Wednesday, October 30, 2013

காந்தியை கொன்றது கொலையாகாது -- கோட்சேவும் பதிவர்களும்

காந்தி சுதந்திர போராட்டம் நடத்தாவிட்டாலும் சுதந்திரம் கிடைத்து இருக்கும், காலத்தின் கட்டாயம் அது என்று துவங்கி ஏன் காந்தி கொல்லப்பட வேண்டும் என்ற விளக்கத்தை கொடுக்க என்று பயணித்த கட்டுரையை ஆவலுடன் படித்தேன்.

என்ன காரணத்தை சொல்கிறார்கள் என்று படித்ததில் ஏமாற்றமே மிஞ்சியது.

அந்த கட்டுரை கிட்ட தட்ட தினமலரில் செய்திகளை வாசிப்பது போல் இருந்தது. தினமலரில் இப்படி தான் செய்திகளை எழுதுவார்கள். தலைப்பை மட்டுமே படித்தால் போதும், உள்ளே செய்தியில் தலைப்பு சம்பவம் எங்கே நடந்தது என்றதை முதல் பத்தியிலும், எந்த ஊரில் நடந்தது என்றதை இரண்டாம் பத்தியிலும் எழுதுவார்கள். இவைகளை தவிர வேறு எந்த விபரத்தையும் உள் செய்திகளில் தெரிந்துக்கொள்ள முடியாது. ஆக தலைப்பை வாசித்து விட்டால் மேலே தெரிந்துகொள்ள ஒன்றும் இல்லை தினமலரில்.

அப்படி மேலே விபரங்கள் தேவைபடின் மற்ற இதழ்களில் தேடித்தான் தெரிந்துகொள்ள வேண்டும். அது போல தான் இந்த கட்டுரையும் இருந்தது.

வரலாறில்  நமக்கு தெரியாத ஒரு செய்தியையோ அல்லது இது வரை தெரிவிக்காத ஒரு மாற்று பார்வையோ என்றும் கூட நினைத்து தான் படிக்க நினைத்தேன். எல்லா கொலைகாரர்களும் அவர்கள் செய்த கொலை மிகவும் ஞாயமான செயல் என்றும். கொலையுண்ட நபர் அதற்கு தகுதியானவர் என்று தான் கூறி வருகிறார்கள்.

ஆதிரத்திலும் அவசரத்திலும் செய்துவிட்டு பின்னாளில் அவைகளுக்குகாக வருந்தியவர்களை தவிர மற்ற அனைவரின் வாக்குமூலமும் கோட்சேவின் வாக்குமூலமும் ஒன்றே. என்ன கோட்சே கொன்றது காந்தியை என்ற ஒரு வித்தியாசத்தை தவிர.

காந்தி என்று வேண்டாம் மற்ற யாராக இருந்தாலும் அவரை கொல்லும் உரிமையை சட்டம் ஒருவருக்கும் கொடுக்கவில்லை.

சரி கோட்சே தான் சரியான ஒரு காரணத்தை கூற முடியவில்லை, கோட்சேவின் செயல் சரியே என எழுதும் இந்த பதிவரின் பார்வையாவது என்ன என்று எழுதி இருக்கலாம் அதுவும் இல்லை. கிட்ட தட்ட நகைப்புக்கு என்று சொல்வது போல், "அதோ போரானே அவன் சுத்த மோசம்" என்பார்கள். உனக்கு அவனை தெரியுமா என்றால் இல்ல எனக்கு நல்லா தெரிஞ்ச ஒருத்தர் சொன்னார் மோசம்னு அதான் சொன்னேன் என்பார்கள். அதை போல் எழுதுகிறார் இந்த பதிவரும்.

கோட்சே காந்தியின் மீது வைக்கும் குற்ற சாட்டு இது தான், இந்து முசுலீம் கலவரத்தில் காந்தி முசுலீம்களுக்கு ஆதரவாக பேசினார் செயல்பட்டார் மற்றும் இந்து விழாக்களில் குறானை படிக்க செய்தார் அதனால் கோவில்களின் புனிதம் கெட்டுவிட்டதாகவும். இப்படியே விட்டால் முசுலீம்கள் நாட்டில் ஆதிகம் செலுத்துவார்கள் என்று அஞ்சியதாகவும், இவைகள் எல்லாம் நடக்காமல் இருக்கவேண்டும் என்றால் காந்தி இல்லாமல் போனால் இது நடக்காது என்று எண்ணியதாகவும் அதனால் கொன்றதாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார் கோட்சே என்று எழுதியுள்ளார் அந்த பதிவர்.

கோட்சேவின் வாக்குமூலத்திலும் சரி , இந்த பதிவரின் பதிவிலும் சரி கலவரத்திற்கு யார் காரணம் என்றோ அல்லது எப்படி அந்த கலவரத்தை புத்திசாலி தனமாக துவங்கிவிட்டு ஊரை இரண்டாக்கி வேடிக்கை பார்த்த அந்த கூட்டத்தை பற்றி எதுவுமே சொல்லாமல் இருப்பது ஆச்சரியமாக மட்டும் இல்லை பரிதாபமாகவும் இருக்கிறது.

சரி அந்த காலத்தில் இந்த விதமான தகவல்களை சேகரிப்பதும் தெரிந்துகொள்வதும் கடினம் தான். ஆனால் இத்தனை ஆண்டுகாலம் ஆன பிறகும் இந்து முசுலீம் கலவரம் யார் தொடங்கினார்கள் எதற்காக தொடங்கினார்கள், அந்த கலவரத்தால் குளிர் காய்ந்தவர்கள் காய்ந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் யார் என்று இதுவரை எந்த கட்டுரையிலும் செய்தியிலும் வரலாற்று ஆசிரியர்களும் சொல்ல கேட்டது இல்லை.

இந்த ஒரு கேள்விக்கு விடை தெரிந்துவிட்டால் நாட்டில் இந்து முசுலீம் கலவரம் வெடிக்கும் போது எல்லாம் கையாளுவது எளிதாக இருக்கும். மக்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவும் மாட்டார்கள்.

நம்மால் வெகு சமீபத்தில் நடந்த குசராத்து கலவரத்திற்கு காரணம் யார் என்று கூட கண்டுபிடிக்கவோ அல்லது அப்படியே உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தாலும் நிரூப்பிகவோ அல்லது அப்படி தூண்டியவர்களை தண்டிக்கவோ முடியுமா என்ன......

காந்தியை கொன்றதிற்கு இது தான் காரணமாக இருக்க முடியும். அவர் கொல்லப்படுவதற்கு முன்னால் நடந்த மதகலவரம் வரை காந்தியின் தலையீட்டால் நிறுத்தியும் கட்டுப்படுத்தபட்டும் வந்தது எல்லோருக்கும் தெரிந்ததே.

இந்த கலவரம் குசராத்தில் வந்தபோது எப்படி ஒரு இன சுத்திகரிப்பு வேலை நடந்ததோ அதே சுத்திகரிப்பை நடத்த எண்ணி தான் காந்தியின் காலத்திலும் கலவரங்கள் தூண்டிவிடபட்டது. ஆனால் அந்த எண்ணம் ஈடேராமல் தடுத்தது காந்தியே. உயிர்போகும் விளிம்பு வரை உண்ணா நோம்பு மேற்கொண்டு நிறுத்தியதை நாடே அறியும்.

அப்படி இந்தியாவில் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் இதுபோல பாக்கிட்தானத்திற்கு சென்று முறையிட இருப்பதாக காந்தியின் திட்டம் இருந்தது. இந்த நிலையில் காந்தி சுட்டு கொல்லப்படுகிறார் என்றால் என்ன நோக்கமாக இருக்கும்.

எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்து முசுலீம் கலவரம் முடக்கப்பட்டுவிட கூடாது என்ற காரணத்தை தவிர வேறு என்னவாக இருக்கமுடியும்.

 நிலவரம் இப்படி இருக்க கோட்சேவோ காந்தியால் அரசியலில் வெற்றிகொள்ள முடியாதவர் என்றும் அவரால் ஒன்றும் விளையபோவது இல்லை என்றும், இப்படி எந்த ஒரு பயனும் இல்லாமல் இருப்பவரை கொல்வது நாட்டிற்கும் மதத்திற்கும் நல்லது என்று வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக அந்த பதிவர் எழுதியுள்ளார்.

எந்த ஒரு தலைவரையும் நமக்கு பிடித்து ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை தான் ஆனால் அதே சமயத்தில் நமக்கு பிடிக்கவில்லை என்ற ஒரு காரணத்தை ஞாயபடுத்த அவர்களை கையால் ஆகாதவர் போல் சித்தரிப்பது எந்த விதத்திலும் சரியான செயல் இல்லை. கோட்சே ஒரு மத, இன, சாதி வெறியர் என்றதை இன்னமும் அதிகமாக ஆதாரங்களை கொண்டு நிருவ வேண்டியதில்லை. அவருடைய வாக்குமூலமே அதற்கு தகுந்த சாட்சியாக எடுத்துகொள்ளலாம்.

பிசேபி கட்சியின் சித்தாந்தங்கள் தான் பிடிக்கிறது, அடுத்தவர்கள் மகிழ்சியாக இருப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அந்த கட்சியினர். அவர்களை போல் வயிற்றெறிச்சல் கொண்டவர் தான் நானும் என்று இந்த பதிவர் நேர்மையாக் ஒத்துக்கொண்டு போகலாம் அதைவிடுத்து ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையாக அழுது தள்ளி இருக்கிறார் இந்த பதிவர், பாவம் மனிதர், இதற்கு நம்பள்கி ஆதரவு வேறு என்ன கொடுமை சரவணா......


4 comments:

')) said...

முதலில் உங்கள் பதிவுக்கு பிளஸ் +1 வோட்டு. விஷயத்திற்கு வருவோம்!

போகிற போக்கிலே ஒரு கும்மாங் குத்து குத்தி விட்டு போய்விட்டர்கள். நான் மரணதண்டனையே முழு மூச்சாக எதிர்ப்பவன். அரசாங்கதிற்க்கே அந்த அதிகாரம் கூடாது எனும் பொது...நான் எப்படி ஒரு கொலையை ஆதரிக்க முடியும். சிந்தியுங்கள்--அதுவும் காந்தியின் கொலையை..

ஒரு பதிவு நன்றாக இருக்கு என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். நூற்றுக்கு நூறு அதில் உடன்பாடு என்பது அர்த்தம் இல்லை.

உங்கள் பதிவில் RSS என்று எழுத எது உங்களை தடுத்தது? அது உங்கள் தவறு; அதை எழுதியிருக்க வேண்டும் இருந்தாலும் உங்கள் கட்டுரைக்கு நான் பிளஸ் + 1வோட்டு போட்டுள்ளேன்.

காந்தி மாதிரி ஒரு நல்ல மனிதன். அதை அடிக்கடி எழுதியுள்ளேன். எவன் ஒருவன் தான் நினைத்ததை முடிக்க (தவறோ சரியோ) எல்லா சுகத்தையும் இழந்து தனது நாட்டுக்கு பாடு படுகிறானோ அவன் பெரிய மனிதன். அதே சமயம் ஒருவன் பெரிய மனிதன் என்று சொல்லும போது, அவர் செய்யும் எல்லா காரியங்களிலும் எனக்கு உடன்பாடு இருக்கவேண்டும் என்பது அர்த்தம் இல்லை.

இங்கு ஆராய்ச்சி தோற்றாலும் அதற்கு A grade உண்டு! செய்முறை தான் முக்கியம். அந்த புது முயற்சிக்கு மதிப்பெண்கள். மாத்தி சிந்தித்தற்காக

சுதந்திரம் கிடைத்தது காலத்தின் கட்டாயம். என் பதிவை படித்து அதற்கு பதில் சொல்லுங்கள்!
நியாமான பதிலை எதிர்பார்கிறேன்.

என் பதிவு லிங்க்:
http://www.nambalki.com/2013/10/blog-post_3572.html

காந்தியின் அகிம்சை மூலம்
சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை!
______
1937 - 39, இந்தியாவின் மூன்றில் ஒரு பாகமான மதராஸ் ராஜதானியை ஆண்டது ராஜாஜி!

வெள்ளைக்காரன் நமது கையை [ராஜாஜி] வைத்தே நமது கண்ணை [மக்களை] நோண்டினான். அப்பொழுது நடந்த அடக்குமுறைக்கு ஆணையிட்டது யார்? கேட்டால் நான் சம்பளம் வாங்கும் ஊழியன் என்று புளுகுவார்கள்!

சிதம்பரனார் ஜெயிலில்...ராஜாஜி பிரதமர் (அப்பொழுது அதற்க்கு இந்த ப[எயர் தான்) பதவியில் அதுவும் கோடையில் குளு குளு ஊட்டியில் (கோடையில் அங்கு தான் அலுவலகம்).

இது தான் நமது இந்தியா!

காந்தியை கொலை செய்தது தவறு. காந்தி கொல்லப்படாவிட்டால் காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட்டு இருக்கும்.

')) said...

நீங்கள் சொல்லும் பதிவில் நான் நன்றி என்று தான் போட்டு இருந்தேன். அது எப்படி ஆதராவகும்?

நான் பொதுவாக யாருக்கும் ஒட்டு போடுவதில்லை. இப்பொழுது நானும் எல்லோருக்கும் வழிய போய் மொய் வைக்கிறேன். ஊரோடு ஒத்துவாழ். பல முறை எனக்கு மொய் வைத்தவர்களுக்கு அவர்கள் பதிவில் போய் நன்றி செலுத்துவது தான் மரியாதை! எந்த திருமணதிற்கு போனாலும் மொய்ப் பணம் கொடுப்பது மாதிரி. இதில் தவறு இல்லை!

[[இதற்கு நம்பள்கி ஆதரவு வேறு என்ன கொடுமை சரவணா]]
இதற்கு நான் ஆதரவு கொடுக்காதபோது கொடுத்தா மாதிரி எழுதுவது தவறு!

நியாமாக அதை நீங்கள் நீக்க வேண்டும். நீக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்!
_________________
நமது முன்னோர்கள் செய்த தியாகம் ஏராளம். எனக்கு தெரிந்து பக்த்சிங், காந்தி, ஏன் நேரு கூட, படேல், போஸ்...இப்படி

தமிழ்நாட்டில் எனக்கு தெரிந்து முதன் முதல் மருது சகோதர்கள், குமரன், சிதம்பரனார், காமராஜ்--மற்றபடி யாரும் இல்லை; இல்லவே இல்லை. மீதி பேர் ஒப்புக்கு சப்பாணி!

அதே சமயம் வெள்ளைக்காரன் வெளியேறியது காலத்தின் கட்டாயம்; இதில் மாற்றம் இல்லை. இதனால் காந்தியை நான் வெறுக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. மலம் அள்ளுவது கடவுளுக்கு செய்யும் சேவை என்று சொன்னது மகா தவறு; அதை கண்டிக்காதவ்ன் மனிதன் இல்லை.

காந்தியை வைத்து பிழைத்தது ஒரு கூட்டம்; நம் ஆண்டைகள்! அதுக்கு தான் சவுக்கடி!

என் பதிவுக்கு நீங்கள் பதில் சொல்லலாமே!

')) said...

தென் ஆப்ரிக்காவில் காந்தியை எட்டி உதைத்து தள்ளியதை போல் ஏறாளமானோர் தள்ளிவிட பட்டிருக்கவேண்டும் அதற்கு முன்னால். அந்த பழக்கத்திலும் திமிரிலும் தான் காந்தியையும் எட்டி உதைத்தார்கள் வெள்ளையர்கள். சட்டதாரியாக பணியாற்ற வந்த இடத்தில் சட்டத்தால் கொடுக்கப்பட்ட உரிமையை ஒருவன் காலால் எட்டி உதைப்பதை பார்த்து வெகுண்டெழுந்தவருக்கு பின்னாளில் தெரியவந்தது சட்டத்தின் பெயராலேயும் ஆசிர்வாதத்தாலும் தான் இந்த கொடுமைகள் நிகழ்த்தபடுகின்றது என்று. அன்று முதல் தனது எதிர்ப்பை தெரிவிக்க துவங்கியவர் தனது இறுதி மூச்சு வரையில் தொடர்ந்தார் என்றது வரலாறு.

இந்த வெறுப்பும் ஏக்கமும் ஏறாளமானோரிடம் மலிந்து கிடந்தும் அந்த ஆதிக்கத்தை எதிர்த்து பேச எவருக்கும் துணிவில்லை. இவர் இட்ட தீ காட்டு தீயாக மாற்றம் கொள்ள கிட்டதட்ட 30 ஆண்டுகாலம் பிடித்தது.

பின் நாளில் இந்த காட்டு தீ தனது கட்டுப்பாட்டில் இல்லை என்று அறிந்த காந்தி சுதந்திர போராட்டத்தை 3 முறை தூக்கி எறிந்தார், எனது பேச்சை கேட்காத இந்த மக்களின் போராட்டத்தை இனி நான் தலைமை தாங்கி நடத்துவதாக இல்லை என்று விட்டு எறிந்ததும் பின்னாளில் வருத்தம் தெரிவித்து மக்கள் காந்தியை நாடியது வரலாறு.

இந்தியாவிற்கு காலத்தின் கட்டாயத்தில் சுதந்திரம் கிடைத்து இருக்கலாம் ஆங்காங்கு கிடைத்தது போல் வால் போய் கத்தி வந்தது என்று சீனா வந்தது போல் இன்னும் ஒரு நாட்டின் அடிமையாக. இந்த சுதந்திரம் ஆங்காங்கு ஏன் தேவைப்பட்டது, கள்ளகடத்தல் ஆயுத வியாபாரம் என்று அந்த நாட்டை மறைமுகமாக ஒரு போகிரி நாடாக மாற்றி எள்ளி நையாடிய சீனாவின் செயலை சகிக்க முடியாமலும் இந்த காலத்தில் எங்களுடைய அதிகாரம் முடிவுக்கு வரும் என்று கொடுத்த வாக்கின் அடிப்படையிலும் சுதந்திரம் கொடுக்கப்பட்டது. அது போல் தான் இந்தியாவின் சுதந்திரம் என்று சொல்கிறீர்களா நீங்கள்....

இரண்டாம் உலக யுத்திற்கு பிறகு மற்ற நாடுகளை ஆளும் சித்தாந்தத்தில் மாற்றம் கண்ட இங்கிலாந்து தனது அரசியலில் மெல்ல மாற்றங்கொள்ள வைத்தது உண்மையே.

இந்திய சுதந்திர போராட்டம் நாம் முன்னெடுத்திருக்கா விட்டால், தற்பொழுது சுதந்திரம் கிடைத்தும் அடுத்தருக்கு அடிமை படமாலே அடிமையாக இருக்கும் இலங்கை பாக்கிட்தானம் போல் ஒரு அரசியல் நிலைமையும் இந்தியாவில் நிலவி கொண்டிருக்கும். வலிய பாரதமாக இந்தியா வலம் வந்திருக்க வாய்பில்லை. அந்த இந்தியாவை உங்களுக்கும் பிடிக்க வாய்பில்லை என்று நினைக்கிறேன்.

ஆர் எசு எசு என்று எழத எனக்கு எந்த தயக்கமும் வெட்கமும் இல்லை, எத்தனை பெயரிட்டு அழைத்தாலும் ஓநாய் ஓநாயே, பிசேபி என்று சொன்னால் மட்டும் என்ன அவர்கள் புனிதமானவர்கள் என்று பொருள்படுமா என்ன இல்லை பிசேபி வேறு ஆர் எசு எசு வேறு என்று நாம் நினைத்துகொள்வோமா. பிசேபி புது மொந்தையில் அதே பழய கள் என்றது உள்ளங்கை நெல்லிகனி.

அந்த பதிவர் நீங்களும் அவர் சொல்லும் கருத்தை தான் சொல்கிறீர்கள் என்று பொருள்பட எழுதி இருந்தார், இந்த எதிர்பை அவரிடம் நீங்கள் காட்டாமல் விட்டது ஏனோ புரிய இல்லை. எனக்கு அவரை பற்றி கவலை இல்லை ஓநாயிடம் கருணை எதிர்பார்ப்பது ஆட்டின் தவறு என்பது போல். உங்களுக்கு அந்த கருத்தில் சம்மதமோ என்று தான் எழுதினேன்.....

ஆங்கிலேயர்களையாவது ஒரு கணக்கில் எடுத்துகொள்ளலாம் ஆனால் நம்முடனே இருந்து நம்மை குத்தியவர்களை என்ன என்று சொல்வது. இன்றும் தொடரத்தான் செய்கின்றது..... ஆற்றாமை இன்னமும் இரு காந்தி பிறந்து வந்து போராட்டம் நடத்தும் வரை காத்து இருப்போம் வேறு என்ன செய்ய......

')) said...

இது உங்கள் பதிவு. நீங்கள் என்ன வேண்டுமானுலும் எழுதலாம்; எது வேண்டுமானுலும் எழுதலாம்; ஆனால், காந்தி கொலையை நான் ஆதரிக்காத போது அதை நான் ஆதரித்தா மாதிரி எழுதுவது தவறு. அதை நீங்கள் நீக்கவில்லை; அது உங்கள் உரிமை.

காந்தியை அவன் உதைத்தான்; இவன் உதைதான்; எட்டி உதைத்தான் எல்லாம் சரி! நமது விவாதம் இது இல்லையே!அது இது எது எல்லாம் சரி. காந்தி பெரிய தியாகி. என் மனிதில் காந்தி ஒரு மனிதர்குல மாணிக்கம்-உண்மையாகவே.

இங்கு கேள்வி காந்தி செய்த தியாகத்தைப் பற்றி அல்ல---இன்னும் சொல்லப்போனால், நீங்கள் எழுதியதை விட ஆயிரம் மடங்கு காந்தி தியாகம் செய்திருக்கிறார்---இந்த நாட்டிற்கு; உங்களுக்கு அது தெரியவில்லை. நிற்க.

சரித்திரம் படியுங்கள்...1930 -ல் இருந்து அதிகாரங்களை இந்தியர்களுக்கு ஆங்கிலேயர பகிர்ந்து கொடுத்து விட்டனர்.

உங்களுக்கு தெரியுமா? ராஜாஜி அங்கிலேயாருக்கு செய்த உண்மையாண சேவைக்கு பென்சனுக்கு பதிலாக ராஜ்பவன் (600 சில்லறை ஏக்கர் நிலங்கள்) இருக்கும் இடத்தை ஆங்கிலேயரிடம் கேட்டார். அவன் மாட்டேன் என்று சொல்லிவிட்டான்..இது வரலாறு.

இந்தியாவிற்கு காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்றால்...மீதி உள்ள 168 நாடுகாளுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தி யார்.

மறுபடியும் காந்தி மனிதர் குல மாணிக்கம்--என் கேள்விக்கு பதில் இருந்தால் சொல்லவும்! என் இடுகையைப் படித்து அங்கு வாருங்கள்--மேற்கோள் காட்டி விவாதம் செய்ய எளிதாகா மூடியும்!

1997-ஹாங்காங்-கை விட்டு வெள்ளைக்காரன் ஓடினான்.காரணம் அவன் நாடு இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நாற ஆரம்பித்து விட்டது.

ஹாங்காங்--கெஞ்சினான்-அழுதான். போகாதே போகாதே என் கணவா என்று வெள்ளைக்காரனை நோக்கி.

அவனோ...போடா போடா புண்ணாக்கு--என்னை ஆளை விடு என்று ஓடிவிட்டான்--இதுவும் சரித்திரம்!