Monday, July 6, 2009

(பெட்னா 2009) வட அமெரிக்கா தமிழ்ச்சங்க பேரவை - பாகம் 2

முதல் இரண்டு நாட்களுக்கு பிறகு இறுதி நாளான மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் இலக்கிய நிகழ்சியக அமைத்து இருந்தார்கள் விழா குழுவினர்கள்.

இலக்கிய நிகழ்ச்சிகளாக திரு.தமிழருவி மணியன், திரு.சிலம்பொலி செல்லப்பன், கவிஞர் திரு.செய பாசுகரன் அவர்கள் வழங்கினார்கள்.

இந்த இலக்கிய கூட்டம் மிகவும் ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட கூட்டமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. அவரவர் பங்குக்கு மிகவும் ஆழமாகவும் அழகாகவும் உதாரணங்களுடன் விளக்கினார்கள்.

சிலம்பொலி ஐயா விளக்கிய சிறப்பு நாடக நிகழ்சியும், தமிழ் இலக்கியங்களில் இருந்து இலக்கிய உதரணங்களை தமிழர்கள் காட்ட தவறுவதையும் மிகவும் வருத்தமாக ஆழ்ந்த கருத்துகளுடனும், தகுந்த உதாரணங்களுடன் விளக்கினார்கள்.

கவிஞர் ஐயா செய பாசுகரன் அவரது பங்காக சொன்ன மையில், கைப்பை, சாமியார் கவிதைகள் மிகவும் அருமை. மகிழ்ந்தோம் சிரித்தோம் ஒவ்வொரு கவிதைக்கும் அவ்வளவு நேரம் சிரித்தோம். உண்மையிலே புதுக்கவிதைகள் அழகுதான், அவர் குறிப்பிட்டது போலே.

நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்டதை போல் வைரமுத்து விழா மேடைக்கு ஊரில் இருந்தும் வராமல் போனதை பார்க்கும் போது மிகவும் வருத்தமா இருந்தது.

நிறைவுரையில் அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள். முனைவர். இரா திருமுருகன் அவரது ஆராய்ச்சி தொகுப்பான காவடி சிந்துவையும் எங்களிடம் கொடுத்து அனுப்பினார்கள். மனதுக்கு நிறைவாகவும், மகிழ்ச்சியகவும் விழா மண்டபத்தை விட்டு சென்றோம். வெளியே வந்தும் விழா ஏற்பாட்டாளர்களையும் முக்கிய விருந்தினர்களையும் தனி பட்ட முறையில் பார்த்து விடைபெற்றுக்கொண்டு வருவதற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் பிடித்தது.

வாழ்க பெட்னாவின் சேவை வாழ்க அந்த குழுவினர்கள்.

2 comments:

')) said...

ஊரில் இருந்தும் வராத.... வருத்தம், வருத்தம்!!

')) said...

வாருங்கள் பழமை பேசி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கடைசி நாள் நிகழ்ச்சிகளில் வைரமுத்துவின் கவிதைகளை எதிர்பார்த்து ஓடோடி வந்தோம், ..... கனவுகளாவே அது போனது. அந்த இழப்பை திரு செயபாசுகரன் அவர்கள் நிறைவு செய்தார். இங்கு நடமாடும் கலைகூடமே மேற்கோள் அருமையோ அருமை.