Friday, April 17, 2015

மக்கள் குறை கேட்க தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கள் குழு - அப்போ சு சா இது வரைக்கும் என்ன குறைன்னு சொல்லவே இல்ல

தமிழகத்து பசக அமைபினர்கள் எல்லாம் எந்த குறையும் தமிழகத்தில் இல்லை என்று கட்சி மேலிடத்தில் சொல்லிவிட்ட பிறகும் அப்படி அவர்கள் சொன்னது சரி தானா என்று தெரிந்து ஊர்சிதப்படுத்த அமைச்சர் குழு வருகிறது போலும்.

சு சா, தமிழிசை, பொன்ரா, பிரச்சனை பெரியசாமி ராசா போன்ற பசக பெரிய தலைகள் எல்லோரும் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவதாகத்தான் மோடியிடம் சொல்லி இருக்கிறார்கள் போலும்.

செயலலிதாவை சிறையில் அடைத்து வைத்தது முதல் இது வரை ஆட்சி நடந்து வரும் முறையை பார்த்து உலகமே சிரிக்கின்ற நிலையில் வாய் திறக்காத பசக. அடுத்தது தமிழகத்தில் பசக தான் ஆட்சி என்று ஊர்க்கு ஊர், மேடைக்கு மேடை முழங்கிய பசக.

இடைத்தேர்தலில் மண்ணை கௌவிய பிறகு, சும்மா இலங்கையை வைத்து ஆடிய மங்காத்தா எல்லாம் பலிக்காது என்று அறிந்து இரண்டு அம்ச தாகுதலில் இறங்கி இருக்கிறது போலும்.

ஒன்று காவலர்களின் துணையுடம் எதிரணியினருக்கு எதிராக வன்முறையில் இறங்குதல். திக போராட்டத்தில் வன்முறை, புதிய தலைமுறை தொக அலுவலக வெடி குண்டு தாக்குதல் என்றும்.

மற்ற வழியில், தமிழகத்தில் தலைவிரித்து ஆடும் குறைகளை கேட்டு தீர்க்க அமைச்சர் குழு வருகிறது என்ற அறிப்பும் அதை தொடர்ந்து செய்தி தாள்கள் வெளியிட்டு இருக்கும் தலைப்பும்.

மத்திய அமைச்சரவை என்ன தான் திட்டம் வகுத்தாலும் அதை மாநிலத்தில் செயல்படுத்துவது மாநில அரசு தான். தமிழகத்தின் மான்புமிகு முதலமைச்சர் பன்னீர் செல்வம் எழுதிய எந்த வேண்டுதலுக்கும் பதில் கூட தெரிவிக்காத மைய அரசு இப்போது நேரடியாக மக்களை நேர்காணலுக்கு அழைப்பதன் நோக்கம் என்ன.

தாய் தகப்பன் இல்லாத வீட்டில் குழந்தைகளை கவனிக்க வரும் மூன்றாம் மனிதனாக செயல்பட நினைக்கிறது மைய அரசு. 

முதலில் செயலலிதாவை சிறைக்கு அனுப்பியது, இரண்டாவது மாறன் சகோக்களின் உடைமைகளை முடக்கியது. இப்போது அதிகாரமாக வலம் வருவது என்று தண்டல்காரன் பாணியில் நடந்து வருகிறது மைய அரசு.

அத்வானியின் பாணியில் தமிழகத்து மைய அமைசர்கள் வந்து போன பிறகோ அல்லது வரும் முன்னோ குண்கள் வெடிக்காமல் இருந்தால் சரி தான். முன்பு எப்போதெல்லாம் அத்வானி தமிழகம் வந்து சென்றாரோ அப்போது எல்லாம் முன்போ பின்போ குண்டுகள் வெடித்து சிதறியது அனைவரும் அறிவீர்.

இந்தியாவை பொருத்த மட்டில் சகிப்புத்தன்மையில் முதலிடம் தமிழகமே, மொழி தவிர்த்து மற்றவைகளில் தமிழகம் சகிப்புத்தன்மையுடன் தான் நடந்துக்கொண்டு வருகிறது.

இந்த பொருமையும் பெருமையும் இல்லாமல் செய்ய சதி நடக்கிறது மக்களா கவனமாக இருங்கள். இருட்டில் கிள்ளிவிட்டு அடுத்தவனை கைக்காட்டிவிட்டு அவர்கள் சென்றுவிடுவார்கள்.

கடைசியாக ஒன்று தமிழிசை இந்த செய்திபற்றி ஒன்றும் சொல்லாத நிலையில் இது கடைசியில் அந்த அமைசரின் தனிப்பட்ட அறிக்கை என்று நாளைக்கு சொன்னாலும் சொல்வார்கள்.

0 comments: