Tuesday, March 31, 2009

பாசாக சொல்லிக்கொள்வது போல் அதனால் இலங்கை பிரச்சனைக்கு தீர்க்க முடியுமா

ஈழ பிரச்சனையை தமிழக கட்சிகள் எல்லாம் தயங்கி நிற்கும் போது திடீர் என்று யாவரும் எதிர்பார்க்காத விதமாக பாசாகவின் மூத்தவர் அத்துவாணி குமரியில் வைத்து இப்படி ஒரு அறிவிப்பினை வீசி விட்டு சென்றார்.

அன்றைக்கு வரை ஈழம் என்றால் போராளிகளாகவும், போர் என்றால் மக்கள் மடிவது இயல்பு என்று திமிர் உரையை மட்டுமே கொண்டு இருந்து வந்த அதிமுக அன்றைக்கு முதல் தனது தோலில் இருக்கும் துண்டின் நிறத்தை மாற்றி, ஈழத்தவர்களுக்கு சம உரிமை வேண்டும் என்றும் சொன்னதோடு நில்லாது. பிரியாணி உண்ணும் விரத்தத்தை மறுபடியும் ஒரு முறை நிகழ்த்தி காட்டி, அனேக ஈழவர்களது மன உளச்சளை சம்பாதித்து கொண்டது.

பாசாகவால் சொல்லப்படுவது போல் ஈழத்திற்கு ஒரு தீர்வை பாசாகவால் பெற்று தர இயலுமா என்று பார்ப்போம்.

ஈழத்து போராட்டம் நாட்டில் சம உரிமை இல்லை என்றது தவிர வேறு ஒன்றுமே இல்லை என்றது ஈழத்து போராட்டம் பற்றி அதிகம் தெரியாதவருக்கு கூட நன்றாக தெரியும்.

சம உரிமை இல்லை என்று சொன்ன பிறகு, உரிமை இல்லாதோர் இனிமேல் ஏன் என்று நாடுகடத்தலில் ஈடுபட்டது சிங்களம். அப்படி நாடு கடத்த முடியாதவர்களை சித்திரவதைக்குட்படுத்த துவங்கியது.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்தது போல் கொஞ்சம் கொஞ்சமாக மனித உணர்வுகளை இழந்து வந்த சிங்களம் கடைசியில் இப்பொழுது பாதுகாப்பு வளையம் என்ற ஒரு கண்ணியை அமைத்து அதிலே கதியற்ற மக்களை கொண்டு வந்து அணு அணுவாக சித்திரவதை செய்து மகிழ்ச்சி கொள்கிறது அந்த கொடூர சிங்களம்.

இந்த நிலையில் தவிக்கும் ஈழத்தவர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று துடிக்கும் தமிழக மக்களை தன் பக்கம் இழுக்க நினைத்த பாசாக அதன் மூத்த தலைவரை விட்டு எங்களுக்கு வாக்களியுங்கள் தமிழர்களது துன்பங்களை நீக்கி தருகிறோம் என்று அழகாக சொன்னதோடு மட்டும் நில்லாத இது எங்களால் மட்டுமே முடியும் என்று சொன்னார்கள் பாருங்கள் அத்துவாணி.

அடேங்கப்பா என்ன ஒரு கரிசனம் ஈழத்தவர்கள் மீது மட்டும் இல்லை, இந்த மொத்த தமிழ் சமுதாயத்தின் மீது என்று தான் முதலில் மக்களின் மனதில் தோன்றி இருக்கும்.

அது மட்டும் இல்லாது, ஈழத்தை காப்பதற்காக பாசாகவை தேர்ந்தெடுப்பது ஒன்றும் தவறு இல்லை என்ற வகையில் பதிவுகளும் நீண்டு கொண்டே சென்றதையும் பார்க்க நேர்ந்தது

சரி பேராய கட்சியை தூக்கி எறிவது தவிர வேறு வழி இல்லை என்றாகிவிட்டது. இனி மேல் நம்மை விட்டால் வேறு வழி தமிழர்களுக்கு இல்லை என்று ஆகிவிட்டது . ஆகவே இப்படி சொல்லி வைத்தால் நிறைய வாக்குகள் குவிக்கலாம் என்ற எண்ணத்தில் பாசாக அப்படி ஒரு தீர்மானத்திற்கு வந்து தான் இதை சொல்லி இருக்க வேண்டும் போலும்.

சரி பாசாக தான் கதி என்று நாமும் வாக்குகளை அளித்து ஆட்சி கட்டிலில் ஏற்றி விட்டால் என்ன நடக்கும். சென்ற 6 வருடங்களில் எப்படி வாய் மூடி மௌனியாக இருந்ததோ அதை தானே தொடரும். அதை விடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முற்படுமா என்ன?????????

எப்படி அப்படி உறுதியாக சொல்கிறேன் என்று கேளுங்கள்.......

சிங்களத்திற்கும் பாசாகவிற்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்கள் பார்க்கலாம். சிங்களத்திற்கு ஒரே இனம் தான் இலங்கையில் இருக்க வேண்டும். பாசாகவிற்கும் ஒரே ஒரு இனம் தான் இந்தியாவில் இருக்க வேண்டும் அது இந்துஇத்தானம் என்று ஆக்கவேண்டும் என்றதே கனவு.

சிங்களம் தடையாக இருக்கும் தமிழர்களை பெண்கள், குழந்தைகள், ஏன் கருவென்றும் பாராமல் அழித்துக்கொண்டு இருக்கிறது.

பாசாகவோ, அதே போல் வேற்று இன மக்களை அதே போல் பெண்கள், குழந்தைகள், கரு என்றும் பாராமல் ரொட்டி சுடும் அடுக்களைகளில் இட்டு ரொட்டி சுடுவதை போல் சுட்டதோடு மட்டும் நில்லாது. இப்படி எல்லம் செய்கிறீர்களே என்றால், சுட்டால் என்ன என்று உலகத்தின் முன் தொலைகாட்சியில் காணிலியை கொடுக்கிறார்கள்.

இப்படி பாசிச சிங்களத்திற்கு அணு அளவும் வித்தியாசம் இல்லா பாசாக சொல்கிறது, ஈழத்தவர்களின் சம உரிமைக்காக போராடுவோம் என்று. எப்படி சொந்த மண்ணின் மைந்தர்களுக்கு சம உரிமை இல்லை என்று சொல்லும் இந்த கட்சி அடுத்த நாட்டில் வாழும் மக்களுக்கு சம உரிமை பெற்று தருவோம் என்று.

இது எப்படி தெரியுமா இருக்கிறது, ஆடு நனையுதேன்னு ஓணாய் ஒன்று உட்கார்ந்து அழுததாம் அது போல இருக்கிறது அத்துவாணியின் பேச்சு. போங்கயா, போய் வேற வேலை ஏதும் இருந்தால் பாருங்கள். போய் தேர், வில், அம்பு, அனுமார் என்று வேறு ஏதாவது கதை இருந்தால் எடுத்து வாருங்கள் ஐயா. அதை விடுத்து இப்படி விகடம் எல்லாம் செய்யாதீங்க, அப்புறம் நாங்க எல்லாம் அழுதுடுவோம், ஆமாம்..........

2 comments:

Anonymous said...

I dont know what expect from any parties . one thing you should know .

TELo conference was held in Madurai and Most of current NDA leaders are part of it . ( george(JD) and Vajpayee ( BJP ) . could you point any leaders from congress except Indra handled Srilanka issue better .

')) said...

அனானி அவர்களே, நான் தான் தெளிவாக சொன்னேனே, பாசகவின் கொள்கையே பாசிசம் தான். இதிலே பாசித்திற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம் என்று அவர்கள் சொல்வது ஏமாற்று வேலை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

நமது பேச்சை பாக்கிட்த்தானம் கேட்க்கவில்லை, மற்றும் சண்டையை கடைபிடிக்கிறது என்ற நிலையில் சார்க்கு மானாட்டில் எத்தணை விதமான சண்டித்தனங்களை இந்தியா மேற்கொண்டது. பாக்கிட்த்தானத்தை எங்களோடு வந்து துடுப்பாடம் விளையாடுங்கள் என்று கெஞ்ச வைக்கவில்லை. நாம் அப்படி இருக்க, பிறகு ஏன் எதுவுமே முடியாதது போல் நாடு நடிக்க வேண்டும்.

இதே வாட்சுபாயும் சியார்சும் இப்போதும் தான் அரசியலில் இருக்கிறார்கள். தமிழர்கள் கதறி அழுத அழுகைக்கும் மக்கள் தீகுளித்த போதும் ஏன் ஒரு அறிக்கை கூடி வெளியிடவில்லை என்று அவர்களால் விளக்க முடியுமா. பிறகு எந்த உரிமையிலும், நினைபிலும் இப்படி ஒரு வாசகத்தை அந்த கட்சி வெளியிட்டது. எனக்கு தான் தெரியவில்லை நீங்கள் தான் சொல்லுங்களேன் கேட்ப்போம்.