Thursday, December 20, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா - 6

அதிகாரமும், ஆட்சியும் ஏன் இப்படி ஒரு முகம் கொண்டுள்ளது. அதிகாரம் ஆட்சி என்றாலே இப்படி தான் இருக்கும் என்று கொள்ளலாமா. ஆட்சி, அதிகாரம் இவை இரண்டிலும் அடுத்தவர்களை ஏவி வேலை வாங்குவது மட்டுமே வேலை. அதோடு மட்டும் அல்ல, தன்னை சார்ந்து இருக்கும் மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதும் இதில் ஒரு பகுதி.

உள்ளபடி பார்த்தால், அடுத்தவர்களை ஆட்டுவிக்கும் ஒரு பொம்மலாட்ட கலைஞர்கள் அவர்கள். இந்த செயலுக்கு இரண்டு முகங்கள் உண்டு, நல்லதும் கொட்டதுமாக.

நல்லவை என்றால், இருக்கின்ற வேலைகளை மக்களிடம் பகிர்ந்துதளித்து விரைவில் முடிப்பது. இதிலே ஒரு வேலையை எப்படி எவர் கொண்டு முடிப்பது என்று தெரிந்துதளித்து கையாளுவது ஒரு தனி திறமை.

கெட்டவை என்றால், அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தால், அடுத்தவர்களை தன் விருப்பத்திற்காக அவர்களது விருப்பமோ உடன்படோ இல்லாவிட்டாலும் கூட செய்யவைத்து கட்டாயப்படுத்துவது. இதிலே எல்லா விதமான விதி மீறல்களையும் கொள்ளலாம்.

அதிகாரத்தில் அமர்ந்த முதலில், மிகவும் கடமை பாராட்டும் நபராக மட்டுமே இருப்பவர்கள் பின்னாளில் ஏன் இப்படி வக்கிரம் பிடித்தவர்களாக மாறுகிறார்கள். எதை அவர்களை அப்படி தூண்டுகிறது என்று முதலில் பார்ப்போம்.

அடுத்தவரை வேலை வாங்குவதில் இருக்கும் சிக்கல்கள்

1) அவர் சொல்லும் (ஏவும்) வேலையை செய்துமுடிக்க உடன்பட வேண்டும்
2) அப்படி செய்ய்யும் செயலில் அனுபவம் கொண்டவராக இருக்கவேண்டும்
3) வேலைகளில் இருக்கும் சந்தேகங்கள் அல்லாமல் வேலைகளை பற்றி கேள்வி கேட்க்காமல் செய்து முடிப்பது
4) பொதுவாக இந்த மாதிரியான வேலைகளுக்கு என்ன வெகுமதி கிடைக்குமோ அவைகள் அல்லாமல் வேறு எதும் கேட்டாமல் இருப்பது
5) எப்போது, என்ன நிலைமையில் வேலைகள் கொடுத்தாலும் முடிக்க முன்வருவது மற்றும் முடிப்பது

இப்படி பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.

அப்படி தொகுத்துப்பார்த்தால், என்ன தான் நீதியாக இத்தனை நாள் தெரிந்து வந்தாலும் இவைகளில் ஒரு விதமான அடிமைத்தனம் இருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

எவ்வளவு தூரம் வேலை பார்ப்பவர்களுக்கு தேவைகள் இருக்கிறதோ அவ்வளவு தூரம் அவர்களது அடிமை போக்கு நீளும். அதன் நீட்சியாகத்தான், வேலைகளின் தொடர்பையும் மீறி இவர்களது உறவு அதிகாரவர்கங்களோடு இருப்பதை பார்க்க முடியும். இதை தான் இன்றைய நாட்களில் சொம்பு தூக்குவது, அய்சு வைப்பது, சால்ரா அடிப்பது, தூக்கு தூக்கி, இளித்துக்கொண்டு அலைவது, அல்லைகை, பார்க்கும் இடங்களில் எல்லாம் காலில் விழுத்து வணங்குவது, தேவைக்கு மிகுதியாக அதிகார வர்கத்தை புகழ்வது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

வீட்டிலே கூட சொன்ன பேச்சை தட்டாமல் கேக்கும் பிள்ளைக்கு இருக்கும் மரியாதை திமிர் பிடித்த குழந்தைக்கு தாய் அல்லாமல் மற்றவரிடத்து இல்லாமல் இருப்பதை சாதரணமாக பார்க்கமுடியும். மனிதர்கள் அனைவரும் பொதுவில் அப்படிதான். பெற்றோரிடம் இப்படி இருப்பதை பாசத்தின் நீட்சி என்று எடுத்து கொண்டாலும். தனக்கும் வேலைக்கும் தவிற வேறு எதுக்குமே தேவை படாத 3வது நபரை பெற்றோருக்கும் மேல் என்று நடத்தவேண்டிய அவசியம் என்ன இந்த விதமான நபர்களுக்கு................

தொடரும்......

0 comments: