Thursday, June 4, 2015

Moms' Night Out - திரைவிமர்சனம் - வெங்கட்பிரபு பாணியில் ஒரு படம்

பொதுவாக அமெரிகாவுல எல்லாம் அப்படி தான் என்று எந்த ஒரு விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பார்கள். இந்த வாசகத்திற்கு பிறகு விவாதப்பதையே நிறுத்தியும் கொள்வார்கள்.

உதாரணமாக சொன்னால் அமெரிகாவுல எல்லாம் ஆண் பெண் பேதம் இல்லாமல் குடிப்பார்கள், புகைபிடிப்பார்களில் தொடங்கி இன்ன பல புது பழக்கங்களையும் ஞாயப்படுத்துவார்கள்.

அதே போல் தான் குடும்ப விவகாரங்களிலும் ஒரு முன்முடிவை வைத்துக்கொள்வார்கள் இப்போ எல்லாம் அப்படி இல்லை அமெரிக்காவில் உள்ளது போல் என்றும் சேர்த்துக்கொள்வார்கள்.

இந்தியாவில் அதிகரித்து வரும் மணவிலக்குகளுக்கு இதுவே அடிப்படையும் கூட.....

இப்படியான சூழலில் 2014ல் வெளிவந்த படம் இது, மொத்தமாக 3 நாட்க்களில் நடக்கும் நிகழ்வுகளை மட்டும் கொண்டு படமாக்கப்பட்ட படம் இது.

பல்வேறு விதமான குடும்ப வாழ்கையை கொண்ட அம்மாக்களை காட்டி படம் துவங்கும்.

குழந்தைகள் குரும்பைக்கூட குறை சொல்லாத ஒரு அமெரிக்க அம்மாவாக ஒரு பாத்திரம்.

கண்ணுக்கு மைக்கார இட்டுக்கொள்ள நினைக்கும் தருணத்தில் அம்மா நான் போடுகிறேன் என்று வாங்கி இலிப்பிவிட்டு விடும் குழைந்தைக்கூட கோவிக்காது விட்டு விட்டு முகம் கழுவப்போகும் படியான ஒரு பாத்திரம்.

சின்ன வயதில் நான் கண்ட கனவு மனதுக்கு நிறைந்தவனை மண ந்துக்கொண்டு, நல்ல பிள்ளைகளை பெற்று நல்ல தாயாக வாழ்வது தான். அத்தனையும் கிடைத்தும் மனதில் மகிழ்ச்சி இல்லையே என்று புலம்புவளுக்கு என்ன சொல்லி ஆற்றுவது என்று அறியாமல் தவிக்கும் கணவனாக ஒரு பாத்திரம்.

பாதரியின் மனைவியாக ஒரு பாத்திரம் எல்லா இடத்திலும் மிகுந்த கவனமாகவும் கண்ணியமாகவும் நடந்துகொளும் இன்னும் ஒரு அம்மா பாத்திரம், அவளுக்கு ஒரு விடலை வயது மகள்.

இன்னும் ஒரு அம்மா அவளது கணவனுக்கு ஒன்றும் தெரியாத அப்பாவியாக ஒரு பாத்திரம்.

இந்த 3 அம்மாக்களும் சேர்ந்து ஒரு நாள் இரவு வெளியில் சென்று பொழுது கழித்துவிட்டு வருவதாக ஒரு திட்டம். அப்படி சென்றால் தான் தனது இடையராத வீட்டு வேலையில் இருந்து விடுதலையானால் போல் இருக்கும் மனதில் இறுக்கம் விட்டு மகிழ்ச்சி பிறக்கும் என்று சொல்கிறார்கள் அங்கு துவங்குகிறது திருப்பம், ஒவ்வொன்றாக திருப்பத்திற்கு மேலாக திருப்பம் அமைத்து இருக்கிறார்கள் கதையில்.

கடைசியில் ஒரு கட்டத்தில் எவ்வளவு செஞ்சாலும் போத மடேன் என்று இருக்கிறது என்று புலம்பும் போது அங்கு ஒரு நண்பர் பாத்திரம் விடை தரும்.

கடவுளின் படைப்பு திறனில் ஒருவனும் குறை சொல்வதற்கு இல்லை, ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு செயல் திட்டத்தை வைத்து தான் அவர்கள் படைக்க படுகிறார்கள். ஆகவே உனக்கு என்று என்ன கடமை இருக்கிறதோ அதை நன்றாக செய்தாலே போதும் என்று சொல்லி அதனுடன் அன்று கண்ட அந்த கழுகு தனது கூட்டில் குஞ்சுகளை கவணிக்கும் செயல்களை பார்க்கும் போது அந்த அழகை இரசிக்காமல் இருக்க முடியவில்லை அந்த இறைவனின் படைப்பை என்று சொல்லும் இடத்தின் வசங்கள் நெஞ்சை தொட்டு செல்கிறது.

2014ல் இப்படி ஒரு படமா என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதுவும் படம் முடிந்தும் அவர்கள் அடிக்கும் கூத்தை பார்க்க பெயரோட்டம் கடைசிவரை பார்த்துவிட வைக்கிறார்கள்.

இந்தியாவில் 36 வயதினிலே வெளியிட்டு இருக்கிறார்கள், அதை பொதுவாக நன்றாக இருக்கிறது என்றும் எழுதுகிறார்கள். பார்க்கலாம் இந்த படத்தை எப்படி எழுதுகிறார்கள் என்று. நல்ல படம் அனேகமாக அடுத்து தமிழில் வர வாய்புள்ள படமும் கூட.

1 comments:

')) said...

என்ன கடமையோ, அதை உணர்ந்து செய்தாலே போதும்...