எப்போது எல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் அதிமுகவின் முகாமில் இருந்து வரும் அறிக்கைகள் இதுவே.
பண நாயகம் மக்களாட்சியை குழி தோண்டி புதைத்துவிட்டது. (நாங்கள் வென்றால் தான் அது சரியான முறையில் பெற்ற வெற்றி).
சென்னை இசுடாலின் சென்னை நகர தந்தை தேர்தலுக்கு திமுக சார்பில் போட்டி இரும் போதும் சரி, இராதா இரவி சைதாப்பேட்டையில் போட்டி இட்டபோதும் சரி. அதிமுக காந்திய வழியிலும், அரக்கபோக்கு எதுவுமே இல்லாமல் அமைதியான முறையில் தான் தேர்தலை எதிர் கொண்டது போலும்.
இன்றைக்கு மக்களாட்சியை பற்றி பக்கம் பக்கமாக அறிக்கைவிடும் செயலலிதாவும் சரி அவருக்கு சப்பை கட்டு கட்டும் கூட்டமும் சரி. அன்றைக்கு அந்த தேர்தல் வன்முறைகளை மறைமுகமாக கூட கண்டிக்காமல் விட்டது ஏன் என்று விளக்கமுடியுமா.
தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன என்ன செய்வீர்கள் என்று அதிமுகவை கேட்டால், கலைஞர் அழியவேண்டும் அதை தான் தமிழர்கள் தீபாவளி என்று கொண்டாட வேண்டும் என்று சொல்வார்கள். அதும் எப்படி கரப்பான் பூச்சியை தரையிலே போட்டு காலால் மிதித்து தைரையோடு தரையாக தேய்த்து உரு தெரியாமல் அழித்துவிடவேண்டும் என்று அறிக்கை விட்ட செயல் வீரர் ஆயிற்றே இந்த செயலலிதா.
அதையும் விட கேவலம் இந்த அம்மையார் பண நாயகத்தை பற்றி உரைப்பது. பணம் என்றாலும் சரி ஊழல் என்றாலும் சரி அதன் மொத்த முகவர் அதிமுக என்று இன்றைகு அல்ல செயலலிதா முதல் முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. இவர்கள் சொல்லி மக்களாட்ச்சி என்றால் என்ன என்று நாம் எல்லாம் தெரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம் நாம். என்ன கொடுமை சரவணா இது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ப.சிதம்பரத்தை வெற்றியாளராக அறிவிக்க கண்ணப்பன் எப்படி எல்லாம் கவனிக்கப்பட்டார். எவ்வளவு பணம் எல்லாம் கைமாறியது என்ற வேலை எல்லாம் என்ன என்று கேட்க்கவாது இவருக்கு துணிவு உண்டா இவருக்கு.
கேளுங்கள் இந்த அதிமுக கழக கண்மணிகளை, தங்க தாரகை, மேரியம்மாவின் மறுபிறபு, தமிழகத்தை காக்க வந்த தைரிய லெட்சுமி என்றெல்லாம் கதைப்பார்கள் இவர்கள்.
என்ன தெருவில் பிச்சை கேட்க்கும் பிச்சைக்காரர்களுக்கும் இவர்களுக்கு ஒரே வித்தியாசம். பிச்சை கேட்ப்பவர்களும் இவர்களை போல் அம்மா, தாயே, மகாலெட்சுமி என்று எடுத்து அவனது வயிற்று மட்டும் வளர்ப்பான். இவர்கள் இப்படி எல்லாம் கெஞ்சி கூத்தாடி கிடைக்கும் சொற்ப பணத்திற்கு கொஞ்ச்ச நஞ்சம் இருக்கும் மானத்தைவும் விற்று கட்சி நடத்துவார்கள் இந்த வியாபார அடிமை திமுக கட்சியினர்கள்.
செயலலிதாவுக்கும் இப்படி பேசுவதில் வெட்கம் இல்லை, அவரது வியாபார கட்சியினருக்கும் வெட்கமும் இல்லை. இதை எல்லாம் கேட்க்கும் நமக்கு தான் குமட்டிக்கொண்டு வருகிறது, இந்த தைரிய லெட்சுமியின் நகைப்புரைகளை கண்டு........
இப்படியே எல்லா தேர்தலிலும் வரிசையாக தோற்று போன செயலலிதாவை, தோற்றலலிதா என்று சொல்லுவார்கள் என்ற பயத்தில் இந்த அம்மையார் எல்லா அலங்க்கார வார்த்தைகளை கொண்டு குடையமைத்து கொள்கிறார்கள் போலும். பாவம் செயலலிதாவும் இன்னமும் அவரை நம்பி சுவரொட்டிகளை தயாரித்து ஒட்டும் அதிமுக முகாம் வாசிகளும். பேசாமல் வேறு வேலை இருந்தால் பார்க்கவும்..................
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
4 comments:
ஆடத்தெரியாதவன் மேடை கோணல் -ன்னானாம் .
சரியாக சொன்னீர்கள், இந்த அம்மையா மனதில் என்ன தான் நினைத்துகொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை. கும்பகர்ணன் உறக்கமாக 6 மாதம் காணாமல் போவதும். பிறகு ஒரு அறிக்கை விடுவதுமாக கட்டுமே தான் இத்தணை ஆண்டு காலமாக அரசியல் நடத்திக்கொண்டு இருக்கிறார் இந்த அம்மையார். இதிலே தூக்கத்தில் எழுந்தவரை போல் கனவுலகிலேயே இருந்து கொண்டு இப்படி அறிக்கைகள் வேறு.............
செயலலிதாவை, தோற்றலலிதா என்று சொல்லுவார்கள்
/\*/\
தோல்வி பயம் வந்து ஆட்டுவதால் சிலர் பயலலிதா என்றும் சொல்கிறார்கள்
சரியாக சொன்னீர்கள் உடன் பிறப்பே. இந்த பாட்டியாரின் தொல்லை தாங்கல. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment