Wednesday, January 27, 2010

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - இறுதி பாகம்

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 4
அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 3
அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 2
அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 1

இன்றைய அமெரிக்க முதலாளியின் தேவைகள் எல்லாம் பணம், பணம், மற்றும் புகழ். பணத்திற்கு பிறகு புகழ் என்று இருந்தலும் பணமா புகழா என்று வந்தால் புகழ் போனாலும் பரவாயில்லை பணம் போகக்கூடாது என்று விழையும் முதலாளிகள் இவர்கள்.

அப்படி அமெரிக்காவில் இவர்களுக்கு எல்லாம் என்ன நெருக்கடி வந்தது என்று பார்த்தோமானால் ஒன்றும் இல்லை. அதே அளவிற்கு மக்களின் அலைபேசியின் பயன்பாடும் மற்ற செலவீனங்களும் உள்ளது. அப்படி இருக்கையில் பிறகு என்ன தான் வந்தது இப்படி கஞ்சதனம் செய்ய.

சிந்தித்து பார்த்ததில் ஒன்று தெளிவாகியது, அது இவர்களது செயல்களுக்கு விளக்கம், எரிகின்ற வீட்டில் பிடுங்கும் வரையில் இலாபம் என்ற செய்கை தான் அது.

அதாவது, இன்னமும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த வருமானம் எல்லாம் வரும் என்று தெரியவில்லை. ஆகவே இப்போதே எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்டுவோம் பிறகு இல்லை என்றாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் போலும்.

இரண்டு மூன்று ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அமெரிக்கா, இத்தனை ஆண்டு காலத்தில் இந்த கால கட்டத்தில் விடிவு பெறும் என்று யாராலுமே உறுதியாக சொல்ல முடியவில்லை.

ஒபாமா ஆட்சிக்கு வரும் போது இனிமேல் ஒரு 2 ஆண்டு காலத்தில் மூச்சாவது விட முடியும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் ஓராண்டு முடிந்த தருவாயில், இன்னமும் 2 அல்லது 3 ஆண்டுகளாவது தேவைப்படும் என்ற பேச்சு அடிகொள்ள ஆரம்பித்துள்ளது.

மேலும் அதோடு நில்லாமல், எங்கே எல்லாம் ஒபாமா கட்சி வெற்றி பெற்றதோ அங்கே எல்லாம் மறுபடியும் எதிர்கட்சியினர் இடத்தை பிடிக்க துவங்கியுள்ளார்கள். எதிர்கட்சியினர்கள் வருவதை பற்றி ஒரே ஒரு வருத்தம் தான். ஒபாமா கட்சியினர், மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு எண்ணமாவது இருக்கிறது, எதிர்கட்சியினரின் ஒரே நோக்கம், பணத்தை முதலில் கொள்ளை அடிக்க வேண்டும், அதற்கு பிறகு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று 8 ஆண்டுகாலம் இருந்தது போல் இன்னமும் ஒரு 8 ஆண்டு காலம் நீடித்தால். அமெரிக்காவின் அத்தனை பணக்காரர்களும் இந்தியாவில் தங்கிக்கொண்டு தங்களது தொழிலை சீனாவில் நடத்துவார்கள்.

அமெரிக்க இன்றைய இங்கிலாந்து எப்படி அந்த கால கதையை பேசிக்கொண்டு பொருளாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள திணறிக்கொண்டு இருக்கிறதோ அந்த நிலைக்கு அமெரிக்கவும் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இதில் வேடிக்கை என்ன என்றால், அமெரிக்க நன்றாக இருக்கும் போதும் நன்றாக இருப்பவர்களும் இந்த பணக்காரர்கள் தான், அமெரிக்கா நொடிந்து போன நிலையில் நன்றாக இருப்பவர்கள் இந்த பணக்காரர்கள் தான். நாடோடு சேர்ந்து துன்பம் அனுபவிப்பது நடுத்தர மற்றும் கீழ் நிலை மக்கள் தான்...... இந்தியாவை போல.......

இனி கடவுள் தான் காப்பாற்றனும் அமெரிக்கவையும் சரி உலகத்தையும் சரி.............

இந்தி மொழியும் உண்மை தமிழர்களும்.

இந்தி மொழியையும், தமிழையும் கொண்ட வாக்கு வாதங்கள் வரும் போதெல்லாம் மிக சாதாரணமாக அந்த வாக்கு வாதம் இப்படி முடியும். இந்திய தேசிய மொழியை கற்றுக்கொள்ள முடியாத நீ எல்லாம் எப்படி உண்மையான இந்தியனாக இருக்க முடியும்.

முன்பெல்லாம் இப்படி சொல்பவர்கள் இந்தி பேசும் மக்களாக இருப்பார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் பேச தெரிந்தாலும், நம்மால் இந்தியில் பேசவே முடியாது என்று தெரிந்தாலும் கூட இந்தியிலேயே தான் பேசுவேன் என்று அடம்பிடிக்கும் அந்த மக்களை பார்க்கும் போது ஒருவருக்கும் எரிச்சல் வராமல் போகாது தான்.

அப்படி பட்ட மக்களின் கடைசி வாக்கியமாக ஆங்கிலத்தில் எரிச்சலுடன் சொல்வார்கள், இந்தியனாக இருந்துக்கொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தியில் பேசவும் எழுதவும் தெரியவில்லை உனக்கு வெட்கமாக இல்லையா என்று, அப்படியே தேசியமும் இந்தியமும் வழிய பேசுவதாக பேசி விட்டு நகருவார்கள்.

ஆனால் இன்றைகு என்ன கொடுமை என்றால், இதை விட இன்னமும் அதிக படியாக நம்மை இந்த மொழிகளில் திட்டுவது தமிழர்களே என்றால் நமக்கு கோபம் வராதா என்ன.

திருவாளர் சோவில் இருந்து அவரது கொள்கைகளை கொண்ட அனைவரும் இப்படி தான் சொல்கிறார்கள். அப்படி இப்படி என்று இருந்த இந்த வாதங்கள் கடைசியில் தேசியம் தேசியம் என்று மட்டுமே சொல்லிக்கொள்ளும் கட்சியான பசகவின் முழக்க ஒரே இனம் ஒரே மொழி என்று முழங்கும்.

இப்படி பட்ட பசக வெற்றிகரமாக ஆட்சி நடத்தும் குசராத்து உயர் நீதிமன்றம் இன்று இந்தி ஒன்றும் தேசிய மொழி இல்லை என்று தீர்ப்பு சொன்னது மட்டும் இல்லாது, இது வரையில் இந்தியை தேசிய மொழியாக சொல்ல எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்றும் சொல்லியும் உள்ளது.

இப்படி எந்த விதமான ஒரு சட்ட வரைவும் சரி, சட்டமும் இல்லாத நிலையிலேயே இந்தியை பிடித்து இந்த தொங்கு தொங்கு என்று தொங்குவது ஏன் என்று சொல்வார்களா.

அல்லது குறைந்த அளவிலாவது இந்தி தேசிய மொழியாக ஆக்க வேண்டியதின் அவசியத்தையாவது சொல்வார்களா.

இந்தியாவில் அனைத்து துறைகளிலும், துறை சார்ந்த பரிவர்த்தனைகளில் ஆங்கிலம் சரியான அளவில் பயன் பாட்டில் இருக்கிறது.

எந்த மாநிலமாக இருந்தாலும், படிக்கும் அத்தனை பாடமும் மொழிப்பாடங்கள் தவிர்த்து அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க அதை தமிழர்களிடம் பேச்சில் கொள்வதற்கு மட்டும் தயங்குவதேன் என்று விளக்குவார்களா.

இந்தி பேசும் மக்களை நீங்கள் தமிழ் பேசுவது இல்லை என்று நாம் என்றைக்காவது கேட்டு இருக்கிறோமா, அல்லது எழுத படிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று சட்டம் கொண்டு வந்தால் என்ன என்று கேட்டு இருப்போமா..........

ஆக உண்மை தமிழர்களின் மொழியில் குசராத்து இனிமேல் இந்தியாவில் ஒரு மாநிலமாக இருக்க தகுதி இல்லாத மாநிலமாக மாற்றம் கொண்டுவிட்டது. குசராத்திகள் எல்லாம் இந்திய துரோகியாக ஆகிவிட்டார்கள் போலும்.

பசக ஆளும் மாநிலம் ஆனதால் இனிமேல் பசக ஒரு தேச துரோக கட்சியாக உண்மை தமிழர்கள் அறிப்பார்கள் என்று காத்திருப்போமாக.

வாழ்க இந்தியா, வளர்க தமிழ்.

Monday, January 25, 2010

வாழ்த்துக்கள் இளையராசா, இரகுமான் - தாமரையணி விருது 2010


இந்த வருட 2010 தமரையணி விருது பெறுகிறார்கள் இளயராசாவும்,

இரகுமானும். தமிழகத்தில் இருந்து அதுவும் இசைக்காக இருவருக்கும் விருது என்று வரும் போது மகிழ்ச்சியே.




கலைஞர்களுக்கு பாராட்டும் விருத்துகளும் தான் அவர்களை மேலும் உச்சாகபடுத்து இன்னமும் அதிக படைப்புகளை படைக்கத்தூண்டும்.

இரகுமானை பொருத்த அளவில் அவர் உலகின் மிகப்பெரிய விருதான ஆசுகர் எல்லாம் வாங்கியவர், அதுவும் தனது முதல் படத்திலேயே. அவருக்கு இந்த தாமரையணி விருது எல்லாம் ஒன்றும் பெரிது இல்லை என்றாலும், தனது நாட்டில் அவர் எவ்வளவு தூரம் கௌரவிக்கபடுகிறார் என்று உலகுக்கு இந்த விருது காட்டும்.

ஆனால் இராசாவை பொருத்த அளவில், அவர் சாத்தித்து இருக்கும் சாதணைகளுக்கு இந்த விருத்து எல்லாம் மிகவும் காலம் தாழ்த்தி தான் கொடுக்கப்படுகிறது.

இராசாவின் இசையே அவருக்கு உலக அளவில் முகவரி எல்லாம் தேடித்தந்த பிறகும், இத்தனை ஆண்டு காலம் காத்திருக்க தேவை இல்லை தான். ஒவ்வொரு முறை தேசிய விருத்துகள் என்று வரும் பொழுது எல்லாம், இராசாவுடன் பணியாற்றிய மற்ற அனைவருக்கும் விருத்துகள் கிடைக்கும் ஆனால் இவருக்கு கிடைகாமல் போகும்.

அதை அவரும் பெரிதாக எடுத்துக்கொண்டதும் இல்லை. அவருக்கு வேண்டும் என்றால் அது எல்லாம் தேவை இல்லை என்று இருக்கலாம். ஆனான் அவரது இசையை இரசிக்கும் சாதாரண இரசிகர்களுக்கு எல்லாம் இது மிகவும் தேவையாக இருக்கிறது.

தான் இரசிக்கும் படைப்புகளை படைப்பவர்களுக்கு ஒரு தகுந்த பாராட்டு இல்லை என்றால் எப்படி என்று இருப்பது இயல்பே. இப்படி எல்லாம் கோபமாக இருப்போருக்கு இந்த செய்தி இரு இனிப்பு செய்தி தான்.......
வாழ்த்துகள் இளையராசா, இரகுமான்.