சார்சியா மாகானதின் அட்லான்டா பெரு நகரில் நடைபெற்றுவரும் (பெட்னா) வட அமெரிக்க தமிழ் பேரவை நடத்திவரும் தமிழ் விழாவின் முதல் இரண்டு நாட்கள் செவ்வனே நடைபெற்றது.
திட்டமிட்டபடி அழைப்பில் குறிப்பிட்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களும் விழாவிற்கு வந்து சிறப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
விழாவின் சிறப்பு என்று சொல்வோமானால் அது நிகழ்ச்சிகளை நிரலில் உள்ளது போல் அதே நேரத்தில் துவங்குவது மட்டும் இல்லாது குறித்த நேரத்திலும் அழகாக முடிக்கவும் செய்தார்கள்.
விழா வெற்றியாக அமையும் என்று விழா துவங்கும் முன்னே அறிவிக்கும் முகமாக அனைத்து இடங்களும் 20 நாட்களுக்கு முன்னதாகவே விற்று தீர்ந்ததுள்ளது.
விழாவிற்கு வருவோரை எல்லாம் புன்னகையுடன் வரவேற்க திருவள்ளுவர் வாசலில் இருந்து ஓலை சுவடிகளை கொடுத்து துவங்கியது புதுமை, அழகு.
மதியம், இரவுக்கு என்று அருமையானதொரு உணவை வழங்கி மகிழ்ந்தார்கள் விழா குழுவினர். நீண்ட வரிசையில் நின்று பசியாறினாலும், சுவையான உணவகவும், கட்டுக்கோப்பான பரிமாறலும் அருமையாக இருந்தது.
விழாவின் சிறப்பு விருந்தினராக வந்து இருந்த நிலா மனிதன் திரு அண்ணாதுறை மயில்சாமி அவர்களை மக்கள் சாப்பிடக்கூட விடாமல் பேட்டி எடுப்பதும், படங்கள் எடுப்பதும் பார்க்கும் போது மனதில் ஒரு புறம் கவலைகள் வந்தாலும். எவ்வளவு முக்கியமான மனிதரை விழாவிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என்று பெருமையாக இருந்தது. அவர் சொன்ன அந்த சின்ன சின்ன சம்பவம் அருமையோ அருமை.
தமிழருவி மணியன் ஐயா அவர்களின் உணர்ச்சி பொங்கும் பேச்சை 3 முறை வழங்கினார்கள். மேடையில் பேசியது போக வழியில் நின்றுகொண்டு இருக்கும் இடத்திலும் இந்த நேர்முகளாளர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டு துளைத்து எடுக்கும் வேளையிலும் அலுக்காமலும் பொருமையாகவும் பெருமையாகவும் உண்மைகளை எடுத்துகூறிய அழகை பார்க்க கொடுத்துவைத்து தான் இருக்கவேண்டும். ஐயா உங்களின் இந்த தன் நலம் இல்லா சேவைகளுக்கு தலை வணங்குகிறோம்.
சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டில் அவரது நல்ல பல பண்புகளையும் அந்த மாமனிதனின் தனி பண்புகளையும் அழகாக விளக்கி மகிழ்வித்தார்கள்.
நிகழ்ச்சியின் துவக்கத்திலே ஈழத்தில் நடைபெற்று வரும் கொடுமைகளை விளக்கும் விதமாக நடைபெற்ற நாடகம் அனைவரது நெஞ்சையும் வருத்ததிலும் அவமானத்திலும் ஆழ்த்தியது என்றால் அது மிகையாகாது.
பிரதிமை என்று ஒரு நாடகம், அந்த நாடகத்தில் இராசேந்திர சோழனும் குந்தவையும் பேசும் படியாக வரும் வசனத்தி எழுதிய கைகளுக்கு தங்கத்தில் காப்புதான் அணிவிக்கவேண்டும். அவ்வளவு தீர்கம் அவரது எழுத்தில், அந்த கால நிகழ்வுக்கு நம்மை எல்லாம் அழைத்து செல்ல அவர் கொண்ட காயகல்ப நிகழ்வுகள் இரு வித்தியாசமான சிந்தனை.
உலக தமிழ அமைப்பு நடத்திய கூட்டமும், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமும் கூடி வந்திருந்த மக்களுக்கு வேண்டிய சிந்தைகளை வழங்கிய வண்ணம் இருந்தது.
நீயா நானா கோபி நாத் நடத்திய விவாதமேடை நகைச்சுவையாகவும் அதே சமயத்தில் அமெரிக்க வாழ் மக்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பையும் அழகாக அவருக்கே உள்ள முறையில் தொகுத்தும் விளக்கியும் வழங்கினார்கள்.
கவியரங்கம் நடத்திய கவிஞர் செயபாசுகரின் வார்த்தைகளில் தெரித்த தமிழர்களின் தமிழ் சார்ந்த கோபங்களை மிகவும் நகைப்பாக எடுத்துரைத்தார். குறிப்பாக தமிழகத்து ஊர்களின் பொருளில்லா பெயர் திரிவுகளை விளக்கியது இதுவே மேடைக்கு புதிது மற்றும் முதல் நிகழ்வு என்று நிகைக்கின்றேன்.
வைரமுத்து அவர்கள் வழங்கிய உரையு அதில் அவர் சொன்ன வார்த்தைகளும் வாதங்களும் அருமையோ அருமை. எல்லோரும் சொல்ல மறந்த அந்த பெயரை பிரபாகரன் என்று எழுர்ச்சிமிக்க கூறுகையில் அரங்கம் அதிர்ந்தது.
விழா அரங்கிலே பழமைபேசி, மயிலாடுதுறை சிவா போன்ற பதிவர்களையும் பார்க்க முடிந்தது. இவர்கள் இருவரும் பல்வேறு பட்ட நிகழ்சிகளில் பங்கு கொண்டதையும் பார்த்தோம், இரசித்தோம்.
இரண்டாம் நாள் இரவில் இன்னிசையாக மெல்லிசையை வழங்கிய அனுராத குழுவினர்களை புகழ்ந்து கொண்டே போகலாம். முதலில் இங்கே உள்ள இளைஞர்களை பாட சொல்லி ஊக்குவித்தமைக்கு பாராட்டுவோம். பிறகு மேடை கச்சேரியில் அவர் செலுத்திய ஆளுமைக்கு, அவர் மேடை ஏறியதும் அங்கே இங்கே என்று வந்த எரிச்சலூட்டும் விமர்சங்களையும் அனாயசமாக கையண்டது அவர் சுசீலா, சானகி, மற்றும் மற்ற பாடகிகளின் பாடல்களை கையாண்டதை விட மிகவும் அழகாக இருந்தது.
இவ்வளவு திறமைகளா உங்களிடம் என்று வியந்து தான் போனோம் நாங்கள்.
விழாவின் ஒருங்கினைப்பாளர்கள் என்று ஒரு பெரிய கூட்டத்தையே மேடையில் ஏற்றினார்கள் விழா குழுவினர்கள். அந்த கண் கொள்ளா காட்சியை விரைவில் வெளியிடுகிறேன்.
நாளை நடக்க இருக்கும் இலக்கிய கூட்டத்தையும் பார்த்துவிட்டு, நிறைய படங்களை வெளியுடுகிறேன்.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
4 comments:
அருமை.... நன்றி!
வாருங்கள் பழமை பேசி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//பிரதிமை //
பிரதி மெய்
:-0)
படங்கள் போடவே இல்லை இன்னும்? அவ்வ்வ்......
Post a Comment