Wednesday, June 3, 2015

இளையராசாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

எப்படி பட்ட காலத்தை கடந்து வந்து இருக்கிறது திரை இசை பாடல்கள். சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் இலங்கை என்று கைவிரல் எண்ணிகைகளுக்குள் அடங்கிவிடும் நிலைய அலைபரப்புகள் மட்டுமே.

இதில் சென்னையின் விவதபாரதி என்று ஒன்று சென்னையில் இருந்து கொஞ்ச தொலைவு வரை மட்டுமே கேட்கும் அலைவரிசை.

இரண்டே இரண்டு நிகழ்சிகளுக்கு மட்டும் மக்களின் கவனம் அப்போது இருக்கும், ஒன்று செய்திகள் மற்றொன்று திரைஇசை பாடல்கள். ஞாயிற்றுகிழமைகளில் ஒரு மணி நேர நாடகம் மதியத்தில் மட்டும் என்று இருந்தது.

இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு அலைவரிசையும் போட்டி இல்லாமல் ஒருவர் முடிக்கும் பொழுது மற்றவர்கள் என்று பாடல்களை அட்டவணைக் கொண்டு அலைபரப்பினார்கள்.

இவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிடும் விதமாக இலங்கை வானொலி செயல்பட துவங்கியது. காலை 6:00 முதல் 6:30 வரை பக்தி பாடலுக்கு பிறகு துவங்கும் புத்தம் புதிய இசையில் துவங்கி இரவு தூங்க செல்லும் வரை பாடல்கள், பாடல்கள்.....

மற்ற அலைவரிசைகள் எல்லாம் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் பாடல்கள் என்று வைத்துக்கொண்டால், இலங்கை வானொலி 2 மணிக்கு மட்டும் மற்ற நிகழ்சிகளுக்கு என்று கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருந்த காலம்.

பள்ளிக்கு ஓடும் நாட்களில் விவதபாரதியின் அந்த முடிவு இசை வந்துவிட கூடாது என்று அக்கம் பக்கம் என்று கேட்டுக்கொண்டே ஓடிய நாட்கள் அவைகள்.

ஆனால் இன்று எண்ணிக்கையில் அடங்காத அலைவரிசைகள். அது மட்டுமா, இணையத்தில் தமிழ் என்றோ, திரைபாடல்கள் என்றோ தேடினால் எண்ணிகையில் அடங்கா தரவுகள் கொட்டிக்கிடக்கின்றன.

தொழில் நுட்ப்பத்தில் இவ்வளவு மாற்றம் கண்டும், இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றும் அதே இடத்தில் எங்கள் இராச இளையராசா என்றும் இராசாவாக..........வாழ்த்து சொல்வோம் அந்த 72 வயது இளைஞருக்கு.............

2 comments:

')) said...

என்றும் ராஜா - ராஜா தான்...

')) said...

தங்கள் மூலமாக .வாழ்த்து சொல்கிறேன் அந்த 72 வயது இளைஞருக்கு.............