Tuesday, April 7, 2015

அடுத்ததாக பசக(BJP) அரசு கொண்டு வரும் திட்டம்

பசுவின் புனிதத்தை காப்பாற்ற இனி மாட்டிறைசி உட்கொள்ளும் நாடுகள் எதனுடனும் இனி இந்தியா வரத்தகமற்றும் எந்த ஒரு தொடர்பும் வைத்துக்கொள்ளப்போவது இல்லை என்றும்.

இதையே சட்டமாக கொண்டு வந்து இனி யாராவது டாலர் பௌன்டு என்ற வார்த்தைகளை சொன்னால் கூட கடும் தண்டனைகளை கொடுக்கும் வகையில் அவசர சட்டம் ஒன்றையும் கொண்டு வர உள்ளது.

இதன் விளைவாக வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் நாடு திரும்ப கால அவகாசம் கொடுக்கப்படும். அப்படி திரும்புவர்கள் தவிர மற்ற அனைவரின் கடவு சீட்டுகளை ஒரே அடியாக முடக்குவதுடன், அவர்களுக்கு என்று இந்தியாவில் இருக்கும் சொத்துகளை பரிமுதல் செய்து பசக கொள்கை பரப்புக்கும் மாடு பாதுகாப்பு திட்டத்திற்கு செலவுசெய்யும் திட்டத்தையும் ஒரு அவசர சட்டமாக கொண்டு வரும் என்றும் தெரிகின்றது.

அது மட்டும் இல்லாமல், இனி இந்தியாவில் ஒரு குண்டூசி விற்பது என்றாலும் அவைகளை செய்பவர்களில் யாரும் மாட்டிறைச்சி சாப்பிட்டோராக இருக்க கூடாது என்றும் சட்டம் கொண்டுவர ஆலோசனை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இனி உயிர்காக்கும் மருந்தாக இருந்தால் கூட அதை பசக சோதனை செய்து சுத்த சைவத்தாரால் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரை வழங்கும் வரை எல்லோரும் காத்துக்கிடக்க வேண்டி இருக்கும்.

மாட்டிறைச்சி சாப்பிடும் உலகத்தாரது செய்திகளை இனி இந்திய செய்தி தாள்கள் வெளியிடவும் தடை வரும்.

கூகுல் மற்றும் இணையம் எல்லாம் மூடி கோகுல் என்ற தேடுபொறியும், கோணையம் என்ற ஒன்றும் இந்தியாவில் அறிமுகபடுத்தபடும். இதை தவிர கடலோர இடங்களில் தவறியும் கூகுலோ அல்லது இணையமோ பயன்படுத்துவது தெரிந்தால் எல்லை தாண்டிய பயங்கரவாதமாக கருதி கொல்லப்படும் தண்டனை முதல் என்ன என்ன தண்டனைகள் கொடுக்கலாம் என்று அலோசித்து வருகிறார்கள்.

பசுவை வதைத்து பெறப்படும் பால், வெண்ணை, நெய் பொருட்களுக்கு நிரந்தர தடையையும் அறிவிக்க உள்ளது. வேண்டும் என்றால் கோமியம், மற்றும் அதனுடன் கிடைக்கும் சானியை மட்டும் வேண்டும் என்றால் பயன் படுத்திக்கொள்ளலாம் என்றும் ஒரு அவசர சட்டம் தயாராகிக்கொண்டு இருப்பதாக தகவல்.

இனி மாட்டிறைச்சி காரர்களில் உடையான கோட்டு சூட்டுகளுக்கும் தடையை அறிவிக்க உள்ளார்கள் பசகவினர். இனி எல்லோரும் வேட்டி சட்டைக்கு மாற வேண்டியது தான். இனி எங்காவது எவனாவது பேன்டு சட்டையில் பார்த்தால் அவ்வளவு தான்.

இப்படியே ஒரு நீண்ட பட்டியல் போகுது, அப்படியே மறுமுறையும் படிக்கும் போது ஏதோ தாலிபான் ஆட்சியின் அடிப்படைவாத அரசு பட்டியல் மாதிரி தெரியுது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது......................

1 comments:

')) said...

இவை எங்கே போய் முடியப் போகுதோன்னு தோணுது...!