Friday, July 17, 2009

ஆனந்த விகடனும் குப்பி திரைப்படமும் FeTNA 2009ம்

விகடனின் செய்தியாளர் பிரகாசு சாமி அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை 2009௦௦ நிகழ்ச்சிகளை தொகுத்து செய்தியாக வெளியிட்டுள்ளார் விகடனில்.

அந்த செய்தியின் தலைப்பு "அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த தமிழ் ஈழக் குரல்!" . தலைப்பிலேயே எவ்வளவு குழப்பம் பார்த்தீர்களா. தலைப்பை அவர் எப்படி வைத்திருக்க வேண்டும் "அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த ஈழ தமிழ் குரல்!" என்றல்லவா வைத்திருக்க வேண்டும்.

சரி போகட்டும் விட்டுவிடுவோம் என்று பார்த்தால் உள்ளே எழுதி இருக்கும் செய்திகளோ இன்னமும் குழப்பம்.

“இந்தப் பேரவையின் ஒவ்வோர் ஆண்டு விழாவிலும் புலி அனுதாபிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அதனாலேயே அமெரிக்கா, கனடா,இலங்கை மற்றும் இந்திய உளவுத் துறையினரின் கண்காணிப்புக்குள் இடம்பிடித்துவிடும். இந்த முறையும் அப்படித் தான்!"

அங்கே விழா நடந்த 3 நாடக்களும் எந்த மேடையிலும் எந்த அரங்கிலும் புலிகளை பற்றியோ அல்லது புலித்தலைவரை பற்றியோ எந்த வித அலசலும் இல்லை பேச்சும் இல்லை. இது தான் உண்மை.

இந்த பிரகாசு சாமி விகடனில் பணம் வாங்கிக்கொண்டு வேறு எங்கேயோ சென்று பொழுதை கழித்துவிட்டு ஊர் திரும்பும் பொது அவரது கற்பனைகளுக்கு எட்டியவைகளை நடந்ததாக கற்பனையாக செய்தியாக்கி வெளியிட்டு இருக்கிறார் இந்த செய்தி வியாபாரி.

இப்போது விளங்குகிறது ... …. …. கூட்டத்திற்கு என் அவ்வளவு கெடுபிடிகள் இருந்தன என்று.

அனேகமாக அந்த அமர்வில் கைதட்டி ஆராவாரம் செய்தற்கு கண்டிக்கப்பட்ட ஒரே நபர் இந்த மனிதனாகத்தான் இருக்கும் போலும்.

இந்த கூட்டத்தை பற்றிய இன்னமும் ஒரு இமாலய பொய் "பேச்சுகளுக்கிடையில், வன்னியில் நடை பெற்ற படுகொலைகளை, சித்ரவதைகளை புகைப்படங்களாகத் திரையில் காட்டினார்கள். பிணக்குவியல்கள், முடமான மனிதர்கள் என உலுக்கிப்போட்ட அந்தக் காட்சிகளைப் பார்த்து, அந்த அரங்கத்தில் இருந்த குழந்தைகள் பயப்பட, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கண்களைப் பொத்த வேண்டி வந்தது."

இந்த பொய்யை எழுதியதிற்காக இந்த செய்தியாளரை கொண்டு சென்று சிங்களத்தின் வதை முகாமில் சாகும் வரை இருந்து செய்திகளை சேகரிக்க செய்ய வேண்டும்.

அறிவு கேட்ட செய்தியாளா இத்தணை படங்களை வெளியிட்டுள்ளாயே அப்படி காண்பித்த படங்களையும் வெளியிட வேண்டியது தானே எங்கே அந்த படங்கள் தயவு செய்து வெளியிடவும்.

என்னக்கு தெரிந்த வரையில் கொஞ்சம் அதிகமாக இருந்த படம் என்றால் அது நாசி படையில் கொண்ட தடுப்பு முகாமையும் சிங்கள படையின் தடுப்பு முகாம்களையும் ஒருங்கே காட்டிய படம் ஒன்று தான். அந்த படத்திலும் இவர் சொல்வது போல் பிணக்குவியலும் இல்லை அகோர காட்சிகளும் இல்லை.

"தமிழ் விஞ்ஞானியான 'சந்திராயன்' மயில் சாமி அண்ணாதுரை" இது பிரகாசு சாமியின் வரிகள் அதை விகடன் அப்படியே வெளியிட்டு இருக்கிறது. அமாம் தெரியாமல் தான் கேட்கிறேன் அது என்ன "தமிழ் விஞ்ஞானி". ஒன்று விஞ்ஞானி என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் அல்லது 'சந்திராயன்' மயில் சாமி அண்ணாதுரை என்று குறிப்பிட்டு இருக்கவேண்டும். இரண்டும் அல்லாது அது என்ன "தமிழ் விஞ்ஞானியான 'சந்திராயன்' மயில் சாமி அண்ணாதுரை". எழுதியவனுக்கு தான் அறிவு இல்லை இதழின் ஆசிரியருக்கும்மா அறிவு இல்லாமல் போனது. என்னே கொடுமையடா இது. இந்த இலட்சணத்தில் இந்த இதழ்தான் தமிழர்களின் மனசாட்சி என்ற தம்பட்டம் வேறு.

அந்த விழாவின் நாயகனாக சொன்னால் அது கட்டாயம் 'சந்திராயன்' மயில் சாமி அண்ணாதுரை தான். இந்திய தேசத்தின் செயல் விச்சுகளை உலகுக்கு அறிவித்தவர் அவர். அத்தணை பெரியவர் அவர், அந்த மனிதரோ சக மனிதர்களை சந்திப்பதிலோ அல்லது பேசுவதற்கோ எந்தவித தயக்கமும் பந்தாவும் காட்டாத அந்த மனிதனை பற்றி எந்த ஒரு செய்தியும் இல்லை முதல் செய்தியாக வைரமுத்துவின் பேச்சும் அனுராதா அவர்களது இசை நிகழ்சிகள் மட்டும் தான் செய்திகள் என்று எழுதி இருக்கும் உன்னை கட்டாயம் சிங்கள தடுப்பு முகாமுக்கு தான் அனுப்பவேண்டும்.

இதிலே நடராசர் இப்படி பேசினார் அப்படி பேசினார் என்று எல்லாம் எழுதியுள்ளிர்களே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா. அவர் பேசியது இவ்வளவு தான் "தமிழஅருவி மணியன் ஐயா சொன்னதை அப்படியே மறுபடியும் சொன்னார்" அவ்வளவு தான் இடையிடையே இதை முதல்வர் செய்யவில்லை என்றால் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று குறைந்தது ஒரு 20 முறையாவது சொன்னார் என் அதை பற்றி உங்களது செய்திகள் இல்லை.

மொத்தத்தில் நடராசர் பேச்சு கவிஞர் செய பாசுக்கரன் அவர்கள் சொன்ன புதுக்கவிதை போலத்தான் இருந்தது. அந்த கவிதையின் பிரதி இல்லை அரசூரான் தொகுத்து கொடுத்த அந்த கவிதை இதோ

இருபது முறைகளுக்கு மேல் எதிரிகளை
"எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்"
என்றாய்...சலனமற்றுக் கிடந்த உன்
ஆதரவாளர்கள் முன்னிலையில்.


பலமுறை"நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்"
என்றாய்...அதை தாண்டி நீ சொன்னது
எதுவுமே விளங்கவில்லை.

அடிக்கடி"இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்"
என்றாய்...ஆயினும் ஒன்றை கூட
குறிப்பிட வில்லை.

கடைசியில்"இறுதியாக ஒன்றை சொல்லி விடை பெறுகிறேன்"
என்றாய்...அந்த ஒன்றையாவது
சொல்லிவிட்டு போயிருக்கலாம் நீ.

கலைஞர் வாழ்த்து செய்திகள் இல்லை என்ற கவலை வேறு பாவம் உங்களுக்கு. எங்களை பொறுத்தவரை காணாமல் போனது அவரது வாழ்த்துகள் மட்டும் இல்லை அவரும் தான். ஆபத்தில் தான் தெரியும் உனது உண்மையான நண்பன் யார் என்று ஒரு வழக்கு உண்டு, இப்போது தெரிகிறது எங்களுக்கு அவர் யார் என்று. காலத்திற்கு தான் நாங்கள் எல்லாம் நன்றி சொல்லவேண்டும்.

உண்மையில் விழாவில் உணவு இடைவேளைக்கு கூட நேரம் இல்லாமல் 3 நாட்களும் மிகவும் கடுமைய தொரு நிகழ்ச்சி நிரலில் சென்றது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் தொழில் முறை கலைஞர்களை கொண்டு நடத்தியது போல் தமிழ்ச்சங்கங்கள் கூட்டமைப்பு நடத்திக்காட்டியது. அந்த நிகழ்சிகள் எல்லாம் உங்களின் நினைவுக்கு வரவே இல்லை போலும். இல்லை இங்கேயும் சிங்கள துதரகம் தனது கைவரிசைகளை காட்டியது போலும்........................


குப்பி படம் அனேகமாக அனைவரும் பார்த்து இருப்பிர்கள் என்று நம்புகிறேன். அந்த படத்தின் நோக்கமே புலிகளை கொடூரமாகவும் அதே சமயம் கோழையாகவும் காட்டவும் முயற்சி செய்யப்பட்ட படம். அதை போல அங்கே தமிழ் பேசும் மக்கள் அழிக்கப்படுகிறார்கள் என்று சொன்னால் புலி என்று சிறுத்தை என்றும் உலகுக்கே ஆபத்து என்று அமேரிக்காவில் வந்து சொன்னயே செய்தியாளா எலன் அம்மையாரின் பேச்சை கேட்டவது உனக்கு அறிவு வந்திருக்க வேண்டாம். அந்த அம்மையார் 6 மாத காலம் அவர்களோடு தங்கி மருத்துவம் புரிந்தவர்கள் சொன்னார்கள் அவர்களின் செயல்களை பற்றி, உங்களை போல் இல்லாததையும் பொல்லாததையும் ஒன்றும் சொல்லவில்லையே. அந்த அம்மையாரை விமர்சனம் செய்யும் தகுதி எல்லாம் உங்களுக்கும் இல்லை உங்கள் ஆனந்த விகடனுக்கும் இல்லை.


பேசாமல் போய் நடிக நடிகைகளை பற்றி கிசு கிசு எழுதும் உங்களுக்கு அது தான் சரியான வேலை..................வந்துடாரு விமர்சனம் எழுத..........................

5 comments:

')) said...

ஒரு சில கண்ணியமான பத்திரிக்கையாளர்களைத் தவிர்த்து, ஏனைய பத்திரிக்கை கணவான்கள் நீங்கள் கொடுக்கும் காசுக்கு ஏற்ப தான் செய்திகளை கற்பனை கலந்து எழுதுகின்றனர். இது நான் கண்கூடாக கண்டறிந்த உண்மை. நன்றாக உறைப்பதைப் போல் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

')) said...

I will say it is the festival organisers mistake, Why did you invite people from Tamilnadu and blaming later.

At least for the next function, please invite people from srilanka (tamil speaking srilanka, eelam people).

Even I dont know why you have invited kanika, anuraadha sriram etc. If so there is no difference between your function and MAAN AADA MAYIL AADA.

')) said...

3 ஆம் நாள் விழா முழுக்க முழுக்க இலக்கியவிழா. அந்த விழாவில், விழா அரங்கில் இந்த அட்களைவிட 3 மடங்கு ஆட்கள் கீழ் தளத்தில் இருந்த உணவகத்தில் உண்டு கொண்டும், அங்கே இருந்து கிளம்ப இருக்கும் நடிக நடிகைகளையும் பார்த்துவிட்டு வழியனுபுவதிலும் மும்முரமாக இருந்தார்கள். முதல் இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சிகள் மக்கள் தங்க வைப்பட்ட இடத்தில் இருந்து 5 மைல் தொலைவில் ஒரு அரங்கில் நடந்தது. அந்த தூரத்திற்கு சரியான நேரத்தில் வந்த இவர்கள், தங்கி இருக்கும் இடத்திலேயே நடந்த இலக்கிய விழாவிற்கு எட்டி கூட பார்க்கவில்லை.

அந்த மேடையில் தான் குறிப்பிட்டார்கள், முதல் இரண்டு நாள் விழாவை நடத்தியற்கு காரணம் இந்த 3ஆம் நாள் விழாவை கூட்டும் நோக்கத்தோடு தான் என்று. குறைந்த மக்களே வந்திருந்தாலும், 3ஆம் நாள் விழா வெகு சிறப்பாக இருந்தது. பேசிய அனைத்து மக்களும் சிறப்பாக பேசினார்கள். வைரமுத்து 1 மணி நேரம் பேசுவார் என்று விழா குறிப்பில் இருந்தது. அவர் உள்ளூரிலேயே இருந்து கொண்டு விழாவுக்கு வரவும் இல்லை. ஏன் வரவில்லை என்று தெரிவிக்கவும் இல்லை. என்ன ஒரு பொறுப்பற்ற தனம், அலட்சியம் அந்த மனிதனுக்கு. அவரது கவிதைகளில் இருக்கு மிடுக்கு மனிதனுக்கு இல்லை போலும்........

')) said...

ஆனந்த விகடனின் செய்திக்கு அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் தலைவர் வெளியிட்டிருக்கும் கண்டனங்கள் இங்கே சென்று பார்க்கவும்.

http://maniyinpakkam.blogspot.com/2009/07/blog-post_2067.html

இதை படித்தால் தெரியும் எவ்வளவு குறுகிய எண்ணத்துடன் ஆனந்த விகடனில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று.

')) said...

Very well written. We need to ensure that this is sent to Vikadan Editorial Board.

MV