Tuesday, December 11, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா



எத்தனையோ 100 படங்களும், கதைகளும், கட்டுரைகளும், இன்னமும் எத்தனை வகை செய்தி தொடர்பு சாதனங்கள் உண்டோ அவைகள் அனைத்திலும் வன்முறையை நீதி படுத்துதாத சாதனங்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நல்ல மனிதனாக இருந்த ஒருவன் எப்படி வன்முறையாளனாக மாற்றப்படுகிறான். தனக்காக மாறிய அவன், பிறகு சமுகத்தின் அவலங்களை தட்டிக்கேட்கும் ஒரு பொதுமனிதனாக மாற்றம் பெற்றுவதாக கதைகள் அமைவது உண்டு. இதிலே அந்த கதாபாத்திரத்தின் மேல் கரிசணம் வரும் பொருட்டு நீதிக்கான சண்டையில் அவனோ அல்லது அவனது குடும்பமோ மடிவதாகத்தான் கதைகள் பெரும்பாலும் முடிவது உண்டு.


வன்முறையின் அவசியம் என்ன என்று முதலில் பார்ப்போம். தனது வாழ்க்கைக்கு வேண்டியவைகளை சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கும் ஒரு மனிதன், தானும் அடுத்தவர்களை போல் வாழவேண்டும் என்ற அவா பிறக்கும். அதற்கான எல்ல முயற்சிகளையும் முன்னெடுப்பான். அப்படி அவன் கொள்ளும் எல்ல முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையாக நிற்கும் அவனது பொருளாதார நிலை.


பொருள் வேண்டி சென்ற இடத்தில் எல்லாம் பொருள் கிடைகின்றதோ இல்லையோ அவமானம் நிச்சயம் கிடைக்கு. அதுவும் எப்படி பட்ட அவமானம், நீ எல்லாம் ஒரு மனிதன் என்று என்னிடம் பொருள் வேண்டி வந்துவிட்டாய். போடா போய் பிச்சை எடு என்ற வசை சொற்கள்.


பொருள் இல்லை என்றால் வரும் ஏமாற்றத்தைவிட, அதன் பொருட்டு வரும் அவமானங்களை சாதாரண மனிதர்கள் மறப்பதற்கு இல்லை தான். மீண்டும் மீண்டும் முயற்சி. தன்னிடம் மானம் மீதம் இருக்கும் வரை தொடர்வான். ஒரு வழியாக மானம் முழுதும் போன பிறகும், மனது முழுமையாய் மறுத்து போன பிறகு அவனுக்கு தோன்றும்............


கொடு என்று கேட்டால் தூற்றுவார்கள் இனி எடு என்று சொல்லி பார்ப்போம் என்று, செய்யவும் செய்வார்கள். முடிவு அன்றைக்கு பிச்சை எடு என்று ஆனவ ஏளம் செய்தவர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தானே வலிய வந்து பொருள் கொடுத்துவிட்டு போவார்கள்.


இன்றைகு இவர்கள் கொடுக்கும் பொருள் அவனை நல்ல வாழ்க்கையா வாழ வைக்கப்போகிறது. மாறாக இதன் பொருட்டு அவனுக்கு கிடைக்கும் பொருளை முதலில் தான் விரும்பிய வண்ணம் எல்லாம் நினைத்து நினைத்து அனுபவிப்பான். பிறகு கூட இருக்கும் கூட்டாளிகளுக்கு அள்ளி கொடுப்பான். இப்படி ஒரு காளான் முளைத்துள்ளதை கேட்ட பெரிய ஆட்கள் எல்லாம் இவனை தீர்த்துகட்டவோ அல்லது அவனது அணியில் இவனை சேர்க்கவோ செயலாற்ற. அவனுக்கு மறுபடியும் ஒரு போராட்டம்.


இப்படி படி படியாக முன்னேறி ஒரு கால கட்டத்தில், மனித நேயமே இல்லா கொடும் விலங்காக மாற்றம் பெறுவான்.


தொடரும்......

0 comments: