Tuesday, December 18, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா - 4

அரசியலும் அரசியல்வாதிகளினது செயல்களை பார்கலாம். குமுகாயம் உருவாக தொடங்கி காலத்தில் சக்தி வாய்ந்தவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் யாராலும் எதுவும் செய்துவிட முடியாது என்று தான் இருந்திருக்கும். பின் நாளில் இதற்கு தீர்வாக குமூக பாதுகாப்பு குழுவை உருவாக்கி எல்லோருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இப்படி ஒரு அமைப்பு உருவாகும் போது அந்த அமைப்புக்கு கட்டளை வழங்கவும், கட்டுப்படுத்தவும் அதிகாரங்களை தலைமை பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் நபருக்கோ குழுவிற்கோ கொடுத்து இருக்கவேண்டும். தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ஊர் தலைவர்கள் போல.

இப்படி அதிகாரம் ஓரிடத்தில் குவியும் போது, அந்த அதிகாரம் என்றைக்கும் தவறான முறையிலோ அல்லது சொந்த காரியங்களுக்கு பயண் பட்டுவிடக்கூடாது என்று அப்படி ஒன்று நடக்கும் வரையிலும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்பில்லை தான். ஆனால் அப்படி ஒன்று நிகழும் போது, யாரிடம் சென்று முறையிடுவது.

குமுகத்தில் நிகழும் கொடுமைகளை களைய உருவாக்கப்பட்ட பாதுகாப்பணி, இப்படி ஒரு பாதகத்தை நிகழ்த்தும் போது வேறு எங்கே சென்று முறையிட முடியும் அவர்களால். பிறகு இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழல் உருவாகும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்று பார்க்கும் போது. அதிகார குழுவின் எல்லைகளும், எல்லைகள் மீறபட்டும் போது எப்படி சூழல்களை மாற்றி அமைப்பது என்று வழிவகைகள் தேர்ந்தெடுத்து செயலாக்கும் முறையையும் அறிவித்து செயலாற்றி வந்திருக்கவேண்டும்.

இப்படி சிறியதாக தோன்றியவைகள் பின் நாளில் பெரும் அரசியல் அணியாக விரிவடைந்திிருக்க வேண்டும். தமிழ் வரலாறுகளும் சரி இன்ன பிற வரலாறுகளும் சரி, ஒரு அரசாட்சியை பிடித்தால் அதை தொடர்ந்து அங்கே அவர்களது ஆட்சி நிலைத்து நிற்க என்ன என்ன செய்யவேண்டுமோ அவைகள் அனைத்தும் ஒரு பட்டியலிட்டு நிறைவேற்றுவார்கள். அதிலே மனிதத்தை காணமுடியாது.

முடியாட்சி ஆகட்டும், இல்லை மக்களாட்சி ஆகட்டும். இரண்டிலும் இருக்கும் ஒரு ஒற்றுமை அதிகாரமும், அந்த அதிகாரத்தின் மையமாக ஒருவரே செயல்படுவது தான்.

அப்படி இருக்க 2க்கும் என்ன வித்தியாசம், முடியாட்சி ஒரு எதிரி வந்து வீழ்த்தும் வரையில் அதிகாரத்தில் இருக்கும். ஆனால் மக்களாட்சியோ மக்கள் விரும்பும் வரைக்கும் ஆட்சியில் இருக்கும். அதாவது மக்கள் கூடி எடுக்கும் முடிவுக்கு ஆட்சிக்குழு கட்டுபடவேண்டும். மக்கள் எப்படி கூடி முடிவெடுப்பார்கள், அதைத்தான் தேர்தல் என்று அழைக்கின்றோம்.

என்ன அருமையான ஒரு ஏற்பாடு மக்களாட்சி...........

தொடரும்.........

0 comments: