Sunday, October 6, 2013

தங்க மீன்கள் - திரைவிமர்சனம்

படம் முழுக்க தந்தையின் தவிப்பை அடுத்தவர்கள் பைத்தியகார தனமாக பார்க்கும் விதமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

மனைவியும் கூட தன்னை அவமானபடுத்துவதாக நினைக்கும் தந்தை மகளை விட்டு பிரியும் காட்சிகளுக்கு கொடுக்கும் விளக்கம் போதுமானதாக இல்லை.

மகளின் பாத்திரப்படைப்பு அபாரம். குறிப்பாக அப்பாவுக்கா என்று மகள் பள்ளியில் திருடும் அளவிற்கு செல்வதாக காட்டி இருப்பதுவும்....

அப்பாவிற்கு காய்ச்சல் என்று தெரிந்ததும் உங்களை யாருப்பா பார்த்துகொள்வார்கள், கஞ்சி வச்சி கொடுப்பாங்க என்று பதரும் காட்சிகளும். மடியில் கிடைத்தவைகளை அள்ளிக்கொண்டு அப்பாவிற்கு கஞ்சி வைத்துகொடுக்க கிளம்பும் காட்சிகளும் அருமை. அப்பாக்கள் மகளை என்னை பெற்றவளே என்று விளிக்கும் சொல்லின் மகிமை இது....

மகளின் அப்பாவி தனத்தை கலைக்காமல் அவளது அப்பாவி தனத்திற்கு தீனிபோடுவதும், அவளது அப்பாவி தன கேள்விகளுக்கு பொருமையாக பதில் சொல்லும் காட்சிகளிலும் பொறுப்பான அப்பாவாக தெரிகிறார்.

அப்பாவின் பொறுப்பில் பாதி கூட அடுத்த சொந்தங்களுக்கு இல்லாமல் காட்டுவது நம்பும் படியாக இல்லை. குறிப்பாக தாத்தா பாட்டுக்கு கூட இல்லாமல் இருப்பதாக காட்டும் காட்சிகளை சொல்லலாம்.

எவிட்டா ஆசிரியையின் காட்சிகளை இன்னமும் கொஞ்சம் அதிகம் காட்டி இருந்தால் விளக்கம் அதிகம் சொல்லி இருக்க தேவை இல்லை....

மகளுடன் எடுத்த காட்சிகளுடன் மற்றவர்களுடனும் எடுத்து இருந்தால் இன்னமும் நிறைவாக இருந்து இருக்கும். மனைவி உட்பட அனைவருக்கும் காட்சிகளில் வஞ்சம்.....

காதலித்து மணந்த மனைவி கணவனுடன் தனியாக பேச கடை தொலைபேசியில் பேச என்ன அவசியம் என்று சரியாக சொல்லவில்லை அதுவும் மகளிடம் இவ்வளவு பாசம் உள்ள தந்தை அப்படி நடந்துகொள்ள அவசியம் இல்லை என்ன தான் கோபம் இருந்தும்.....

அப்படி இப்படி குறை இருந்தும் படம் நன்றாக வந்து இருக்கிறது. கற்றது தமிழில் கண்ட குறைபோல் அவனால் ஆகாமல் போனதற்கு தமிழ் படித்தது தான் காரணம் என்று காட்டுவது போல் இந்த படத்தில் மகளுக்கு இருக்கும் குறைக்கு அடுத்தவர்கள் தான் காரணம் என்று காட்டுவது போல் காட்சிகள் அமைந்து இருப்பது சோகம்.

படத்தின் துவக்கத்தில் இருந்து சேரன் எங்கோ மறைந்து கொண்டு பேசுவது போல் ஒரு தோற்றம் வருகிறது வருகின்ற படத்தில் தவிர்த்தால் நன்றாக இருக்கும்.......

சரண்யாவுக்கு மாற்றாக ஒரு இளம் அம்மாவை கண்டுபிடித்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர், இனி அதிக படங்களில் இது மாதிரி கையால் ஆகாத அம்மாவா இவரை பார்க்கலாம்.........




பாசமிகு அப்பா.... அதைவிட பாசமிகு மகள்........அருமை.

0 comments: