சின்ன வீடு, இந்த படத்தை அனேகமா நிறைய மக்கள் பார்த்து இருக்ககூடும். அதிகமா தொலைக்காட்சிகளில் வெளிவராத படங்களில் இதுவும் ஒன்று. ஆக இந்த தலைமுறை மக்கள் பார்த்து இருப்பது அரிதே.
படத்தின் தலைபே கதை என்ன என்று அருமையாக விளக்கும் இந்த படத்திற்கு.
இது தான் கதைன்னு தெரிந்த பிறகு படத்தில் என்ன என்ன எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று தனியாக ஒன்றும் பட்டியல் இட வேண்டிய தேவை இல்லை என்று கருதுகிறேன்.
பொதுவாகவே பாக்கியராசின் படங்களிலே காணப்படும் தனிவகையான நகைப்புக்கு இந்த படம் ஒன்றும் விலக்கல்ல. அதுவும் இந்த கதையமைபில் தனியாக கேட்க வேண்டுமா என்ன.
முதல் திருமண காட்சியில் துவங்கும் படம் கடைசியில் 3 குழந்தைகளை காட்டுவதில் வந்து நிற்கும் வரை அப்படி ஒரு ஓட்டம் படத்தில். இது பாக்கியராசுக்கே உள்ள தனி திறமை. அப்படி ஒரு திரைகதை இந்த படத்திற்கு எழுதி இருக்கிறார் இந்த திரைகதை மன்னன்.
எல்லா காட்சியிலும் அவரது முத்திரை இல்லாமல் இல்லை. ஆனால் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சின்ன வீட்டோடு முதலில் சேரும் காட்சிகளை படமாக்கிய விதத்தை சொல்லலாம்.
பொதுவாக ஒரு வியாபார படமாக எடுக்க வேண்டும் என்று இருந்தால். இந்த மாதிரியான காட்சிகளில் அதிகம் இல்லை என்றாலும் புன்னகை மன்னன் படத்தில் வரும் முதல் பாடலான என்ன சத்தம் இந்த நேரம் பாட்டை உதாரணமாக சொல்லலாம்.
ஆனால் இந்த காட்சியின் கோர்வைகளை அந்த கதையின் தலைவனுக்கு அது தான் முதல் அனுபவம் என்று சொல்லும் விதமாகவும். அனைத்து நிகழ்வுகளும் இயற்கையாகவும் இயல்பாகவும் நடப்பதாக படமாக்கி இருப்பார் பாக்கியராசு.
என்ன தான் தலைவனும் தலைவியும் வாழமுடியவில்லை, வாழ்வை சேர்ந்து முடித்து கொள்வதாக இருந்தாலும் 100 நிமிடத்தில் வாழ்க்கையின் அனைத்தையும் பார்த்துவிடும் விதமாக படத்தில் காண்பிப்பதாக சொல்லிக்கொண்டு. திருமணம், உடலுறவு, உணவு, உள்ளாசம் என்றும் இடையிடையே பெண் வீட்டார் அந்த பெண்ணையும் கமலையும் தேடி புறப்படும் காட்சிகளையும் காட்டி இருப்பார் பாலசந்தர்.
இப்படி எல்லாம் பாலசந்தர் காட்டும் விரச காட்சிகளில் காட்டுவது கதையின் தலைவியை அதுவும் தலைவன் அவளின் காதலில் மயங்கி அவள் இல்லா உலகம் எனக்கு தேவை இல்லை என்று முடிவு எடுக்கும் நிலையில் உள்ள தலைவியை அவ்வளவு விரசமாக காட்டி இருப்பார் பாலசந்தர்.
என்ன அந்த நிகழ்வுகள் வயது வந்தவர்களுக்கு அவர் காட்டும் காட்சிகளி திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என்று அப்பட்டமாக தெரியும் அளவிற்கு மட்டுமே நிறுத்தி இருப்பார். இத்தணைக்கும் இந்த படத்தில் இந்த காட்சிகளை தவிர மற்ற காட்சிகளில் எல்லாம் அப்படி எதுவும் இல்லாமல் இருக்கும்.
கதைக்கு தகுந்தாற் போல் காட்சிகள் என்று எத்தணை சப்பை கட்டுகள் கட்டினாலும். ஒரு விலைமாது அவள் தலைவனை மயக்கும் விரசமான காட்சிகளை, தலைவனும் பரத்தையும் என்ன செய்கிறார்கள் என்று ஒன்று ஒன்றாக விவரிக்காமல் அருகில் இருக்கும் பொம்மைகளையும் மற்றவைகளையும் மட்டுமே காட்சி காட்சியாக்கி இருப்பார் பாக்கியராசு.
பாக்கியராசு தனக்கு நன்றாக திரைகதை அமைக்கத்தெரியும் என்று காட்டுவதற்காக அப்படி எழுதி இயக்கினாரா அல்லது. பெண் கதா பாத்திரங்களை அப்படி ஒன்றும் திரையில் காட்ட கூடாது என்ற கோட்பாடா அது அவருக்கே வெளிச்சம்.
இது தவிர சின்ன வீடு படத்தில் வரும் வசனங்களுக்கு இன்னமும் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் அதுவல்ல எனது நோக்கம்.
பெண் கதை பாத்திரங்களை படைப்பதில் இந்த இருவருக்கும் எப்போதும் போட்டி இருக்கும். இருவரும் காட்டும் பெண்கள் இரண்டு விதமாக இருப்பார்கள்.
பாலசந்தரின் பெண்கள் ஒரு கோபம் அல்லது கிட்டதட்ட வெறி பிடித்ததை போல் காட்சிகளில் நடந்து கொள்வாள்.
பாக்கியராசின் பெண்களோ இயல்பாக நடந்துகொள்ளும் பெண்களாக இருப்பார்கள்.
அனேகமாக பாலசந்தரின் அனைத்து பெண்களும் அவ்வளவு வசனங்களையும் பேசி அலைந்து திரிந்து கடைசியில் வாழா வெட்டிகளாக இருக்க போவதாகத்தான் முடிப்பார். மனதில் உறுதி வேண்டும், புது புது அர்த்தங்கள் போன்ற, அவள் ஒரு தொடர்கதை, அவர்கள் இப்படி எல்லா பெண் பாத்திரங்களையும் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் பாக்கியராசின் பெண்களோ வரும் தொல்லைகளுக்கு ஆணின் மனம் நோகமாமலும் அதே நேரத்தில் அவளது பாத்திரத்திற்கு இழிவு ஏற்படாமல் வாழ்க்கையை வெற்றி கொள்வதாக காட்டி முடிப்பார்.
எனக்கு என்னவோ பாக்கியராசின் அனுகுமுறை தான் பிடித்து இருக்கிறது. ஏன் என்றால் கெட்டவைகளை காட்டி இப்படி கெட்டு போகாதே என்று சொல்வதை காட்டிலும். நல்லவைகளை மட்டுமே காட்டி இப்படி நல்லபடியா இரு என்று சொல்வது எளிதும் அரோக்கியமும் கூட.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
0 comments:
Post a Comment