ஈழத்தின் தேவை இந்தியாவின் தேவையாக இருந்த வரையில், இந்தியாவின் தயவு இலங்கைக்கு இருந்தது. ஆனால் இன்றோ இந்தியாவின் தயவு எள்ளவும் இலங்கைக்கு தேவை இல்லவே இல்லை. அதன் அடிப்படையில் தான் இந்தியாவை அவமான படுத்தும் வசனங்களும், நேர் மாறானா பதிலுரைகளையும் செவ்வியிலும், செய்தியிலும் இலங்கை பூடகமாகம் கூட இல்லாமல் அப்பட்டமாக தெரிவித்து வருகின்றது.
இந்தியா முன்டுகொடுக்க இந்த போரில் ஒரு வெற்றியை ஈட்டிவிட்ட முனைப்பில், இந்தியாவுகே குழிபறிக்கும் விதத்திலும் இலங்கை போர் முடிந்த கையோடு நடந்து காட்டவும் தயங்கவில்லை.
20 மையில் தொலைவில் அமைந்துள்ள தீவில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா முயன்ற காலத்தில் இருந்து, இந்தியாவின் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடக்கூடாது என்ற காரணத்தால் மட்டுமே மனதில் கொண்டு இலங்கையில் உள்ள ஈழ பிரச்சணையை இந்தியா கையாண்டது.
இந்தியாவின் தேவைகள் யாவும் ஒரு அளவுக்கு பூர்த்தியானதும் கைகழுவும் வேலையை இந்திய இராணுவமும், அரசாங்கமும் முனைப்புடன் செயலாற்றும் போது தான். அதை எதிர்பார்த்த வண்ணமாக தான் நாங்களும் இருக்கின்றோம் என்று புலிகள் பதிலடி கொடுத்து இந்திய அமைதி படையை ஒரு பெருத்த அவமானத்துடன் நாடு திரும்ப வைத்தார்கள்.
அன்றைக்கு வாங்கிய அடியை வாயை பொத்திக்கொண்டு இந்திய இராணுவம் வெளியே தெரியாமல் அழுததின் வலியும், வஞ்சமும் இந்த போரில் இந்திய இராணுவமும் இந்திய அரசாங்கமும் தீர்த்துக்கொண்டது.
சரி புலிகளை வெற்றிக்கொண்டாகிவிட்டது, பிறகு என்ன என்று வெற்று சிந்தனையில் இந்திய இராணுவம் சிந்திக்க எண்ணும் தருவாயில். பாக்கிட்தானத்து இராணுவத்திற்கு சிங்கள இராணுவம் பயிற்சி என்று போர் முடிந்த சில தினங்களிலேயே இலங்கை அறிவிப்பது. அதற்கு தகுந்தார் போல் சீன இராணுவ வானூர்திகள் இந்திய எல்லையில் நுழைவதும் ஒன்றும் தற்செயலான செயலாக் தெரியவில்லையே.
எங்களது மக்களுக்கு உணவு பொதிகளை வினியோகிக்கத்தான் என்று சீனா வாதிட்டாலும், ஓராண்டுக்கு மேல் காலாவதியான உணவு பொதிகளை வந்து வீச வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டால் சீனா என்ன எனது மக்கள் எலிக்கொடுக்கும் உணவே ஆனாலும் உண்பார்கள் என்றா சொல்ல போகிறது.
அதுவும் எப்போர் பட்ட வானூர்திகளை அனுப்பினார்கள் என்றால் உலக தரத்தில் 4காவது வலிய வானூர்திகளை எந்தவித முன்னறிவிப்புகளும் இல்லாமலும் இந்திய பகுதியில், தன்னுடைய பகுதி என்று சொல்லிக்கொண்டு முரட்டு தனமாக நுழைவது ஒன்றும் சாதாரணமாக காரியமாக தெரியவில்லை.
ஆக மொத்தத்தில் இந்தியா புலிகளை பழி வாங்குவதாக எண்ணிக்கொண்டு தனது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதாக தான் தெரிகின்றது. இந்த இக்கட்டான சூழ் நிலையை ஆள வேண்டும் என்றால், இலங்கையின் இராணுவத்தை இந்தியா கலைத்து இந்தியாவின் ஆதிக்கத்தில் இலங்கையை கொண்டு வரவேண்டிய கட்டாயம் பிறக்கின்றது.
அப்படி முன்னெச்சரிக்கையாக செய்யாமல் விடுங்கால், சீனாவுடன் நேருக்கு நேர் இந்தியா மோத வேண்டி வரும். இலங்கையா, சீனமா என்று பார்த்தால் இலகுவான இலக்கு இலங்கையாத்தான் இருக்கும். ஒரு சிறிய படையான புலிகளை கொண்டு அடக்கி வைத்தது போக இவ்வளவு பெரிய பிரச்சணைக்கு உரிய செயலில் இந்தியா தன்னை ஆட்படுத்தி கொண்டது அதன் தொலை நோக்கு பார்வையின்மையை காட்டுகிறது.
என்ன நடகின்றது என்று பொருத்து இருந்து பார்ப்போம்............
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
2 comments:
இந்தியா இப்போது ஆப்பசைத்த குரங்கு. ஆப்பசைத்ததில் அதனுடைய வாலு மட்டும் மரத்தில் சிக்கவில்லை.... _________
சீனாவின் அழிவு இங்கு இருந்து தான் துவங்கும் என்று தோன்றுகிறது. வளர்ந்து வந்த பொருளாதாரத்தின் பெரும் பங்கை அடைந்துவிட்ட மமதையில், இந்தியாவில் கட்டுகடங்காத பணத்தை கொட்டி அரசியலில் குழப்பத்தையும். நாட்டின் ஒருமைபாட்டை சீர் குலைக்கும் செயலிலும் ஈடுப்பட்டு வருகிறது. தமிழ் உலகுக்கு சொன்னது போல், "கெடுவான் கேடு நினைப்பான்" மறுபடியும் நிறுபிக்கபடும் கவலை கொள்ள வேண்டாம்.
Post a Comment