Wednesday, March 18, 2009

இந்திய அரசியலில் தமிழகம் கொடுக்கப்போகும் மாற்றம் எப்படி இருக்கும்

தனது சொந்தங்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வருவதை கண்டித்து அவர்களை காப்பாற்றுங்கள் என்று தமிழக மக்கள் பரிவோடு தமிழக அரசையும் இந்திய அரசையும் கேட்ட பொழுது. இரண்டு அரசும் கனிவோடு காப்பாற்றுவோம் என்று உதட்டு சிரிப்புடன் சொல்லிவிட்டு, பின்னாளில் அனைவரும் கொல்லப்பட்ட சேதிக்காக காத்துகிடந்ததை நாம் பார்த்தோம்.

ஈழத்தில் நடப்பதோ சுதந்திர போராட்டம். இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் இந்தியாவுக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத சப்பான் நாடு சந்திரபோசுக்கு விமான படையில் பயிற்சியும் அளித்து, தாக்குதல் நடத்த படையையும் கொடுத்து உதவியது அந்த காலத்தில்.

அதை போல் இல்லை என்றாலும் தங்களாலும் தங்களது சொந்தகளாலும் வளர்த்து எடுக்கப்பட்ட போராட்ட இயக்கம் விடுதலை புலிகள் இயக்கம்.

தங்களது சொந்த முயற்சியில் வளர்த்து எடுத்த இயக்கம் தனது இக்கட்டான நிலையில், தனது தாயகத்து மக்களை மட்டுமாவது காப்பாற்றுங்கள் என்று தூதுவிட்டும். பாரா முகமாக மட்டும் இல்லாமல், சீரரை தானும் சேர்ந்து கத்தியால் குத்தியதை பார்த்த நொடியில் நீயுமா புரூட்டசு என்று அந்த துரோகத்தை தாங்காமல் பிரிந்த அந்த சீசரின் நிலைக்கு அல்லவா இந்த இரண்டு அரசுகளும் நடந்துகொண்டு வருகிறது.

தமிழகத்து மக்களின் மனதில் இருக்கும் ஒரே கேள்வி இது தான். இன்றைக்கு வெளி நாட்டில் இருக்கும் நமது சொந்தங்களை கைவிட்டது தமிழக அரசும் இந்திய அரசும். இதை முன்னுதாரனமாக கொண்டு அடுத்த மாநிலத்தில் இருக்கும் நமது சொந்தங்களை அடுத்த கட்டமாக பலியிடும். பிறகு சொந்த மண்ணிலே கூட தடி எடுத்தவன் தண்டல்காரன் என்று கொல்ல வரும் போதும் இந்த அரசுகள் இப்படி தானே வேடிக்கை பார்க்கும்.????????? என்ற கேள்வி தான் இப்போது அனைவரது மனதிலும் இருக்கு.

அடுத்தவனை காப்பாற்று என்று சொல்லப்போய் இப்போது தனக்கே பதுகாப்பு இல்லை என்ற நிலையில் தான் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று இந்தியாவும் தமிழகமும் முடிவு செய்துள்ளது அறிவித்தும் வருகிறது.

நாட்டுபற்று அடுத்த நாட்டின் ஆட்சியில் தலையீடு இப்படி எத்தணை பசப்பு வார்த்தைகளை சொன்னாலும். திரைக்கு மறைவில் அந்த அப்பாவி மக்களை கொன்று குவிக்க இன்னமும் இரகம் இரகமாக ஆயுதங்களையும், அவர்களது மறைவிடங்களை செயர்கைகோள் படமும் உளவு விமான படங்களும் கொடுத்து. அப்படியும் அந்த மறமண்டைகளுக்கு செயலாற்ற தெரியவில்லை என்றது, இந்திய தேசிய படையின் கட்டளை அதிகாரிகளை கொண்டே இந்தியர்களின் சொந்தங்களை கொன்று குவிக்கும் இந்த இந்திய அரசை என்ன என்று சொல்வது.

ஒரு 300 பயணிகளை விமானத்தில் கடத்திவைத்துக்கொண்டு 250 கோடி பணமும் தீவிரவாதிகளையும் கேட்ட அமைப்புக்கு அயலுறவு அமைச்சர் தனி விமானத்தி சென்று கேட்டப்படி பணமும் கைதிகளைம் கொடுத்து மீட்டு வரவில்லை. அவர்கள் யாரும் தமிழர்கள் இல்லை அதனால் தானோ.

காசுமீரத்தின் மனிதர் மைய அரசிலே அங்கம் வகித்த முக்தி முகமதின் மகளை தீவிரவாதிகள் கடத்திக்கொண்டு போனபோது அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுத்த மீட்டு வரவில்லை.

நமக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் இருந்த வங்காளிகளை காப்பாற்ற படை எடுத்து அந்த நாட்டை பாக்கிட்த்தானத்திடம் இருந்து விடுதலை பெற்றுக்கொடுக்கவில்லை.

இன்னமும் எந்தணையோ செய்கைகளில் தமிழார்கள் அல்லாத மற்ற மாநிலத்து மக்களை மட்டும் இந்தியர்களாகவும் மனிதர்களாவும் இந்தியா நினைப்பது ஏன்.

தமிழகத்தில் ஒரு பொது முன்னேற்ற வேலை நடந்தால் அதை உத்திரபிரதேச மக்கள் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கும் தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம். ஆனால் நீதிமன்றங்கள் அந்த உத்திரபிரதேச மக்கள் சொல்வதைகான் எடுத்துக்கொள்கிறது. தமிழகத்தையோ அல்லது அந்த மாநில மக்களையோ கணக்கில் கொள்ளவில்லை.

இந்தியாவின் உதவியை நாடிய பக்கத்து தேசம் காசுமீரம், அப்படி எங்களை காப்பாற்றுங்கள் என்று கேட்ட ஒரே காரணத்திர்க்காக எதிர்களிடம் இருந்து அந்த மக்களை மீட்டு சுந்தந்திரமாக வாழவைத்து ஐ நாவையும் இன்னமும் என்ன என்ன பணக்கார நாடுகள் எல்லாம் இருக்கிறதோ அத்தணை நாடுகளையும் கூட்டி வந்து அங்கே மக்களாட்சி வளர்ந்து மரமாகி இருப்பதை படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று இந்தியா சொல்லவில்லை.

நல்லவேளை காசுமீரத்து மக்கள் வடக்கில் இருந்தார்கள் அதனால் காப்பாற்ற பட்டார்கள். இதுவே தமிழகத்தை சார்ந்த ஒரு பகுதியாக இருந்தால் அவ்வளவு தான். அதுவும் மேல் தோல் கொஞ்சம் கருப்பாகவும். செல்வம் இல்லாமல் அன்றாடம் காட்சிகளாக இருந்து இருந்தால். அதுவும் தமிழ் போசும் ஒரு அண்டை நாடாக இருந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும். வேறு என்ன ஈழத்தில் என்ன நடக்கின்றதோ அதே தான் நடந்து கொண்டு இருக்கும்.

இப்படி தமிழர்களையும் நமது மாநிலத்தையும் புழுதிக்காற்றைவிட கேவலமாக நடத்தும் இந்திய அரசியல் அமைப்பின் பால் இன்னமும் நமக்கு நம்பிக்கை இருக்கிறதா என்ன.

தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்களும் தங்களது விருபங்களை தெரிவித்த பிறகும் அதில் எல்லாம் எங்களுக்கு அக்கறை இல்லை. எங்களுக்கு என்ன மனதில் தோன்றுகிறதோ அதை தான் செய்வோம் என்று நடந்து காட்டும் அரசியல் வாதிகளையும் இந்திய மற்றும் தமிழக அரசுகளை எப்படி தண்டிப்பது???????

நம்மால் என்ன முடியும், நாம் என்ன சொன்னாலும் அவன் செய்வது தான் செய்வான் என்று இருந்துவிடுவோமா.

அல்லது அவர்களுக்கு தக்கபதிலடி கொடுப்பதா என்று நாம் சிந்தித்து பார்க்கும் வேளை இது.

நேற்று என்னடா என்று கேட்டவர்கள் நாளை ஐயா என்று கையேந்தி வரும் நாள் வருகிறது. அந்த கூத்தில், நான் தான் தமிழர்களின் தலைவன், நான் தான் தமிழர்களின் தாய், நான் தான் இந்தியாவின் தாய் என்று பசு தோல் போர்திய ஓணாய்கள் வரும். வார்த்தைகளில் தேனும் சர்க்கரையும் தடவி இனிக்க இனிக்க சிரிக்க சிரிக்க பேசும்.

இப்போது பதவியில் இருப்பவர்கள் நாடாளு மன்ற தேர்தலில் மத்தியிலும் மா நிலத்திலும் ஒரே கட்சி இருந்தால் தான் நம்மால் அதிக பலன்களை அடையமுடியும் என்று சொன்னது தனது கட்சியை சொன்னார்கள் என்று இன்று தெளிவாக தெரிந்துவிட்டது.

வேலூர் சிறையில் கொலைகைதிகளை இரகசியமாக சந்தித்து ஈழத்துமக்களை அழிக்க திட்டம் தீட்டிவிட்டு அப்பாவியாக அல்லவா நாடகம் ஆடினார் மைய ஆட்சியின் தலைவி. அன்றைக்கு தூக்கு வேண்டாம் என்று சொன்னதற்கு கைமாறாக அவர்கள் தமிழர்களை காட்டிக்கொடுத்தார்கள் போலும் அந்த கையால் ஆகா கைதிகள்.

இந்த இருவரையுமாவது நம்பலாம், ஏன் என்றால் இவர்கள் எப்போது துரோகம் மட்டுமே செய்வார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரியும்.

இவர்களை விட மிகவும் கீழ்த்தரமான ஒருவர் இருக்கிறார் இங்கே. அவர் நேற்றைக்கு வரையில் ஈழத்தில் செத்துமடியும் சிசுவை பார்த்து சொன்னார், போராட்டகளத்தில் ஏது ஒப்பாரி என்று. அதுவும், ஈழத்து மக்களில் தமிழர்கள் என்று ஒருவரும் இல்லை. அந்த சிசுக்கள் உட்பட எல்லோரும் சீருடை அணியாத போராளிகள் என்றும் அதனால் அவர்கள் இறப்பதில் ஒன்றும் பாவமோ பரிதாபமோ இல்லை என்று ஆங்கிலத்திலும் தத்துபித்து தமிழிலும் சொல்லி வந்தார்கள்.

இந்த கீழ்த்தரமான் செயல்களை பார்த்துகொண்டு இருந்த இந்தியாவின் பாசிச கட்சி தனது ஓணாய் முகத்தை தமிழகத்திலே அவிழ்த்துவிட்டது. எப்படி தெரியுமா தங்களால் தான் இந்த சோகத்திற்கு முடிவு கட்டமுடியும் என்று.

இந்த பாசிச கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களில் எல்லாம் இன சுத்திகரிப்பை மெல்ல மெல்ல சிறுபான்மையினர் மேல் ஆரம்பித்து நடத்திவரும் இந்த கட்சி சொல்கிறது அங்கே பாசிசம் நடக்கிறது அதை எங்களால் தான் தடுக்க முடியும். எங்களை மைய ஆட்சியில் அமர்த்துங்கள் என்று எந்த வெட்க்கமும் இல்லாமல் வந்து கேட்கிறது.

மைய ஆட்சியில் இருக்கும் அரசுக்கும் மா நில ஆட்சியில் இருக்கும் ஆட்சிக்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளார்கள் என்று தெரிந்து கொண்ட இந்த பாசிச ஓணாய் கட்சி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள திட்டம் தீட்டி முகத்திலே சாதுவின் வேடம் தரித்து வந்து நாடகம் நடித்துகாட்டியதை பார்த்த இந்த அம்மையாருக்கு ஒரே கோபம்.

தனக்கு நடிக்கவே தெரியவில்லை என்றாலும் இன்றைக்கும் எல்லோராலும் அன்பாக முன்னாள் நடிகை என்று சொன்னால் வெட்க்கப்பட்டு கொள்ளும் அவர், தன்முன்னே இன்னொருவர் அதுவும் பாசிச ஓணாய் அழகாய் நடிப்பதை பார்த்த அவரால் பொருத்துகொள்ள முடியாமல். ஒரு நல்ல நாள் பார்த்து, ஈழத்தவர்களுக்கு சம உரிமை கொடுக்கவேண்டும் என்று சொல்கிறார்.

இந்தியாவில் சம உரிமை இல்லாமல் இருக்கும் நிலையில் பாசிச கட்சி ஆட்சி புரியும் மா நிலத்தில் கொத்து கொத்தாக மக்கள், சிசு என்றும் பாராமல் கொல்லப்பட்ட போது. கொன்று குவித்தது தான் சரி என்று சொன்ன இவர். திடீர் என்று அடுத்தவன் ஓட்டி வந்த குதிரையி ஏறி பயணிக்கலானார்.

உடனே ஒரு கூட்டம் ஆகா என்ன அருமை, தமிழகத்தை காக்க வந்த வீராங்கனையே, வருடம் முழுவதும் ஓவெடுக்கும் ஓய்வு தெய்வமே என்று பட்டி தொட்டி எல்லாம் தட்டி கட்டி அலட்டிக்கொள்கிறார்கள் அந்த கட்சியினரும். இன்னும் சிலரும்.

ஆக மொத்தத்தில் தமிழர்களின் உணர்வுகளில் இவர்களுக்கு எந்தவிதமான அக்கரையும் இல்லை அதை இப்படி எத்தனை விதத்தில் தான் இவர்கள் நிரூபித்து காண்பித்தாலும் மீண்டும் தேர்தல் ஓட்டு என்று வந்துக்கொண்டு தான் இருக்கிறது.

என்ன செய்யலாம்..............

இரண்டு காரியங்கள் நம்மால் முடியும். ஒன்று இந்த அரசியல் சாக்கடையில் ஊரிய ஊழல் பெருச்சாளிகளுக்கு வாக்கே அளிக்காமல் இருந்து விடலாம். இது மிகவும் ஒரு பாதகமான எதிவினையை தோற்றுவிக்கும். காரணம் மக்கள் இப்படி செய்வார்கள் என்று தெரிந்தால் ஆயிரக்கணக்கில் கள்ள ஓட்டுக்களை கொண்டு அவர்களாகவே ஓட்டுப்போட்டுக் கொண்டு வென்று விடுவார்கள்.

இரண்டாவதாக, அனைத்து நாடாளு மன்ற தொகுதியிலும் பொதுமக்கள் யாராவது நிற்கவைத்து அவர்களை எல்லா தொகுதியிலும் வெற்றிபெற செய்து. நாட்டின் தலைமை அமைச்சர் தேர்வு நடக்கும் போது ஒட்டு மொத்தமாக அனைவரும் 40 தொகுதிகளிலும் தனக்கு இந்த நாடாளு மன்ற உறுப்பினர் பதவிவை விட்டு ஈழப்பிரச்சனையின் காரணமாக விலகுகிறேன் என்று விலகினால் அனைத்து கட்சிகளுக்கும் சவுக்கடி கொடுத்தது போல் அமையும். இந்த ஒரு முறை அல்ல ஈழத்து பிரச்சணை தீரும் வரையிலும் நாடாளுமன்ற தேர்தல் ஆனாலும் சரி சட்டமன்ற தேர்தல் ஆனாலும் சரி இப்படி தேர்தலை அரசே வேண்டாம் என்று நிறுத்தும் வரையில் செய்ய வேண்டும்.

பிறகு பார்ப்போம் இந்திய அரசு என்ன பாடு படுகிறது என்று............செய்வோமா நண்பர்களே வாருங்கள் இந்திய அரசியல் சூழலில் ஒரு சூராவளியை உருவாக்குவோம்.

0 comments: