Tuesday, April 14, 2015

ஆதார் அட்டையும் அம்பானி பெருமக்களும் - இந்தியா அமெரிக்கா போல் வல்லரசு ஆகும்!!!!!

வால்மார்டு வருகிறது என்றதும் பொதுமக்களும் அரசியல்வாதிகளும் எதிர்த்தார்கள் சரி, ஆனால் அம்பானிகள் எதிர்க வேண்டிய தேவை என்ன.

எல்லா பெரு நகரங்களிலும் ரிலையன்சு பெருஅங்காடிகளை கட்டிய மாயம் என்ன....

ஏன் என்று கேட்டால் இப்படி காரணம் சொல்வார்கள்.....

ஒரு நாள் நான் மும்பையில் இருந்து புனேவிற்கு சென்றுக்கொண்டு இருந்தேன் அங்கே இரு ஏழை உழவர் தனது காய்கறிகளை எல்லாம் ஏற்றிக்கொண்டு இருந்தார், அவை எல்லாம் கிட்டத்தட்ட வீணாகும் நிலையில் இருக்க ஏன் ஐயா இப்படி என்று கேட்டதும்.

"என்னங்க செய்யுரது, விளைய வச்சு, அறுத்து ஒரு வாரம் ஆகுது. ஊரில் இருந்து சந்தைக்கு கொண்டு போக வந்தேன் அந்த நேரம் பார்த்து மாட்டு வண்டியோட அச்சாணி உடஞ்சு போச்சு. அங்கே இங்கே என்று அலைந்து கொண்டு வருவதற்கு 2 நாள் ஆயிடுச்சு. இரவோடு இரவா போனாதான் அந்த சந்தையில விக்கமுடியும்.

இப்ப பாருங்க 4 நாள்லில் காய் எல்லாம் வாடிப்போச்சு, இதை சந்தை வரைக்கு கொண்டு போனா மாட்டு வண்டி கூலி கூட கிடைக்காதுன்னு மாட்டுகே கொடுதிடலாம்ன்னு வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகிறேன்னு சொன்னார்."

என்று சொல்லி நம்மை எல்லாம் டாட்டா அளவுக்கு பேசி குளிரூட்டுவார்கள்.

நண்பர் ஒருவரிடம் இது சம்பந்தமாக பேசும் போது அவரும் சொன்னார்கள் சென்னை பெங்களூர் தடத்தில் முன்பு எல்லாம் அழுகிய காய்கறிகள் நிறை கொட்டிக்கிடக்கும் இப்போது காணக்கிடைப்பது இல்லை என்று சொன்னார்கள்.

ஏழை என்ற வார்த்தைகளை கூட வெறுக்கும் இவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கரை என்று பார்த்தால் தான் அவிழ்கிறது மர்ம முடிச்சு.

அமெரிக்காவில் அனைத்து மக்களுக்கும் ஒரு அடையாள எண் கொடுப்பார்கள். உங்களது வரவு செலவு மற்றும் வரி கணக்குகள் மற்ற இத்தியாதிகளை எல்லாம் இதனுடன் இணைத்து வைப்பார்கள்.

சரி தானே சரியான செயல் தானே என்று தோன்றும் நமக்கு. ஆனால் இது தான் சூட்சமம்.

அமெரிக்காவில் ரேசன் கடைகள் கிடையாது. அத்தியா அவசிய பொருட்கள் அனைத்தும் கடைகளில் தான் வாங்க வேண்டும்.

3 முதல் 5 பேர் கொண்ட குடும்பமாக இருந்தாலும் $500 முதல் $700க்குள் அவர்களது உணவுக்கு சரியாக இருக்கும். அதற்கும் மேல் இல்லத்திற்கு தேவைபடும் மற்ற பொருட்கள், மின்சாரம், என்று ஒரு $1000 இருந்தால் ஒரு சராசரி வாழ்கையை வாழ்ந்து விட முடியும்.

சரி இதுக்கும் ஆதார் அட்டைக்கும் என்ன சம்பந்தம்......இல்லை அம்பானிக்கும் தான் என்ன சம்பந்தம்.........

மேலே சொன்னவைகள் எல்லாம் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் குடும்பங்களை பற்றிய தகவல்கள். அமெரிக்காவின் மற்றொரு முகம் அனேகருக்கு அதிகம் பரிட்சயம் இல்லாத முகம் அது.

பார்கிற வேலை போய்விட்டது என்றால், வேலை போன தேதியில் என்ன சம்பளம் வாங்கினீர்களோ அதில் 60% பணத்தை நீங்கள் அடுத்த வேலை வாங்கும் வரையோ அல்லது 6 மாத காலமோ கொடுக்கும்.

இந்த 6 மாதங்களும் கடந்தாலும் இன்னமும் 2 வருடங்களுக்கு வேறு வேலைக்கு தன்னை தயார்படுத்திகொள்ள தேவையான தொழில் பயிற்சி மேற்கொள்ள மற்றும் குடும்பத்தை நடத்த உதவி தொகை கிடைக்கும்.

இப்படி மாத மாதம் ஆயிரகணக்கான மக்களுக்கு அரசு பணம் கொடுத்து உதவிக்கொண்டு இருக்கிறது அமெரிக்காவில்.

நல்ல செய்கை தானே அதனால் என்ன......

அப்படி கொடுக்கும் உதவி தொகையாகட்டும் அல்லது வேறு வகை உதவியாகட்டம், மக்கள் அந்த பணத்தை தவறாக பயன் படுத்தாமல் இருக்கும் பொருட்டு, பணமாக கொடுக்காமல் ஒரு கடன் அட்டையாக கொடுக்கும்.

அந்த அட்டையின் பெயர் லிங்கு கார்டு, நண்பர் ஒருவர் அந்த கார்டை அங்க கொண்டு லிங்கு கொடுங்க இங்க கொண்டு லிங்கு கொடுங்க என்று வேடிக்கையாக எழுதினது நினைவுக்கு வரலாம்.

சரி இதுக்கும் அம்பானிக்கும் என்ன சம்பந்தம்........

அரசு தரும் சலுகைகளை மக்களிடம் கொண்டு சேர்க நிறைய வழிகளை வைத்து இருந்தார்கள். அதில் மக்களிடம் நேரடியாக செயல்பட்டது ரேசன் கடைகள்.

படிப்படியாக அதற்கு மூடு விழா நடத்தியாச்சு, இரண்டாவதாக விவசாய மணியமாக கொடுத்து வந்த மாணியம் எல்லாம் இனி கிடையாது என்று சிறு விவசாயிகளை கொன்றாச்சு...

சரி அப்போ இனிமேல் அரசாங்கம் இல்லாதபட்டவங்களை கைவிட்டு விடுமா என்றால் இல்லை, இப்போது அனைவரும் வங்கி கணக்கை தொடங்கி அதை தாசில்தார் ஆபீசில கொடுங்க என்று வந்த உதிரவு எதுக்கு என்று ஓர் அளவிற்கு யூகித்து இருப்பீர்கள்.

இது தான் கடைசியா நடக்கும் தவிக்கும் மக்களு அரசின் உதவி என்று சொல்லி ஏழைகள் இனி ரேசன் கடைகளில் வரிசையில் வெயிலில் நிற்க வேண்டாம் அம்பானி அண்ணனின் குளுகுளு கடையிலே சென்று வேர்க்காமல் விறு விறுக்காமல் ஆதார்/லிங்கு அட்டையில் தரமான பொருட்களை வாங்கிக்கொண்டு வரலாம் என்று அரசு பொருளில் அம்பானிகள் விளம்பரம் கொடுப்பார்கள்.

அமாம் ரேசன் கடையில் கொடுத்த அரிசியைவிட அம்பானி கடையில் கொடுக்கிற அரிசி நன்றாக இருக்கிறது என்று பசக உருப்பினர்கள் கொண்டு அதிதீர விளம்பரம் வரும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்கிறேன் என்று ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உள்ளாடைகளை அணிவித்துக்கொண்டு மோடி மேளம் அடிப்பார்.

உணமையில் நடக்க இருப்பது என்ன, இது நாள் வரையில் ஒரு பைசா கூட வரிக்கட்டாத அம்பானி இனிமேலும் வரிகட்ட வேண்டாம். காரணம் அரசாங்கத்தின் வேலையை இனி அவரது நிறுவனம் செய்யபோகிறதினால்.

மேலும் அரசு சலுகை என்று அளிக்க இருக்கும் அவ்வளவு பணமும் இனி அவர்கள் கையில். அப்ப மீதி என்று கேட்கிறீர்கள் வேற யாருக்கு டாசுமார்க்கு தான்..........

இப்போ தெரியுதா ஏன் ஆதார் அட்டை, ரேசன் மூடு, வங்கி கணக்கு தொடங்கு என்று வரிசையா உத்தரவுகள் பறகிறது என்று. அனுபவி ராசா அனுபவி, இந்த பாவிகள் வேண்டாம் என்று சொல்ல சொல்ல ஓட்டு போடீர்களே மக்களே அனுபவியுங்கள்.......

1 comments:

')) said...

அது என்னங்க எதிர்கட்சியா இருக்கும்போது எதிர்த்ததை எல்லாம் ஆளும் கட்சியா வந்தப்புறம் செயல் படுத்துகிறார்களே? இதைப் பார்க்கும் போது யாருக்கு வோட்டு போடுவது என்று புரியலைங்களே?

--
Jayakumar