Wednesday, June 17, 2009

தமிழகத்து மக்கள் எல்லாம் இந்திய நாட்டு மக்கள் இல்லை போலும், -- சரியாக சொன்னார் மன்மோகன் சிங்கு.



2009 சூன் 16ஆம் நாள் இந்திய மற்றும் தமிழக செய்திதாள்களின் முதல் பக்கத்தில் வந்த செய்தி இது. " பயங்கரவாதம் கூடாது -- பாக்கிட்த்தானுக்கு மன்மோகன் எச்சரிக்கை".

உருசியாவில் நடைபெற்ற சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் போது சந்தித்து கொண்ட பாக்கிட்த்தானத்தின் அதிபரிடம் முதன்மை அமைச்சர் மன்மோகன் கூறியதாக வெளியான செய்தி இது.

அதுவும் எப்படி தெரியுமா சொன்னாராம் மன்மோகன் சர்தாரியிடம் "தனக்கு நாட்டுமக்கள் கொடுத்துள்ள கட்டளை இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை பாக்கிட்த்தானம் அனுமதிக்கக்கூடாது என்பதை திட்டவட்டமாக கூறுவதே" என்று சொன்னதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்த செய்தியை முதலில் பார்க்கும் போது, தலைமை அமைச்சர் இந்த செய்தியை சொன்னதும் அதிபர் அப்படியே கையை கட்டிக்கொண்டு ஐயா இல்லை ஐயா நாங்கள் எல்லாம் அப்படி செய்வது இல்லை ஐயா. எங்க பெயரை கெடுக்க யாரோ அப்படி எல்லாம் சொல்லுராங்கையா என்று அதிபர் கெஞ்சியதை போல ஒரு தோற்றத்தை உருவாக்கும் விதமாக இந்த செய்தி தோன்றும்.

ஆனால் தமிழகத்து தமிழர்களுக்கு இந்த செய்தி மூலம் தலைமை அமைச்சர் சொன்ன செய்தி என்ன. "இலங்கை ஒரு இறைமை பெற்ற நாடு, அந்த நாட்டை இதை செய் அதை செய் என்று எல்லாம் எதுவும் சொல்ல முடியாது" என்று சொன்ன இதே தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கு தான் இன்றைக்கு பாக்கிட்த்தானத்திற்கு எச்சரிக்கை விடுகிறார்.

அது மட்டுமா அப்படி எச்சரிக்கை விடுவது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாம். அப்படி என்றால், ஈழத்தமிழர்களை காக்கவேண்டும் என்று கெஞ்சினோமே, உயிர்களை கொடுத்தோமே, நாங்கள் எல்லாம். நாங்கள் எல்லாம் என்ன இந்திய நாட்டின் மக்கள் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா மன்மோகன் சிங்கு.

அல்லது பாக்கிட்த்தானம் ஒரு இறைமை இல்லா நாடாக எப்போதில் இருந்து மாறியது என்றாவது தெரியபடுத்துகிறீர்களா. இந்தியாவோடு இருந்தும் அனாதைகள் என்று சொல்லாமல் உணர்த்தியமைக்கு மிக்க நன்றி உங்களுக்கு. தமிழகம் இனியாவது சிந்திக்குமா………..

5 comments:

Anonymous said...

unnmaiye sonnige.... soniya yennaiki indiyava vittu kilambutho annaiki than nadu urpudum... pavam manmohan yenna pannuvaru... he is just like a rubber stamp....

')) said...

இல‌ங்கையில் தீவிர‌வாத‌த்தை ஒழிக்க‌ உத‌விய‌ மாதிரி எங்க‌ பாகிட்தான்ல‌ உள்ள‌ தீவிர‌வாத‌த்தை ஒழிக்க‌ உத‌வுங்க என்று ச‌ர்தாரி கேட்க‌ வேண்டும், ந‌ம்ம‌ சிங்கு கிட்ட‌!

')) said...

கனவு பலிக்கட்டும், ஒருக்கை ஓசை எழுப்பாது நண்பரே. இரண்டு கைகள் இருக்கும் வரையில் தான் அந்த ஓசை எல்லாம். சிங்களமும் சரி, துரோகக்கூட்டமும் சரி அந்த கை இல்லையே என்று ஏங்கும் நாட்கள் தூராத்தில் இல்லை நண்பரே. தலிபான்களை இந்தியாவும் பிறகு உலகமும் எதிர்கொள்ளும் காலம் விரைவில் வரும். அப்படி வரும் போது, வடக்கு முழுவதும் அழியும் வாய்ப்பு உண்டு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

@ஈழத்தமிழர்களை காக்கவேண்டும் என்று கெஞ்சினோமே, உயிர்களை கொடுத்தோமே, நாங்கள் எல்லாம். நாங்கள் எல்லாம் என்ன இந்திய நாட்டின் மக்கள் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா மன்மோகன் சிங்கு.@

ஈழ தமிழர்களில் ஒரு பிரிவான புலிகளை காப்பாற்ற கெஞ்சினீர்கள்.சில முட்டாள்கள் தீக்குளித்தார்கள்.இப்படி சில பேருக்காக தவறுகள் செய்ய முடியாது

')) said...

இவ்வளவு கோரங்கள் நடந்தும் ஒன்றுமே நடக்காதது போல் வந்து எழுதும் நண்பரே, நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா என்று சந்தேகமாக இருக்கிறது. நீங்கள் செய்யும் செயல், பக்கத்து வீட்டில் தானே தீ பிடித்துள்ளது என்று கொண்டாடும் செயலுக்கு நிகரான செயல். அந்த தீ அடுத்து உங்களது வீட்டிற்கு தான் வரும்.

இல்லாத புலிகளை பற்றி இப்போது என்ன பேச்சு நண்பரே. உங்களுடைய வெறி அடங்கி இருக்கும் என்று நம்புவோமாக.