Friday, July 24, 2015

ஷர்மிலி மிஸ் - பாசம் இவ்வளவு ஆழமா

குழந்தைகளை அடிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது எதுவாக இருந்தாலும் எங்ககிட்ட சொல்லுங்க துவங்கி இன்னமும் என்ன என்ன வடிவங்களில் வரவேண்டுமோ அவ்வளவு வடிவங்களில் வந்துக்கொண்டு இருக்கிறது.

பின்னூட்டம் இடும் அனைவரக்கும் அந்த ஷர்மிலி மிஸ்ஸுடன் பேசி பழகியது போல் அப்படி ஒரு உரிமையுடன் பேசவும் எழுதவும் செய்கிறார்கள்.

அவர்களின் குழந்தையின் மிஸ் மட்டுமா அவர், அவரவர் வாழ்க்கையிலும் இது போல் ஒரு ஷர்மிலி மிஸ் இருப்பதே அதற்கு காரணமாக இருக்கும்.

அந்த சின்ன வயதில் விவரம் தெரியாத, வீட்டையும் அம்மாவையும்  மட்டுமே தெரிந்த நமக்கு அன்னைக்கு அடுத்து அதிக நேரம் செலவிட்டது இந்த ஷர்மிலி மிஸ்ஸுடன் தானாக இருந்து இருக்கும். என்ன பெயரும் ஊரும் தான் வித்தியாசமாக இருந்து இருக்கும். மற்றபடி இந்த கதைகளில் கொண்டாடபடும் அந்த ஷர்மிலி மிஸ்ஸாக அனைத்து மிஸ்களும் வாழ்கிறார்கள்.

இவர்களுக்கு இது வேலை மட்டும் இல்லை அதையும் தாண்டி ஒரு அரவணைப்பு இருக்கும் இவர்களிடம். என்ன என்று அன்புடனும் என்ன்ன என்று அன்னை காட்டும் அதே கண்டிப்பை அழகாக காட்ட தெரிந்தவர்கள். அன்றைக்கு முதல் முதலில் உலகை நமக்கு எல்லாம் அறிமுகபடுத்திய ஆசிரியைகள் இவர்கள்.

எத்தனை ஆண்டுகள் ஆன போதும் அந்த சின்ன வயதில் பார்த்தது போல் உரிமையுடனும் அவர்கள் நம்மை விசாரிப்பதும், அவர்களை பார்த்துவிட்டு வந்து நேடு நேரம் ஆனபின்பும் அவர்களை பற்றியே நினைத்துக்கொண்டே இருப்பதும் நாம் பெற்ற வரம் என்று தான் சொல்லவேண்டும்.

இந்த உணர்விற்கு தண்ணீர் ஊற்றி உயிர் ஊட்டிய பதிவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி........

வாழ்க வளர்க அந்த ஆசிரியைகளும் அவர்களது தன்னலம் அற்ற தொண்டும்........

3 comments:

')) said...

மறக்க முடியாத குரு ஒவ்வொருத்தரின் வாழ்விலும் உண்டு...

')) said...

உண்மைதான் என் வாழ்விலும் மறக்க முடியாத குரு இருந்தார்.

')) said...

சரியாக சொன்னீர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு ஷர்மிலி மிஸ்இடம் பெற்றிருப்பார்.
நான் குழந்தையின் பார்வையில் இருந்து எழுதினேன்.