Thursday, December 13, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா - 3

பொதுவாக நீதிக்கு புறம்பாக செயல்கள் அரங்கேறும் போது யாராக இருந்தாலும் கோபம் வருவது இயற்கையே. அப்படி கோபம் கொள்ளும் மனிதர்கள் அனைவரும் நீதிக்காக போராட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அவர்களது நிலைமைகளுக்கு ஏற்றவாரு நடவடிக்கைளை மேற்கொள்ளுவதும் இயல்பு. இது அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் காணக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வு.

அப்படி தட்டிக்கேட்கிறேன் என்று வாங்கிகட்டி கொள்வோர் தான் அதிகம். ஒரு சில பேர் மட்டும் நிலைமைக்கும் அப்பால் செயல்பட்டு நிற்பதை காண நேர்கிறது. உதாரணத்திற்கு இந்தியன் விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முற்படும் போது, உள்ளே இருந்த பயணிகளில் ஒருவரான இராணுவ தலைவனாக பணியாற்றி பணிவிடை பெற்று வெகுகாலம் ஆன போதிலும் அன்று துணிவுமிக்க ஒரு சிலரது துணையுடன் அந்த விமான கடத்தலை தவிற்து கொடுத்த கபில் தேவ் போல் சிலரை உதாரணமாக கொள்ளலாம்.

ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த நிலைமையில் தப்பித்து போனால் மட்டுமே போதும் மற்றபடி வேறு என்ன நடந்தாலும் தனக்கும் நடப்பவைகளுக்கும் சம்பந்தமே இல்லை என்று இருப்பதை பொதுவாக எங்கேயும் காணமுடியும். நடப்பது சகிக்கவே முடியாத கொடுமையாவே இருந்தாலும் இப்படித்தான் எதிர்கொள்வார்கள். குறிப்பாக சொன்னால், பக்கத்து வீட்டில் கூறை எரிந்தாலும் தண்ணீரோடு தயாராக இருப்பார்கள் தீ தனது வீட்டிற்கு வந்ததும் ஊற்றி அனைக்கலாமே என்று.

இந்த கல் நேஞ்சம் அனைவருக்கும் வந்த காரணம் தான் என்ன.

எனக்கு தெரிந்தவரை சிறு வயது முதல் கல்லூரி முடிக்கும் வரை அனைத்து விதமான கல்விகளிலும் நீதிக்கு எதிராக நடக்கும் செயல்களுக்கு பாரதி சொன்ன "மோதி மிதித்து விடு பாப்பா" என்ற வாசகத்தை தான் கொடுத்தது, இன்று கொடுத்துக்கொண்டு இருக்கிறது ஆசிரிய குமுகாயம். இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதினால் தான், மாணவர்களது போராட்ட குணம் தீபொறி தெரிக்கும் போராட்டமாக இருக்கும். மாணவர்கள் கூடி இருக்கும் இடத்தில் ஒரு பிணக்கு என்றால், எளிதில் விட்டு விட மாட்டார்கள் அவர்கள்.

இவர்களது போராட்டத்தை ஊடகங்களும் சரி, காவலர்களும் சரி ஒரு தீய செயலாக எடுத்துகொள்ளுவதும் இல்லை தூற்றுவதும் இல்லை. இதை தற்பொழுது நடை பெற்ற மருத்துவ மாணவர்கள் போராட்டம வரை பார்த்து இருக்கின்றோம். போராட்டத்தில் அவர்கள் கொள்ளும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் காவலர்களுக்கு அதிக வேலைகளை கொடுப்பது இல்லை. சில வேளைகளில் நிலைமை கையை மீறி செல்வதும் உண்டு அண்ணாமலை இராசேந்திரன் போல்.

ஐந்து வயது முதல் 21 அகவை வரை, நீதி, நேர்மை, ஒழுக்கம், குமுகம் என்று இருந்த இவர்கள் தான் பின் நாளில் இந்த தவிற்தலில் ஈடுபடுகிறார்கள். தவிற்க என்ன என்ன காரணங்கள் வேண்டுமோ அவைகள் அனைத்தும் இவர்களுக்கு தெரியும்.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம், எது இவர்களை இப்படி மாற்றம் கொள்ள செய்கின்றது. 21 அகவை வரை இருந்த தைரியம் காணாமல் போகும் காரணம் என்ன..............

தொடரும்.................

0 comments: