Tuesday, March 3, 2009

இந்தியாவின் மணிமகுடத்தில் இன்னும் ஒரு மணியை பதித்த இரகுமான் - வாழ்த்துக்கள்.


ஆச்சுகர்(Oscar) விருது, திரைத்துறையின் கனவு அது. இந்திய திரைதுறையில் இந்தியர்கள் அதிம சாத்திக்காத விடயம் இது. இந்திய திரைதுறையில் இந்தியர்கள் அதிம் சாத்திக்காத விடயம் இது. யாரேனும் ஒருவர் பெறுவாரா என்று இந்தியவே தவம் இருந்த காலம் போய், வாய்புகள் கொடுங்கள் சாதித்துகாட்டுவோம் என்று உலகுக்கு அறிவித்த மனிதன் இவர்.

தனது முதல் படத்திலேயே நாடளவில் சாதித்துகாட்டிய இவர், தனது அனைத்துலக அளவில் கிடைத்த முதல் வாய்ப்பினையும் அழகாக சாதித்து காண்பித்துள்ளார் இவர்.


ஒன்று அல்ல இரண்டு விருதுகளை அள்ளிவந்து இந்திய அன்னையின் மணிமகுடத்தில் பதித்து அழகு பார்த்து நிற்கிறார் இந்த இசைப்புயல்.

விருது வழங்கும் விழாவின் துவக்கத்தில் காட்டும் சிவப்பு கம்பள வரவேற்பில் இரகுமானை காணவில்லை. மற்றவர்கள் அனைவரையும் காணும் போது இவரை மட்டும் காணோமே ஏன் என்று மனதுக்குள் தோன்றாமல் இல்லை.

இருந்தாலும் இவருக்கு விருது கட்டாயம் கிடக்கும் என்று அனைவரும் நம்பத்தான் செய்தோம். இருந்தாலும் அந்த அறிவிப்பு வரும் வரையில், தொலைகாட்சியையும் கூடவே இணையத்தையும் ஆராய்ந்த வண்ணமாகத்தான் அன்று பொழுதுகழிந்தது. அனேகமாக அனைவரும் இப்படி தான் இருந்து இருப்பார்கள்.


இந்த படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருந்த சமயம் படம் எப்படி தான் வந்து இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் நோக்கில் படம் பார்க்க சென்றோம். படத்தில் மிகப்பெரிய ஏமாற்றம்.



காரணம் இந்தியர்களான நம் அனைவருக்கும் தெரிந்த கதைகளம் அது. ஏழ்மையும் வருமையும் மாறி மாறி இந்தியர்களை கொன்று கொண்டு இருக்கும் ஒரு கதையமைப்பு அது.


இந்த கதை அமைப்பில் படங்களை எடுத்தால், வங்காள நாயகன் சத்ய சித்துரே அவர்களது படங்களில் இருந்து கருத்தம்மா படம் வரையில்லும். இந்த தலைமுறையின் படமான காதல் கொண்டேன் படம் வரையில் பார்த்த ஒரு கதையமைப்பு தான்.

இந்த செய்திகளை இப்படி அனைத்துலக பார்வையாளர்களுக்கு காட்சியாக்கிவிட்டார்களே என்ற கோபமும் முதலில் இருந்தது.

கோபத்துக்கு காரணம், படத்தின் இலக்கணம் கதையின் களத்தை முதலில் பார்வையாளர்களது மனதில் பதியவைத்து பிறகு கதையை நகர்த்த வேண்டும். அந்த இலக்கணத்தின் படி கதையின் துவக்கத்தில் களத்து காட்சிகளை காட்டுகிறேன் என்று காட்டும் காட்சிகளின் கொடூரங்கள் பார்ப்பவர்களை கட்டாயம் முகம் சுளிக்கவைக்கின்றது.


இது படம் பார்த்த அனேகர்களின் கருத்துமாகும், நண்பர்கள் அனைவரையும் விசாரித்ததில் பொதுவாகவும் இயல்பாகவும் வந்த ஒரு செய்தி அது.

படத்தின் துவக்கத்தின் முதல் காட்சியில் அந்த சிறுவன் பந்தை பிடிக்க முற்படும் வேளையில் எதிர்பாராத விதமாக அன்னேரன் ஒரு விமானம் அவனை கடக்கும் ஓசையில் பந்தை பிடிக்காமல் விடுவான். அந்த இடத்தில் தொடங்கும் இந்த இசையின் ஆதிக்கம். அனேகமாக படம் துவங்கி ஒரு 10 வினாடிகள் இருக்கும் அப்போது.


பின்னர் காட்சிக்கு காட்சி பின்னனி பின்னல்கள் பின்னுவதில் நாம் கதையோடு கரைந்து போவோம், அந்த அளவிற்கு இருக்கும் இசை.

இந்த பின்னனி இசை வருவதே பிறகு கதையில் மாயாவின் பாடல்கள் வரும் போது தான் பின்னனி இசை படத்தில் வருகிறது என்ற ஒரு தோற்றமே நமக்கு தெரியும். அந்த அளவிற்கு இயல்பான ஒரு இசையை இரகுமான் வெகு இயல்பாக சேர்த்து இருப்பார்.


இப்படியே காட்சிக்கு காட்சி திரைக்கதையும் சரி, மற்ற தொழில் நுட்பங்களும் சரி பார்வையாளர்களை முற்று முதலாக ஆக்ரமித்து இருக்கும் வேளையில். வளர்ந்த அந்த கதா பாத்திரங்களை நமக்கு காட்டுவார்கள் படத்தில்.




அதுவும் நாயகயின் தேர்வு அந்த படத்தில் அருமை, வருமையில் தோன்றி பிறகு வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கும் பாத்திரமாக காட்டும் அந்த பெண்ணின் உருவமும். அந்த உருவத்தை தொடர்வண்டி நிலையத்தின் பாலத்தின் மேல் இருந்து காட்டும் காட்சியும் அதன் பின்னனியும் சரி. அவள் வந்ததும் கதையில் இறுக்கம் பற்றிக்கொள்வதும் சரி. எந்த ஒரு காட்சியிலும் சரி தொழி நுட்ப்பம் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு பார்வையாளர்களை மிரட்டியது என்றால். அது மிகையாகாது.


இதிலே நடக்கும் நிகழ்வுகளில் நாயகன் தப்பிப்பானா, நாயகிக்கு என்ன ஆனது என்று பார்வையாளர்களை விளிப்பிக்கே கொண்டு வந்ததின் உச்சத்தில் நிறுந்தி இருப்பார் இயக்குனர் அந்த படத்தில்.

அந்த இறுதிகாட்சியில் கடைசி கேள்வியை கேட்டதும் நாயகன் ஒரு புன்னகிப்பான். அந்த புன்னகை ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்தி ஏற்படுத்தும்.


படத்தில் ஓட்டத்தின் மற்ற விடயங்களை இங்கே தவிற்பது மதி என்று நிறுத்திவைக்கிறேன்.

படம் துவக்கத்தில் இருந்து நமக்கு தெரியாமல் நம்மை ஆட்கொண்டவர்கள் நால்வர்.



1) திரைக்கதை
2) ஒளிப்பதிவு
3) இயக்கம்
4) இசை



படம் துவங்கிய கொஞ்ச நேரத்திற்கெல்லாம். பார்வையாளர்கள் இருக்கையிலேயே கட்டி போட்டதை போல் பார்த்துகொண்டு இருப்பதை உணர முடிந்தது. என்ன ஒரு வசீகரம் இந்த 4 துறைகளிலும்.

கடைசிகாட்சியில் அந்த நாயகனின் முத்தம் பெற்றவுடம் காட்சிகள் ஒரே ஒருமுறை பின்னோக்கு செல்லும். அதன் பிறகு படம் முடியும். அந்த தழும்பில் துவங்கிய காட்சி, தழும்பில்லா அந்த நிலைக்கு ஒரு முறை பயனித்து திரும்பும். என்ன ஒரு பின்னனி இசை காட்சிக்கோர்வைகள். சில வினாடிகள் தான். அந்த கதாப்பாத்திரம் அடைந்த நிம்மதி படம் பார்த்தவர்கள் அனைவரது மனதிலும். அந்த அழகு கண்கள் கொள்ளும் அமைதியை காட்டுவார்கள் படத்தின் இறுதியில்.


இந்த காட்சிகள் வரையில் பார்த்தது, பார்த்து பார்த்து பழகிய ஏழ்மை என்றாலும். அந்த கதாபாத்திரங்கள் மேல் நம்மையும் அறியாமல் ஒரு கருணை மனதில் தோன்றாமல் இல்லை. கதை தான் என்றாலும் படத்தில் வரும் காட்சிகளின் கொடூரங்கள் மனதை விட்டு அகல. சில நாட்க்கள் பிடித்தது தான்.


படம் முடிந்ததும் எழுந்து செல்லாம் என்று எழுந்தால், எங்களை தவிர பிறகு ஒருவரும் எழவில்லை. பிறகு தான் சொன்னார்கள். படத்தில் இப்போது வரும் பாடல் தான் இரகுமானின் ஆச்சுகருக்கான பாடல் என்று. கடைசி வரையில் இருந்து பார்த்துவிட்டுத்தான் வந்தோம்.


படம் முடிந்தவுடன், விருது கிடைக்குமா கிடைக்காதா என்ற விவாதம் எங்களுக்குள் எழ. பின்னனி இசைக்கும், திரைகதைக்கும், ஒளிப்பதிவுக்கும், இயக்கத்துக்கும் கிடைக்கலாம் என்று எனது கருத்துகளை சொன்னேன்.


மேலும் மாயாவின் பாடல்களுக்கு கிடைக்கலாம் என்ற ஒரு வாதம் வேறு. காரணம், அவரது இசை தொகுப்பில் இந்த மூன்றாம் உலகின் மக்களாட்ச்சியின் இலட்சணத்தை அருமையாக ஏற்கனவே படமாக்கி இருந்த அமைப்பு. மேலும், அவரது இசையின் முறை. அது தமிழிசையை இரேப்பாடலோடு இணைத்து வழங்கும் அவரது தனி தண்மையும் காரணமாக இருக்கலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு.




அனால் முடிவுகள் அந்த முடிசூடா மன்னன் இரகுமானுக்கு இரண்டு விருதுகளை அறிவித்தது. ஒன்றன் பின் ஒன்றாக. அந்த மேடையில் விருதை அவர் வந்து பெற்றுக்கொண்ட விதம். அதை தொடர்ந்து அவரது ஏற்புரை என்று அந்த விருதுகளையுன் விஞ்சி நின்றார் அந்த அற்புத மனிதன் இரகுமான் அந்த மேடையில்.


முகத்தில் என்ன ஒரு தெளிவு வார்த்தைகளில் தெரிந்த அந்த பரவசம் அவரது செய்கைகளில் தெரியவில்லை. அப்படி ஒரு நம்பிக்கை அவரது மனதில். ஆழ்ந்த அந்த நிலையில் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற தமிழில் வாசகங்கள்.


அவர் பெற்றவிருதில் பெற்ற மகிழ்சியை எல்லாம் விஞ்சி நின்றது அவரது செய்கைகள் அன்று.


எவ்வளவு பெரிய சாதணையை நிகழ்த்தி ஒன்றும் அறியா சிறுவனைப்போல் அதை இரசித்து நின்றகாட்சிகள் அவரது தன்னம்பிக்கையை மட்டுமே காட்டி நின்றது அன்று.


இதில் விருது வாங்கிய கையோடு சென்னைக்கு திருப்பியாச்சு. பாராட்டு பெற்ற குழந்தை உடனே தனது பெற்றோறை தேடித்து அடைக்கலம் தேடுமே அதைபோல சென்னையை தேடி பறந்தோடி வந்தார் அந்த மனிதன். வாழ்த்துகள் இரகுமான், இன்னமும் இது போல் பல சாதணைகளை நிகழ்த்தி இளை சமுதாத்திற்கு முன்னோடியாக திகழ எங்களது வாழ்த்துகள்.

வெறும் ஆச்சுகர் நாயகன் என்று உங்களை வாழ்த்தினால் அது உங்களது மனிதத்தண்மையை குறைத்து மதிப்பிட்டதாக ஆகும். ஆகவே உங்களின் சாதணையை இந்தியாவின் சாதணையாகவே கொள்வோம் நாம். ஏழ்மை, வருமை, வாய்பில்லை இது அது என்று எத்தணையோ காரணங்களை மனம் போன போக்கில் சொல்லி அலையும் இளைய சமுதாயத்திற்கு ஒரு நல்ல சவுக்கடியை கொடுத்துள்ளீர்கள் உங்களது சாதணையால் நன்றி.


உங்களது வெற்றி இந்தியாவில் என்ன என்ன மாற்றங்களை கொண்டு வரப்போகிறது தெரியுமா. தகவல் தொழில் நுட்ப்பத்தில் மட்டும் உலகலாவிய அறிமுகம் கொண்ட இந்தியா, வரும் காலங்களில் கலைத்துறையிலும் நிறுவனங்களை கவரும்.


அந்த முன்னேற்றத்தின் வளர்ச்சி, படபிடிப்பில் ஒளிவிளக்காளன்(light boy) என்று சொல்வார்களே அந்த மனிதர் வரையில் இந்த கலைத்துறையினர் மாதாந்திர சம்பளத்துடன் ஒரு கௌரவமான வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒரு எதிர்காலத்தின் துவக்கத்தை கொடுத்துள்ளீர்கள்.


இந்திய கலைத்துறை முற்றிலும் ஒரு மாறுபட்ட பரிணாமத்தை நோக்கி செல்ல இருக்கிறது இந்த வெற்றியின்பால். வாழ்த்துக்கள்.


எங்களுக்கு எல்லாம் ஒரு ஆசை இரகுமான், நீங்கள் எங்களின் சொத்து. தமிகழத்துக்கு என்று ஒரு இசை உண்டு தமிழிசை. அதை உலகம் அறிய செய்ய வேண்டும். அது உங்களால் மட்டுமே இப்போதைக்கு முடியும். உலக அரங்கில் தமிழிசையை மலர செய்யுங்கள், அனைத்து தமிழர்களின் சார்பாக கேட்ப்பதாக எடுத்துக்கொள்ளவும். மேலும் நிறைய தமிழ்ப்படங்களுக்கும் இசை அமையுங்கள் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

0 comments: