Tuesday, April 28, 2015

ஓ காதல் கண்மணி - மணிரத்தினம் மறுபடியும் தனது பாணியில் The Notebook

The Notebook

இதற்கு முன்பு எழுதிய விமர்சனங்கள் போல் மணிரத்தினத்தின் படம் இது வரையில் அவராக உருவாக்கிய படங்களாகவே இல்லை போலும் இதோ ஓகே கண்மணியும் அந்த பட்டியலில் சேர்கிறது.

மணியின் படங்கள் என்றால் உயிர், அவரை போல் ஒருவருக்கும் படம் எடுக்க வராது என்று எல்லாம் இருக்கும் இரசிகர்கள் இந்துடன் விடைபெற்றுக்கொள்ளவும். உண்மையில் என்ன என்று தெரிந்துக்கொள்ள விரும்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும்.

மேலோட்டமாக பார்த்தால் இந்த படத்துக்கும் அந்த படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று சாதாரணமாக கேட்பார்கள்.

மூலத்தின் கதையும் திரைகதையும் இது தான்

ஒரு வயதானவர் ஒரு வயதான பெண்ணிடம் தினமும் கதை படித்துக்காட்டுவார். அப்படி படிக்கப்படும் கதைகள் அந்த பெண்ணின் ஆழ்மனதில் பொதிந்துகிடக்கும் நினைவுகளை சில சந்தர்பங்களில் வெளிகொணரும். அப்படி நினைவு வரும் சமயங்களில் அந்த ஆண் தான், தான் மாய்ந்து மாய்ந்து காதலித்த காதலன் பிற்காலத்தில் தனகுள் வந்த நல பாதிப்பால் எல்லாமே மறந்து போய்விடுகிறது என்று அவளுக்கு தெரியவரும்.

அப்படி வரும் நினைவுகள் ஒரு சில நொடிகளுக்கு நீடிக்கலாம் இல்லை சில மணிகளுக்கு நீடிக்கலாம் எப்படி இருந்தாலும் இந்த நிலை இன்னமும் மோசம் அடையுமே தவிர முன்னேற்றம் எல்லாம் வராது என்று மருத்துவர்கள் சொல்லியும் அவளைவிட்டு வேறு எங்கேயும் செல்வதாக இல்லை என்று கடைசிவரை முயன்று கடைசியில் அவள் சொல்வாள் நம்மாள் சேர்ந்து தான் வாழமுடியவில்லை நம்காதல் நம்மை சேர்த்தாவது அழைத்துக்கொண்டு செல்லாதா என்று கேட்க்க காதலால் எல்லாம் முடியும் என்று செல்ல அடுத்த காட்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் கரம் பிடித்தபடி இறந்துகிடக்கும் காட்சியோடு படம் முடியும்.

சரி இதுக்கும் ஓ கே கண்மணிக்கும் என்ன சம்பந்தம்..............

அந்த ஆண் படிக்கும் கதை இவர்களது காதல் அரும்பியது முதல் முதியோர் இல்லத்தில் வந்து சேர்ந்தது முதல் வரும் கதையை அப்படியே துல்கரும், நித்தியாவுமாக மாற்றிவிட்டார் மணி.

இரண்டு வயதானவர்களை அப்படியே அப்படியே வேறு இருபாத்திரமாக மாற்றிவிட்டார்.

மூல படத்தை பார்க்கும் போது கதை சொல்பவர் வேறு யாரோ ஒருவருடைய கதையை தான் சொல்கிறார் என்று நமக்கும் தோன்றும் அதையே அப்படியே திரைகதையாக மாற்றிவிட்டார் அருமையாக.

அமெரிக்க மக்களின் வாழ்கையில் விடலை பருவத்தில் தனக்கு என்று ஒரு துணையை தேர்ந்து எடுத்து அவர்கள் இருப்பது ஒரு வாழ்வியல். அந்த இருவரும் கடைசிவரையில் சேர்ந்து இருந்தாலும் இருப்பார்கள், இல்லை இது விடலை காமம் மட்டுமே காதல் இல்லை என்று தெரியும் பட்சத்தில் வேறு வாழ்கையை தேடுவார்கள் இருபாலரும். இந்த தேடுதல் பல திருமணங்களுக்கும் பிறகும் தொடர்வது ஒரு சோகதை என்றாலும் இப்படி தான் இவர்களது வாழ்வியல் இருக்கிறது.

அப்படி ஒரு கோடை விடுமுறைக்கு நாயகி ஆலிசு ஊருக்கு வர, துல்கர் மும்பைக்கு செல்வது போல் அங்கே ஒரு கூட்டமான கோடைகால விழாவில் அவளை பார்கிறார் நோவா.

பார்த்ததும் மனதுக்குள் மணியடிக்க யார் என்று கேட்க தனது நண்பனின் தேழியின் தோழி என தெரியவர பேச்சு கொடுக்கிறான் நோவா, உன்னை யாருனே தெரியாது தெரிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை என்று சொல்ல, அவர்கள் செல்லும் பெரிய இராட்டினத்தில் தொங்கியபடி ஆலிசை தன்னிடம் வெளியில் வருமாறு கட்டாயபடுத்துகிறான் நோவா, துல்கர் முதலில் பார்க்கும் போது நித்தியா இரயிலில் விழப்போவதாக நடிப்பதை போல்.

பிறகு ஒரு நாள் ஒரு படம்பார்க்க போகும் போது மறுபடியும் இருவரும் பார்த்துக்கொள்கிறார்கள், படம் பார்க்கும் இடத்தில் நண்பன் கொஞ்சலில் இறங்க நோவாவும் ஆலிசும் தனியாக இடம் மாறுவார்கள் பேசிக்கொள்வார்கள் துல்கரும் நித்தியாவும் சர்ச்சில் இந்த மூலையில் இருந்து அந்த மூலைக்கு செல் பேசுவது போல்.

அடுத்த காட்சியில் இருந்து இருவருக்கும் ஒரு நெருக்கம் பிறக்கும், இரண்டு வாரங்களில் இருவரும் பிரிக்கமுடியாத காதலர்களாக மாறிவிடுவார்கள். ஊரில் எங்கே எல்லாம் சுத்தமுடியுமோ அங்கே எல்லாம் சுற்றுவார்கள் துல்கரும் நித்தியாவும் மும்பையை சுற்றுவது போல்.

பிறகு ஒரு நாள் கோடை முடியும் தருவாயில் தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக இருவரும் முடிவுகட்டி இடம் தேடும் போது ஒரு பாழடைந்த வீட்டை தேர்ந்து எடுப்பார்கள், துல்கரும் நித்தியாவும் இந்த படு மோசமான விடுதி தான் கிடைத்தது என்று தங்குவார்களே அந்த இடம் போல.

ஆனால் எதுவும் நடக்கும் முன்பு ஆலிசுக்கு எதிர்காலத்தை பற்றிய பயம் வர வேண்டாம் என்று மறுக்க நோவாவும் சரி என்று இருக்க இவர்கள் இருவரும் காணவில்லை என்று ஊரே தேட நண்பன் வந்து அழைத்து செல்வான், பிறகு வழக்கமான குடும்ப சண்டை, அவன் கூலிக்காரன் நீயோ தனியக விமானம் வைத்துகொள்ளும் அளவுக்கு செல்வம் உள்ளவள் என்று ஆலிசின் தாய் தடுக்க இந்த கரளோபகத்தில் நோவாவை பற்றிய மதிப்பீட்டை அவன் கேட்க மனம் உடைந்து ஆலிசை பிரிந்திடுவோம் என்று கிளம்ப ஆலிசு வெளியில் வருகிறாள்,  நோவாவோ இந்த கோடை முடியும் வரை நமது காதல் இருக்கடும் அதற்கு பிறகு வேண்டாம், நீ யாரோ நான் யாரோ என்று இருக்கலாம் என்று விரக்தியில் கூறுகிறான். துல்கரும் நித்தியாவும் அமெரிக்க செல்லும் நாள்வரை இதே போல் தொடருவோம் என்று சொல்வதை போல்.

இந்த இளையவர் கதைவரும் ஓட்டத்தில் அந்த வயதன நோவாவை பார்க்க அவனது பிள்ளைகள் வருகிறார்கள், அவர்களை ஆலிசுக்கு அடையாளம் தெரியவில்லை யார் என்று கேட்க நான் உங்களை பார்த்து இருக்கிறேன் என்று சொல்கிறார்கள் தமிழில் துல்கரின் அண்ணன் குடும்பம் திடீர் என்று சம்பந்தமே இல்லாமல் வந்து போகும் காட்சியாக மணி மாற்றிவிட்டார்.

இந்த திரைகதை வரையில் அப்படியே தமிழுக்கு மாற்றிய மணி, மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு கண்மணி அன்போடு காதலன் எழுதிடும் கடிதமே என்று பாட்டாகவே பாடிவிட்டார்.

 நோவாவின் காதல் என்ன ஆனது என்ற ஆழமான பின் பாதி கதையில் ஆலிசு ஒரு இரண்டு நாள் வெளியூருக்கு சென்று வருகிறேன் என்று சென்றதும் கதையில் ஒரு பூகம்பம் வெடிக்கும், நித்தியா 2 நாள் வெளியூர் சென்று வந்ததும் சண்டைபிடிப்பது போல்.

அதற்கு அடுத்து வரும் திரைகதையை அனேகமாக இன்னமும் ஒரு 5 அல்லது 10 ஆண்டுகளில் ஓகே கண்மணி - 2 என்று எடுக்கும் நிலையில் இந்திய வாழ்வியல் மாறும், மக்களும் முகநூலில் இருந்து இன்னமும் இன்ன பிற இடங்கள் வரை என்னான்ற இப்ப என்று எழுதி தள்ளுவார்கள், அது தான் இது வரை இப்போது போதும் என்று நிறுத்திக்கொண்டார் போலும்.

கிடைத்தால் முடிந்தால் மூலத்தை பாருங்கள் உங்களுக்கு ஓகேக விட பிடிக்கும்.............

சுகாசினி ஏன் எங்களை எல்லாம் கடிந்து கொண்டார்கள் என்று இப்ப உங்களுக்கு புரியுதா இந்த கட்டி ஏன் நான் வாங்கினேன்னு..............

ஆலீசா நடித்த நடிகையின் முக அமைப்பு அப்படியே நித்தியாவின் முக அமைப்போடு எல்லா கோனங்களிலும் ஒத்துபோவதை காண்பீர்கள்........

மணியின் இராவணன் விமர்சனம்

0 comments: