பெட்னா 2009ல் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களில் அதிகம் மக்களின் கவனத்தை கவர்ந்தவர் தமிழ் அருவி மணியன் ஐயா அவர்கள்.
விழா மேடையில் 4 அமர்வுகளில் பல தரபட்ட தலைப்புகளில் எழிர்சி மிக்க உரை நிகழ்த்தினார். என்ன பொருளை எடுத்துக்கொண்டாரோ அந்த பொருளை விளக்கியும் அந்த பொருளை சார்ந்த செய்திகளையும் மிகவும் அழகாக மக்களுக்கு கொடுத்தார்.
நிறைவ பொருளில் நிறை நிகழ்வுகளை அவர் தந்திருந்தாலும் அவரது உணர்வு கொள்வோம் என்ற பொருளில் அவர் கொடுத்த உரை சபையில் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சிகளின் முதல் நாள் மதியத்தில் இந்த உரையை ஐயா நிகழ்த்தினார்கள்.
பேச்சுகளில் அவர் முதலில் குறிப்பிட்ட செய்தியில் கதி கலங்கினோம். பின்னர் அதன் பொருட்டு அவர் கொடுத்த காட்டுக்களையும் நிகழ்வுகளையும் பார்க்கும் போது, அவர் உரைப்பது சரியே என்று விளங்கியது.
ஈழத்து நிலைமைகளை வெகு தொலைவில் இருந்து நோக்கி நமக்கு அதை தொடர்ந்து தமிழகத்தில் வந்த அரசியல் அனுகு முறை மாற்றங்களை பார்க்கும் போது. தமிழகத்து மக்கள் ஒரு மாற்றத்திற்கு தங்களை ஆளாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தான் அத்தணை ஊடககங்களும் செய்தியாக்கி கொண்டு இருந்தது.
ஐயா பேசும் போது முதலில் சொன்னார், அப்படி எந்த ஒரு உணர்வும் அங்கே இருக்கும் தமிழக மக்களிடம் இல்லை என்றார். மனது பதைக்க துவங்கியது. என்ன இப்படி சொல்கிறார்கள் என்று பார்த்தால், உண்மை நிலை அப்படி தான் இருக்கிறது என்றும். எந்த கட்சி என்ன என்ன தில்லு முல்லு வேலைகளை எல்லாம் நடத்த முடியுமோ அதை எல்லாம் முயன்று தான் வெற்றிகளை கொண்டது என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வுகளுக்கு காட்டாக அவர் காட்டியது சிவகங்கை தொகுதியின் முடிவுகளில் வந்த குழப்பத்தையும். அதை எப்படி காங்கிரசு கட்சி தங்களுக்கு சாதமாக மாற்றிக்கொண்டது என்றும் குறிப்பிட்டார்.
நல்ல தமிழில் அழகாக பேசினார் ஐயா. அதே சமயத்தில் கலைத்துறைக்கு கொடுக்கும் முக்கத்துவம் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கோ அல்லது மற்ற நிகழ்சிகளுக்கோ கொடுப்பதில்லை என்றும் வருத்தோடு குறிப்பிட்டார்.
மேடையில் பேசும் போதும் சரி அவரிடம் பேசுகையிலும் சரி நல்ல தமிழிலேயே ஐயா அழகாக பேசினார்கள் என்றது குறிப்பிட தக்கது.
உணவு இடைவேளையின் போது வெளியே மரத்தடி நிழலில் நின்று கொண்டு இருந்தவரடிம் கேட்டோம் தமிழகத்து இந்த நிலையில் எப்போது தான் மாற்றம் வரும் என்று. அதற்கு ஐயா, இதற்கு என்று ஒரு இயக்கம் தொடங்க்கப்பட வேண்டும். ஊருக்கு 2 பேராவது காசு பணம் எல்லாம் ஒன்றும் முக்கியம் இல்லை, கட்சி ஒரு முதலீடும் இல்லை. கொள்கையே வாழ்க்கை என்று இருக்கும் மக்களை கண்டுபிடித்து அவர்களை கொண்டு ஒரு இயக்கம் நடத்தினால் மட்டும் தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று குறிப்பிட்டார்கள்.
எவ்வளவு பெரிய அரசியல் தலைவர் அவர், தமிழ் அருவி என்ற பட்டம் பெற்ற இலக்கியர் அவர். என்ன ஒரு எளிமையாக மக்களை சந்தித்தார். அந்த வெயிலிலும் படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கேட்டவர்களுக்கும் சரி. செவ்வி வேண்டும் என்று விகடன் செய்தியாளன் அந்த வெயிலிலேயே நிற்கவைத்து கேள்வி கேட்ட போதும் சரி. ஐயா சிரித்த முகத்துடன் எதிர்கொண்ட விதத்தை பார்க்க வியப்பாக இருந்தது.
3 நாள் நிகழ்வுகளையும் அங்கேயே இருந்து இரசித்தார்கள். 3ஆம் நாள் இலக்கிய நிகழ்சிகளுக்கு பிறகு விடைபெரும் போது சென்னைக்கு வந்தால் வீட்டுக்கு வாங்கள் என்று தொடர்பு எண்களை வழங்கிய அவர் எந்த செய்தியானாலும் நேரில் பேசிக்கொள்வோம் தொலைபேசியில் வேண்டாம் என்று எச்சரித்தது மனதுக்கு வேதணையை தந்தது.
ஈழ நிகழ்வுகளுக்கு தமிழகத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்விக்கு விடையளித்த அவர். பிடிக்கின்றதோ பிடிக்கவில்லையோ தமிழக தலைவர்களை கொண்டு தான் தில்லியில் காய் நகர்த்த வேண்டும். அப்படி நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இந்திய அரசியல் வாதிகள் ஒருவரும் அசைந்து கொடுக்க போவது இல்லை. என்றாலும் உங்களது முயற்சிகளை நீங்கள் அங்கே இருந்த்து தான் தொடங்க வேண்டும் என்று மிகவும் பொருப்பாக விடையளித்தார்கள்.
ஒரே மனிதனுக்குள் இருக்கும் சமுதாய, இன, தமிழ் உணர்வுகளை ஒருங்கே அங்கே இவர் மூலம் பார்க்க முடிந்தது. உணர்வு கொள்வோம் என்று முழங்க இவரை விட்டால் வேறு தகுதியான மனிதர் தமிழகத்தில் இருந்து கிடைத்து இருக்க மாட்டார்கள் தான். ஐயா உங்களது சமுதாய பணிக்கும், தமிழ் பணிக்கும் எங்களது வணக்கங்கள், வாழ்க உங்களது தொண்டு.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
0 comments:
Post a Comment