொல்வான் என் முன்னால் நின்று.

கேட்ட அதிர்ச்சியில் அவனை திட்டவோ கோபப்படவோ கூட மனம் எழாமல் மௌனமாகவே இருந்ததை அதே வசீகர புன்னகையோடு முடித்தானே என்ன செய்வது, இவன் எல்லாம் நன்றாக..... இருப்பானா......

தொடரும்......

0 comments: