தலைப்பை பார்த்ததுமே அதிமுக வியாபாரிகளுக்கு பொங்கிக்கொண்டு தான் வரும். இருந்தாலும் கொள்கையோ அல்லது வேறு எந்த அடிப்படை காரணங்களுக்காகவும் இவர்கள் அந்த கட்சியை சார்ந்து இல்லாததால் இந்த அதிமுக வியாபாரிகள் இந்த மாதிரியான பதிவுகளுக்கோ அல்லது விமர்சனங்களுக்கோ பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்வது இல்லை.
இந்த முறை வாய்ப்புகிடைத்தால் என்ன என்னவற்றை எல்லாம் சுருட்டலாம், அதற்கு தடையாக இருப்பவர்களை எல்லாம் எப்படி எப்படி எல்லாம் கொல்லலாம் என்ற சிந்தையை தவிர அவர்களிடம் வேறு என்ன இருந்துவிட போகிறது.
அதிமுக கட்சியின் தலைவி என்று அறிவித்துக்கொள்ளும் செயலலிதா இந்த தேர்தலை வைத்து தனக்கு எப்படி எல்லாம் விளம்பரம் தேடலாம் என்று இப்போதும் கணக்கு போட்டுக்கொண்டு இருப்பார். அவரது கட்சியின் வியாபார கூட்டமோ என்ன என்ன வீர வசனங்களை எழுதி கொடுத்தால் அவருக்கு பிடிக்கும் என்று கவிஞர்களையும், வசனகர்த்தாக்களையும் தேடி பிடித்து அலைந்து கொண்டிருப்பர்கள்.
இந்த முறை உலகை ஆள தகுதியுள்ள ஒரே ஒருவர் செயலலிதா தான், பொருளாதார சரிவின் மூழ்கியிள்ள உலகை நல்ல நிலைக்கு கொண்டு வர செயலலிதா ஒருவரால் தான் முடியும் என்று, அதிமுக வியாபாரக்கூடம் பரணி பாடினால் ஆச்சரியபடுவதற்கு இல்லை தான்.
எந்த நம்பிக்கையில் அதிமுக இந்த தேர்தலை எதிர்கொள்கிறது என்று பார்ப்போம். சட்டமன்ற தேர்தலில் தோற்று போய் அழுவினியாட்டம் அழுவினியாட்டம் என்று சிறுபிள்ளை தனமாக அழுது தீர்த்து காணாமல் போனவர்கள் இந்த கட்சியினர். அதிலும் அந்த தேர்தலில் திமுகவை திட்டியதை விட விசயகாந்தை தான் அதிகம் திட்டி தீத்தது இந்த கட்சி. காரணம் விசயகாந்தால் தான் தனது வெற்றி வாய்ப்பு எட்டிப்போனது என்ற எண்ணம் அந்த அதிமுக கட்சியினருக்கு.
உண்மையில் அதிமுகவின் நிலை என்ன என்று பார்ப்போம்.
செயலலிதாவின் தலைமைக்கு அதிமுக வந்ததில் இருந்து அந்த கட்சியின் கொள்கைகள் குப்பையில் கொட்டப்பட்டது. அதற்கு முன் அப்படி என்ன கொள்கை இருந்தது என்று நீங்கள் கேட்ப்பது காதில் விழாமல் இல்லை. அதற்கு முன்னால் குறைந்தபட்சம், அந்த கட்சியின் தொண்டர்கள் பிழைக்க என்று ஒரு வழி இருந்தது. அதற்காகவே அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்களை வகுத்து கொடுத்து இருந்தார்கள். கட்சியின் சொத்தாக சுமைதூக்குந்து எண்ணிக்கை இல்லாமல் இயங்கி. இயகத்தையும் தொண்டர்களையும் ஒரு பிணைக்குள் வைத்திருந்தது.
அதற்கு பின்னால் நடந்ததை தான் நாடே அறியுமே, தலைமை எனக்கு தான் என்ற பாடலில் துவங்கிய துவக்கம். விளம்பரங்கள் உட்பட எல்லாமே எனக்குத்தான் என்று இன்றைக்கு நிற்பதை பார்கின்றோம்.
எந்த ஒரு தேர்தலுக்கும் எந்த ஒரு உழைப்பையும் செய்யாமல் எதிரி கட்சி பலவீன பட்டு நீற்கும் போது வேறு வழியே இல்லாமல் ஆட்சிக்கு வரும் இவர்கள் அடிக்கும் தம்பட்டம் இருகிறதே அடேங்கப்பா கேளுங்க கேளுங்க கேட்டுக்கொண்டே இருங்கள் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது.
செயலலிதாவின் முதல் ஆட்சி இராசிவ்காந்தியின் படு கொலையால் எழுந்த அனுதாப அலையால் வந்த ஆட்சி.
அடுத்த முறை வந்த ஆட்சி, திமுக என்ன தான் நன்மைகள் செய்தாலும், ஊழல் அற்ற ஆட்சியாக திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் அடிமட்ட தொண்டன் முதல் அமைச்சருக்கு கீழ் உள்ளவர்கள் வரை கொள்ளை அடிக்கமுடியாமல் போனதால். திமுக கண்ட நல்லாட்சியின் மகிமை அவர்களை ஆட்சியில் இருந்து விரட்டியது.
தற்பொழுது ஈழ பிரச்சனையில் தலையிடாமல் மட்டுமில்லாது, ஈழதிற்கு எதிராக நடந்து கொள்வதால் திமுக தனது நிலையை இழக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் அதிமுக எதிராள் பலம் இழக்கும் போதெல்லாம் சுமையை தாங்கும் வெறும் சுமை தாங்கி கல்லாக மட்டுமே இருந்து வந்திருக்கிறது செயலலிதாவின் தலைமையை கொண்ட பிறகு.
இதிலே வேடிக்கை என்ன என்றால், இந்த சுமை தாங்கி கல் கட்சியை என்னமோ மக்கள் பேரியக்கம் என்றும். அதன் தலைமை என்னவோ அரிசுடாடிலும், பிளாட்டோவும் இணைந்து நடத்தும் ஒரு பெரிய தத்துவ இயக்கம் என்றும் அந்த கட்சியின் வியாபாரிகள் சொல்ல முற்படுவது உண்டு. எப்போது தான் திருந்துவார்களோ.........
இந்திலே செயலலிதாவின் பொம்மலாட்ட வித்தகர்கள் இந்த முறை செயலலிதாவை இந்தியாவின் தலைமை அமைச்சராக அமர செய்வோம் என்று சொல்லி, மூன்றாவது அணி, நான்காவது அணி என்று சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்.
அதிலும் குறிப்பாக மத்திய ஆட்சியை கவிழ்தே தீர்வது என்று ஆட்டம் ஆடிய பொதுவுடமை கட்சியினர், திமுக விடம் பட்ட காயத்திற்கு பழி தீர்க்கும் விதமாக இந்த அதிமுகவிற்கு குடைபிடிக்க சென்றுள்ளனர்.
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்ற வழக்கிற்கு மாற்று வழக்காக திகழும் இராமதாசு பேச்சு தேர்தல் வந்த போச்சு என்று சொல்லும் அளவிற்கு பெயர்கொண்டவர் இரமதாசு. இந்த முறையும் தனது பச்சோந்தி தணமை அழகாக காட்டியுள்ளார்.
வைகோ இவரை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை, இவரது பேச்சு இவரது செய்கைகளுக்கு ஒத்து போகும் வரையில் இவரை ஒரு கொள்கை பிடிப்பாளாராக தமிழகம் கண்டது. ஆனால் என்றைக்கு உளவு துறையின் இரகசிய அறிக்கைகளை காட்டி அதிமுக இவரை மிரட்டி அவர்கள் பக்கம் இழுத்ததோ அன்றையில் இருந்து, இவரும் பொம்மலாட்ட வித்தகரின் இழுப்புக்கு எல்லாம் இவர் வளைந்து நெளிந்து அபினயம் பிடிப்பதை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.
இயக்குனர் சீமான் அவர்களின் பேச்சுக்கு இருக்கும் மதிப்பில் 100 ஒரு பங்கு கூட இவரது பேச்சுக்கு இல்லை என்றது தான் இவரது நிலை இப்பொழுது. பாவம் மனிதர், அப்படி என்ன தான் உளவு துறையின் அறிக்கை இவரை பற்றி சொல்லி இருக்கும். அனேகமாக பயங்கரமாக இருக்கும் என்று நம்புவோமாக.......
இந்த முறையும் அடுத்தவரின் குதிரையில் ஏறி பயணம் செல்ல அதிமுக தயாராக நிற்கிறது. அவர்களுக்கு ஏற்றார்போல், திமுகவும் அதீதித பலவீனப்பட்டு போய் நிற்கிறது. அந்த சுமைக்கல்லில் வெறுமனே உக்கார்ந்து பொழுதை கழிக்கும் வேலை இல்லா வெட்டிபயல்களது கைக்கு தமிழகமும் இந்திய அரசியலும் சிக்க போகிறதே என்ன செய்வோம்.................................இனி 6 ஆண்டு காலம் நமக்கு நரகம் தான்.....................அனுபவிப்போம் வேறு என்ன செய்துவிடமுடியும் சாமானியர்களால்.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
8 comments:
எனக்குப் புரிந்து ஜெயலலிதாவிற்கோ அவரது கட்சிக்கோ கொள்ளையைத் தவிர வேறு கொள்கை இருந்தது போலத் தெரியவில்லை. திமுக என்னும் குடும்பக் கட்சியை எதிர்க்க வேண்டியது எவ்வளவு தேவையோ...அவ்வளவு தேவை அதிமுக என்னும் வட்டிக்கடையை எதிர்ப்பதும்.
அதிமுக அடுத்தவரால் ஆட்சிக்கு வரும். திமுக தன்னால் மட்டுமே வீழும்.
சரியாக சொன்னீர்கள் இராகவன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பனிமலர் அக்கா/அண்ணா/தம்பி/தங்கச்சி/தோழா/தோழி,
வரலாறு காணாத நேர நெருக்கடியில் இருக்கும் நான் ஒருவாரகாலம் பிட்டு பிட்டாக ஒரு பதிவை தயாரித்து டிராப்டில் வைத்திருந்தேன். இன்று திடீரென்று அப்பதிவைப் போலவே நீங்கள் ஒரு பதிவை வெளியிட்டுள்ளீர்கள். இருந்தாலும் அந்தப் பதிவை வெளியிடுகிறேன்.
எனினும் பதிவு அருமை.
மோகன் அன்பிற்கு மிக்க நன்றி,
தேர்தல் அறிவிப்பு வந்துமே இப்படி ஒரு பதிவு எழுதவேண்டும் என்று இருந்தேன். நேர நெருக்கடியில் அணியமாகமல் போனது. இப்போது தான் கொஞ்சம் மூச்சுவிட நேரம் கிட்டியது.
முன்னே ஒரு முறை இனியவள் புனிதாவும் இப்படி தான் முறையிட்டார், எண்ணத்தில் தோன்றியதை எழுதினேன். வேண்டும் என்றால் நான் திருடிவிட்டேன் என்று திட்டிவிட்டு எழுதுகளேன். நான் ஒன்றும் சண்டைக்கு வர மாட்டேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நன்றாக எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
அம்மையார் காலில் விழும் படித்த,அறிவுலக இடது சாரித் தத்துவ மேதைகள்,பண்ம் பதவி ஒன்றே குறிக்கோளான புத்திசாலிகள் இவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.பாவம்,இவர்கள் மனிதர்களாகாவாவது மதிக்கப் பட்டால் சரி.மன நோயாளிகள்.
காங்கிரசு செய்த ஈழத் துரோகத்திற்கு அவர்கள் புதைக்கப் பட வேண்டியவர்கள்.
தி.மு.க.வினர் மன்னிக்கப் பட வேண்டியவர்கள்,ஆனால் மறக்கக் கூடாது அவர்களின் காங்கிரசுக் காதலை.
பா.ம.க மன்னிக்கக் கூடாதவர்கள்.
பதவி வெறியர்கள்.
ம.தி.மு.க எலியுடன் சேர்ந்த தவளைகள்,பரிதாபத்துக் குறியவர்கள்.
திருமா கொள்கைக்கும்,பதவிக்கும் சரி பங்கு போட்டுள்ளார்.ஆதரிக்கப் பட வேண்டியவர்.
விஜயகாந்த் தனியாகப் போட்டியிடும் துணிவு பாராட்டப் படவேண்டியது தான்.20 நாள் ஓடும் சினிமாவாக வேடிக்கைப் பார்க்கலாம்.
வாங்க அனானி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, திமுகவுக்கு என்னமோ ஆட்சி போகாமல் காப்பாற்றிக்கொண்டதாக நினைத்துக்கொள்கிறார்கள் பாவம். இல்லை என்றால் வைகோவை மிரட்டி வைத்துள்ளது போல் இவர்களையும் ஏதோ ஒரு பயங்கரத்தை காண்பித்து இனிமேல் அரசியலுக்கே வராமல் செய்துவிடுவதாக மிரட்டி இருக்கவேண்டும். காலங்களில் அவைகள் மெல்ல வரத்தான் செய்யும் அப்போது பார்க்கலாம் இவர்கள் எதனை கண்டு இப்படி தொடை நடுங்கினார்கள் என்று.
Such a third rated unprofessional analysis. If you want to project MK do it, but do not critizize VAIKO, communist,PMK and JJ because they all united. If any one of them joined with MK, you may dropped their name from this list. This is a DMK mouthpiece only.
வாங்க கோவிந்தன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. என்னை திட்டியதற்கு பதிலாக எதிர் வாதம் வைதிருக்கலாம். திமுகவின் சார்பாக என்ன எழுதியுள்ளேன் என்று சொல்லுங்களேன். அல்லது அதிமுகவும் அதன் கூட்டணியில் உள்ளவர்களை பற்றி சொன்னவைகள் எவைகள் தவறு என்று சுட்டவும். தெரிந்துகொள்கின்றேன், விளக்குவீர்களா.......
இவர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருப்பதாக வேறு நகைப்பாக சொல்லியுள்ளீர்கள். பேராய கட்சியின் முதுகில் ஏறி வெற்றி பெற்றதும், அந்த கூடணி தேர்தலோடு முடிந்தது என்று செயலலிதா சொன்னது எல்லாம் உங்களது நினைவில் இல்லையோ. பிறகும் கூட்டணி வேண்டும் என்று தில்லிக்கு சோதியையும் , சோவையும், சாமியையும் கொண்டு அலையோ அலை என்று அலைந்து பிறகு சீச்சி இந்த பழம் புளிக்கும் என்று மைனோ குய்னோ என்று செயலலிதா பிதற்றி திரிந்ததெல்லாம் உங்களுக்கு மறந்து தான் போய் இருக்கும் போலும். நன்றாக நினைத்து பாருங்கள் உங்களுக்கு மெல்ல விளங்கும்.
Post a Comment