Friday, May 15, 2015

உத்தமவில்லன் - Funny People லும் - கமலுக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை

கமலகாசனின் படங்களை பார்க்கும் போது எல்லாம் வித்தியாசமாக இருக்கிறதே என்று இருக்கும். இருக்காது பின்ன அழகா கதை எழுதி, திரைகதை அமைச்சு அத பிறகு படமா எடுத்து வைச்சா அழகா அதை அப்படியே தமிழுக்கு மாற்றி மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு இந்திய/தமிழக மசாலாவை துவினா வருது வித்தியாசமான தமிழ்படம்.

இதோ அந்த வரிசையில் இப்போ உத்தமவில்லன்........

கதையிலும் திரைகதையிலும் ஏன் இவ்வளவு குழப்பம் என்று திகைப்போர்கள் ஆங்கில படத்தை பார்த்தால் தெரியும் ஏன் என்று. ஆங்கிலத்திலும் இந்த படத்தை எப்படி முடிப்பது என்று யோசித்து யோசித்து முடித்தது போல் இருக்கும்.

ஆங்கில படம் இப்படி பயணிக்கிறது, ஒரு பெரிய மேடை விகடன், பார்ப்போர்கள் சிரிக்க சிரிக்க பேசுபவன். அப்படி பட்ட அந்த நிகழ்ச்சிகளுக்கு தனி விமானம் மூலம் சென்று நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு வீடு திரும்புவன்.

அப்படி ஒரு நாள் தனது மருத்துவரை பார்த்துவரும் பொருட்டு செல்ல அவரோ உங்களுக்கு இரத்த புற்று நோய் இருக்கிறது. சோதனை மருந்துக்கள் வந்து இருக்கிறது நம்பிக்கையுடன் இருங்கள் என்று சொல்லி அனுப்புகிறார்கள்.

அந்த செய்தியை தாங்கிக்கொள்ள முடியாமல் வெளியில் வருபனை பார்த்ததும் அவனுடன் சிரித்துக்கொண்டு படம் எடுக்கும் இரசிகர்களிடம் சிரித்துக்கொண்டு நிற்கும் பரிதாப காட்சிகளை மகனிடம் கமல் சொல்லும் இடமாக மாற்றி அமைத்துக்கொண்டார்.

பிறகு தான் பேசும் மேடைகளில் பேச சிரிப்புகளை எழுதிக்கொடுக்கும் படி இரு இளையவரை பணிப்பார். அவனோ அவனது நண்பனிடம் சொல்லாமல் தான் மட்டுமே நாயகனுடன் செல்வான், பின்னாளில் ஏன் சொல்லவில்லை என்று வாக்குவாதம் வரும். அதை அப்படியே தன் காதலியிடம் கொடுக்காத கடிதமாக மாற்றிக்கொண்டுவிட்டார்.

இவனை தேடி எப்பவும் பெண்கள் அவனுடன் உல்லாசமாக இருக்க வருவார்கள் உங்களு மட்டும் எப்படி இவுங்க எல்லாம் கிடைக்கிறாங்க என்று சொல்லும் காட்சிகளை எல்லாம் ஆண்ரியாவை வைத்து பூர்த்தி செய்துக்கொண்டார்.

ஆங்கிலத்திலோ ஆண்டிரியாவின் பாத்திரம் சிரிப்பு எழுதிக்கொடுப்பவனுக்கு சோடியாக வருவார், அவருக்கோ பெண்களை பார்த்தாலே கூச்சம் அப்படி இருக்க அவனது அறைத்தோழன் அவளின் விரகதாபத்தை பயன்படுத்தி கொள்வான். இதை அப்படியே ஆண்டிரியாவின் கருவிற்கு யார்காரணம் என்று சொல்வார்கள்.

ஒரு கட்டத்தில் நேய் இன்னமும் வேகமாக செல்ல அதை அவனிடம் மருத்துவர்கள் சொல்ல அதை கேட்ட சிரிப்பு எழுத்தாளம் அழுத்து ஏன் இதை எல்லாம் என்கிட்ட மட்டும் சொல்லுகிறாய் எப்போ உன்னை சேர்ந்தவர்களிடம் சொல்ல போகிறாய் என்று கேட்பதை பாலசந்தை விட்டு கேட்கவைத்து விட்டார்.

அப்படி தான் கொஞ்ச நாளில் சாக இருப்பதாக தனக்கு வேண்டியவர்களுக்கு சொல்லும் வரிசையில் முன்னாள் மனைவிக்கும் சொல்ல. அவளும் வீடு தேடி வந்து பார்த்து அழுகிறாள்.

இவனை விட்டு பிரிந்ததற்கு காரணம் வேறு பெண்களுடன் இவன் உறவு வைத்துக்கொண்டது தான் காரணம் என்று சொல்லி இப்போ கட்டி இருப்பவனும் அப்படி தான் என்று புலம்ப, மிகவும் நெகிழ்ச்சியாக முடியும் காட்சிகளை தமிழில் நெஞ்சு வலிவரை கொண்டு வந்து விடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் சாவை பற்றி விரக்தியாக அதிகம் மேடைகளில் பேசும் சந்தர்பத்தில் அவனது உடலில் நேய்க்கான அறிகுறிகள் மறைந்து குணமாதாக சொல்கிறார்கள், அதற்கு பிறகு ஆங்கிலபடத்தில் நடக்கும் கூத்துகளை தமிழில் முன்னாள் காதலி, அவளின் மகள் என்று ஆத்து ஆத்து என்று ஆற்றி இருக்கிறார்கள் தமிழில்.

ஆங்கிலத்தில் ஐரா ஒரு பாத்திரம் அதை தமிழில் செட்டியாராகவும், பாலச்சந்தராகவும் உடைத்து கொடுத்துவிட்டார்.

ஆங்கிலத்தில் மேடையில் விகடம் பேசுபவன் தமிழில் தெய்யம் கலைஞாக கட்டியம் பேசுகிறான். ஆங்கிலத்தில் வரும் சிரிப்பு தமிழில் மொக்கையாக இருக்கிறது.........

கமலுக்கு ஏன் இந்த வேலை விட்டு விட்டு வேலையை பார்க்க வேண்டியது தானே, இதற்கு முன்னால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்க செய்யப்பட்ட படங்கள் எல்லாம் சுவடே தெரியாமல் இருக்கும் கண்டுபிடிப்பது அரிது உதாரணமாக Legends of the Fall 1994 படத்தை தேவர் மகன் என்று எழுதி எடுத்து இருந்தார் (நாவலாக இருந்த கதையை படமாக எடுத்து ஆசுகர் விருது வாங்கிய படம்), 1992ல் இதே கதையை தமிழில் அனைத்து அழகாக எடுத்து இருப்பார்.

கௌதமியின் சிகை அலங்காரம் முதல் வடிவேலு பாத்திரங்கள் வரை அவ்வளவும் அந்த படத்தில் இருக்கும். பாத்திரத்திற்கு பாத்திரம், வசனத்திற்கு வசனம் ஒற்றுமை இருந்தாலும் இரண்டும் இரண்டு படம் போல் அவ்வளவு தெளிவாக இருக்கும்.

இந்த படத்தை பாருங்கள் மொக்கையா போச்சு, Malcolm X (1992)  ஒரு படம் அதை தமிழிலே எடுகிறேன்னு கேராம்னு தமிழ எடுத்தார் ஊத்திகிச்சு அது போல ஆயிடுச்சி இந்த படமும்...........