Friday, July 17, 2015

மெல்லிசை மன்னர் - அமைதியும் நிம்மதியுமாய் நிறைந்து இருப்பவர் என்றைகும்

முதலில் அவரின் மறைவுக்கு பிரிந்து தவிக்கும் உறவுகளுக்கு நமது இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து தொடருவோம்.

இன்றைக்கு அல்ல கடந்த 30 ஆண்டுகளாக இரவின் அமைதியை நிம்மதியான தாலாட்டாய் மாற்றி அமைத்த அவரது இசை ஈடில்ல இசை. அந்த தாலாட்டு அன்னைக்கு பிறகு கிடைக்கின்ற தாலாட்டு.

நேற்றைய போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை என்றதின் நீண்ட வரலாறு தான் அவருடைய தாலாட்டுகள் காட்டுகிற கால கண்ணாடி.

ஒவ்வோரு பாடலும் ஒவ்வொரு நினைவலையை ஆழ் மனதுக்குள் இருந்து கிளரி எடுத்து சில சமயம் சோகமாகவும், இளமை நிகழ்வுகலை நினைவுபடுத்தியும், எதிர்கால கனவுகளையும் என்று என்றைக்கும் பரிணாமித்து வரும் பாடல்கள்.

இன்றைக்கு இருக்கும் புதிய வாத்திய கருவிகளோ பதிவுமுறைகளோ இல்லாத நாட்களில் வெறும் மெட்டையும், வார்த்தையும், குரல்களை மட்டும் வைத்து அசத்து அசத்து என்று அசத்திய அசாத்தியமானவர்.

எண்ணிக்கைகளுக்குள் அடங்கிவிடும் எண்ணிகயில் இருந்தால் இது அது என்று தொகுத்து எழுதலாம். பட்டியலிட ஆரம்புத்தால் எதை எடுப்பது எதைவிடுப்பது என்று யோசிக்கவே ஆண்டுகள் ஆகிவிடும் ஆகவே அந்த வேலையை நிறுத்திவிடுவோம்.

கருப்பு வெள்ளையில் துவங்கி, மன்னர்கள் கதைகளில் இருந்து வண்ணத்தில் 90கள் வரையில் கேட்போருக்கு என்று அள்ளிக்கொடுத்துக்கொண்டே இருந்த மன்னர்.

இவரின் இசையின் தாக்கம் இன்னமும் ஒரு 3 தலைமுறைக்காவது இருக்கும். வானொலியும் தொலைகாட்சிகளும் தனது இரவு சேவையே இவரின் பாடல்களை பெரும்பாலும் நிறப்பித்தான் பொழுதை ஓட்டுகிறது.

இரவு வந்துவிட்டாலே தூக்கத்தை கெடுக்காவண்ணம் பாடல்கள் வேண்டும் என்றால் அது இவரது பாடல்களாகத்தான் இருக்கும். தமிழர்களின் இரவின் அமைதியாகவும் நிம்மதியுமாய் என்றைக்கும் நிறைத்து இருப்பவர். அவரின் புகழ் வாழ்க, இறைவனிடம் சேர்ந்து அவரது ஆத்துமா அமைதியடையட்டும்.......

4 comments:

')) said...

------இன்றைக்கு இருக்கும் புதிய வாத்திய கருவிகளோ பதிவுமுறைகளோ இல்லாத நாட்களில் வெறும் மெட்டையும், வார்த்தைகளை, குரல்களை மட்டும் வைத்து அசத்து அசத்து என்று அசத்திய அசாத்தியமானவர்.---

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். அதுதான் உண்மையும் கூட.

-----எண்ணிக்கைகளுக்குள் அடங்கிவிடும் எண்ணிகயில் இருந்தால் இது அது என்று தொகுத்து எழுதலாம். பட்டியலிட ஆரம்புத்தால் எதை எடுப்பது எதைவிடுப்பது என்று யோசிக்கவே ஆண்டுகள் ஆகிவிடும்----

நிஜம். அதுதான் எம் எஸ் வி யின் படைப்புத் திறன்.

----இரவு வந்துவிட்டாலே தூக்கத்தை கொடுக்காவண்ணம் பாடல்கள் வேண்டும் என்றால் அது இவரது பாடல்களாகத்தான் இருக்கும். ----

நல்ல கருத்து. கொடுக்கா வண்ணம் என்பது கெடுக்க வண்ணம் என்றிருக்க வேண்டும்.. நீங்கள் அதைத்தான் சொல்ல நினைத்திருக்கிறீர்கள் என்பது என் எண்ணம்.

')) said...

நன்றி காரிகன் சுட்டியமைக்கும் கருத்துக்கும், திருத்திவிட்டேன்.

')) said...

எனக்கு எஸ்பிபியின் பழைய பாடல்கள் அனைத்தும் பிடிக்கும், அவற்றுள் பெரும்பாலனவை எம்எஸ்வியின் இசை. மிகச் சிறந்த இசை கலைஞர், ராசா ரஹ்மான் ரசிக சண்டையில் தமிழர்கள் எம்எஸ்வியை மறந்தே போய்விட்டு இப்பொழுது ஒப்பாறி வைக்கின்றனர்

')) said...

என்ன கோவி சௌக்கியமா, நீண்ட நாட்களா ஆளையே காணோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.