இந்தி மொழியையும், தமிழையும் கொண்ட வாக்கு வாதங்கள் வரும் போதெல்லாம் மிக சாதாரணமாக அந்த வாக்கு வாதம் இப்படி முடியும். இந்திய தேசிய மொழியை கற்றுக்கொள்ள முடியாத நீ எல்லாம் எப்படி உண்மையான இந்தியனாக இருக்க முடியும்.
முன்பெல்லாம் இப்படி சொல்பவர்கள் இந்தி பேசும் மக்களாக இருப்பார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் பேச தெரிந்தாலும், நம்மால் இந்தியில் பேசவே முடியாது என்று தெரிந்தாலும் கூட இந்தியிலேயே தான் பேசுவேன் என்று அடம்பிடிக்கும் அந்த மக்களை பார்க்கும் போது ஒருவருக்கும் எரிச்சல் வராமல் போகாது தான்.
அப்படி பட்ட மக்களின் கடைசி வாக்கியமாக ஆங்கிலத்தில் எரிச்சலுடன் சொல்வார்கள், இந்தியனாக இருந்துக்கொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தியில் பேசவும் எழுதவும் தெரியவில்லை உனக்கு வெட்கமாக இல்லையா என்று, அப்படியே தேசியமும் இந்தியமும் வழிய பேசுவதாக பேசி விட்டு நகருவார்கள்.
ஆனால் இன்றைகு என்ன கொடுமை என்றால், இதை விட இன்னமும் அதிக படியாக நம்மை இந்த மொழிகளில் திட்டுவது தமிழர்களே என்றால் நமக்கு கோபம் வராதா என்ன.
திருவாளர் சோவில் இருந்து அவரது கொள்கைகளை கொண்ட அனைவரும் இப்படி தான் சொல்கிறார்கள். அப்படி இப்படி என்று இருந்த இந்த வாதங்கள் கடைசியில் தேசியம் தேசியம் என்று மட்டுமே சொல்லிக்கொள்ளும் கட்சியான பசகவின் முழக்க ஒரே இனம் ஒரே மொழி என்று முழங்கும்.
இப்படி பட்ட பசக வெற்றிகரமாக ஆட்சி நடத்தும் குசராத்து உயர் நீதிமன்றம் இன்று இந்தி ஒன்றும் தேசிய மொழி இல்லை என்று தீர்ப்பு சொன்னது மட்டும் இல்லாது, இது வரையில் இந்தியை தேசிய மொழியாக சொல்ல எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்றும் சொல்லியும் உள்ளது.
இப்படி எந்த விதமான ஒரு சட்ட வரைவும் சரி, சட்டமும் இல்லாத நிலையிலேயே இந்தியை பிடித்து இந்த தொங்கு தொங்கு என்று தொங்குவது ஏன் என்று சொல்வார்களா.
அல்லது குறைந்த அளவிலாவது இந்தி தேசிய மொழியாக ஆக்க வேண்டியதின் அவசியத்தையாவது சொல்வார்களா.
இந்தியாவில் அனைத்து துறைகளிலும், துறை சார்ந்த பரிவர்த்தனைகளில் ஆங்கிலம் சரியான அளவில் பயன் பாட்டில் இருக்கிறது.
எந்த மாநிலமாக இருந்தாலும், படிக்கும் அத்தனை பாடமும் மொழிப்பாடங்கள் தவிர்த்து அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க அதை தமிழர்களிடம் பேச்சில் கொள்வதற்கு மட்டும் தயங்குவதேன் என்று விளக்குவார்களா.
இந்தி பேசும் மக்களை நீங்கள் தமிழ் பேசுவது இல்லை என்று நாம் என்றைக்காவது கேட்டு இருக்கிறோமா, அல்லது எழுத படிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று சட்டம் கொண்டு வந்தால் என்ன என்று கேட்டு இருப்போமா..........
ஆக உண்மை தமிழர்களின் மொழியில் குசராத்து இனிமேல் இந்தியாவில் ஒரு மாநிலமாக இருக்க தகுதி இல்லாத மாநிலமாக மாற்றம் கொண்டுவிட்டது. குசராத்திகள் எல்லாம் இந்திய துரோகியாக ஆகிவிட்டார்கள் போலும்.
பசக ஆளும் மாநிலம் ஆனதால் இனிமேல் பசக ஒரு தேச துரோக கட்சியாக உண்மை தமிழர்கள் அறிப்பார்கள் என்று காத்திருப்போமாக.
வாழ்க இந்தியா, வளர்க தமிழ்.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
4 comments:
Ms Panimalar,
You have considered only college educated Tamilians, perhaps. Should also mind that not all the people of other states in India know English. The knowledge of Hindi is definitely advantageous and known to anyone who travels northern states, for purposes like work, business, tours etc. It is just facilitate better interaction among all Indians that the government wants people to learn Hindi. Our politicians, (now others also like Maharahtrians and Gujaratis) are playing dirty games for their own political gains.
வாங்க அனானி,
வேலை பார்க்க சென்ற அனைத்து மக்களும் என்ன தமிழா பேசி அங்கே வேலையில் இருக்கிறார்கள் என்றால் இல்லை. அங்கே என்று வேலைக்கு செல்பவர்கள் நன்றாக தான் இந்தி பேசுகிறார்கள்.
ஒரு வாதத்திற்கு தான் சொல்கிறேன், C, சாவா மொழிகள் தெரிந்தால் தான் வேலை என்று வந்த போது அந்த துறையில் இருப்பவர்கள் மட்டும் தான் படித்தார்கள், தெரிந்துகொண்டார்கள். அல்லது அந்த துறைக்கு சென்றவர்கள் தான் படித்தார்கள். அவர்கள் அல்லாது, மற்ற துறையில் இருப்பவர்கள் அந்த மொழிகளை தீண்டவும் இல்லை, அக்கறையும் கொள்ளவில்லை.
இந்த மற்ற துறைக்கு என்று சொன்னது சம்பந்தமே இல்லாமல், அந்த மொழியை என்னை போன்றவர்கள் எல்லாம் படிக்கவேண்டும் என்று அடம் பிடிப்பது ஏனோ. அதுவும் குறிப்பாக, அந்த மொழி தெரியவில்லை என்றால், நரகத்தவர் போல் பாவிப்பதும் ஏனோ... என்று தான் விளங்கவில்லை.
இந்தியை பேசும் மொழியாக கொண்ட 3 மாநிலங்கள் தவிர மற்ற எல்லா மாநிலமும் அந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் இது என்ன அடிப்படையில். ஏன் மைகுரோ சாப்ட்டையும், ஆரகில்லையும் இந்தி படித்துவிட்டு வந்து எங்களோடு தொழில் செய் என்று சொல்ல வேண்டியது தானே. அங்கே மட்டும் ஏன் ஆங்கிலத்தில் பேசுவது, எழுதுவதும் என்று வட மாநிலம் செயல்படுகிறது.
அப்போ அவர்களுக்கு ஒரு விதி மற்றவர்களுக்கு ஒரு விதி, அப்படி ஆங்கிலத்திலும் எழுதுவதாலும் பேசுவதாலும் என்ன குறைந்துவிட போகிறார்கள் அந்த வடகத்தியர். மற்றும் நான் இங்கே குறிப்பிட்டது எல்லாம் படித்தவர்களை மேற்கோளை காட்டி, எழுத படிக்க தெரியாதவர்களை கொண்டு அல்ல......
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
/./பசக ஆளும் மாநிலம் ஆனதால் இனிமேல் பசக ஒரு தேச துரோக கட்சியாக உண்மை தமிழர்கள் அறிப்பார்கள் என்று காத்திருப்போமாக.//
:)
வாங்க கோவி, இராமகி ஐயாவுடன் நேரடி சந்திப்பு என்று எழுதி இருந்தீர்கள். மகிழ்ச்சி, எங்களுக்கு எல்லாம் எப்போது அந்த வாய்ப்பு கிடைக்குமோ.....
Post a Comment