தேசிய விருதுகள் அறிவித்ததை அடுத்து தனது விமர்சனங்களாக வைக்கும் விதமாக ஞானி அவர்கள் காஞ்சிவரம் படத்திற்கு விருது கொடுத்ததை கண்டித்ததோடு நில்லாமல் எவனோ ஒருவன் படத்திற்கு கொடுத்து இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
பதிவுகளில் எழுதி இப்போது வார இதழ்களுக்கு எழுதும் அளவிற்கு உயர்ந்த இவருக்கு, தேசிய விருகளுக்கு உள்ள அடிப்படை தகுதிகள் கூட தெரியவில்லையே என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.
எவனோ ஒருவன் படம் ஆங்கிலப்படத்தின் பிரதி. ஒவ்வொரு காட்சியும், கதையும் அப்படியே ஈ அடிச்சாம் பிரதியாக்க இருப்பதை மூலபடத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். இல்லை என்று அந்த படத்தை எடுத்த இயக்குனரும் சரி, நடித்த மாதவனும் சரி வாதாடவோ எங்கே ஆதாரம் காட்டுங்கள் என்றோ கேட்கும் நிலையில் எல்லாம் இல்லை.
எவனோ ஒருவன் தனது கடின உழைப்பில் கதை எழுதி, அதை வெற்றி திரைக்கதையாக மாற்றி வெளியிட்டால், அதை அப்படியே ஆலிவுட்டுக்கு வெகு தொலைவில் அல்லவா உள்ளோம் என்று தமிழில் மாற்றி எடுத்த உங்களது முயற்சியை வேண்டு என்றால் பாராட்டலாம் ஆனால் அதற்கு விருது எல்லாம் மிகைமிகையான ஆசைகள் ஞானி.
மற்ற விபரங்களுக்கு எனது விமர்சனத்தை பார்க்கவும்.
http://panimalar.blogspot.com/2008/03/blog-post_19.html
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
6 comments:
ஞாநி,
இதை அவசர அவசரமாக படித்துவிட்டு, அடுத்த வாரமே தலையில் குட்டிக்கொள்வார் என்று எதிர்ப்பார்ப்போமாக !
ஞானி இதை படித்துவிட்டு, தமிழில் பிழை இல்லாமல் எழுத தெரியவில்லை முதலில் அதை திருத்து பிறகு மற்றவரை சொல்லலாம் என்று என்னை திட்டாமல் இருந்தால் சரிதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பனிமலர், உங்க கருத்து சரி தான். எவனோ ஒருவன் அறுவை படம். ஆனாலும் ஞானி பதிவு எழுத ஆரம்பிச்சி பத்திரிகைக்கு எழுத வந்தார்ன்னு சொல்றது எல்லாம் ரொம்பவே ஓவர்ங்க.
உண்மை!! உண்மை. நான் கூட ‘எவனோ ஒருவன்’ வந்த புதிதில் பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் வெற்றி பெறவில்லையே என்று நினைத்தேன். பின் தான் தெரிந்தது, இந்த படம் மைக்கேல் டக்லஸ் நடித்த ‘ஃபாலிங் டவுன்’ என்ற படத்தின் அப்பட்டமான தழுவல் என்று. எவனோ ஒருவன், மேல்தட்டு அறிவுஜீவிகளுக்கு என்று எடுக்கப் பட்டது. எப்போது இந்த படம் தழுவல் என்று தெரிந்ததோ, அப்போதே ‘ஏ’ செண்டர் அறிவுஜீவிகள், இந்த படத்தை நிராகரித்து விட்டார்கள்.
மணிகண்டன், ஞானி பதிவில் தொடங்கி என்று சொல்லவில்லை. 6 ஆண்டுகளுக்கு முன்னால் திண்ணையில் ஒரு கட்டுரையை கொடுத்துவிட்டு என்ன ஆனது என்று கேட்டு கேட்டு அலுத்து போன காலங்களில் எல்லா வாரங்களும் இவரது கட்டுரைகள் வரும். அப்படி சொன்னேன், அவரை குறைவாக மதிப்பிடும் நோக்கில் இல்லை.......
பிரசன்னா, இந்த படம் வந்த புதிதில் அப்படி இப்படி என்று வந்த விமர்சனங்களை பார்த்த உடன், என்னவோ ஏதோ என்று ஆவலாக படம் பார்க்க துவங்கியதுமே தெரிந்துவிட்டது இது ஆங்கிலபடத்தின் தாழுவல் என்று. அது மட்டும் அல்லாது மைகல் டக்லசின் நடிப்பு எங்கே மாதவனின் நடிப்பு எங்கே......
Post a Comment