இந்த படம் வந்ததில் இருந்து அடடா என்ன படம், ஒரு பொது மனிதனின் கோபம் என்ன அழகாக நடித்துள்ளார். என்னே திரைகதை, இசை அதிலும் அபாரம். அப்படி இப்படி என்று ஏகத்திற்கு எழுதி தள்ளுகிறார்கள் நமது வலைஞர்கள்.
இந்த படத்தின் நீதியை நாயகன் விளக்கும் காட்சி, கண்ணுக்கு முன் நடந்த கொடூரங்களும், அந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் எந்த ஒரு குற்ற உணர்ச்சிகளும் இல்லாமல் சொகுசாக வாழ்கிறார்களே. அவர்களை யார் தான் என்னதான் செய்துவிட முடியும் என்ற கோபம். அப்படி இப்படி என்று எல்லாம் இவர்கள் எழுதுவதை பார்த்தால். என்னே ஒரு இரக்க குணம் இந்த மக்களுக்கு என்று பாராட்ட தோன்றுகிறது.
வெறும் கதையை பார்த்துவிட்டு, அய்யயோ என்று கண்ணீர் வடிக்கும் இந்த கூட்டம் நமது சகோதர்கள் கூட்டம் கூட்டமாக அன்றாடம் மடிந்து கொண்டு இருக்கும் போது. அப்படி எதுவுமே நடக்கவில்லை, புலிகள் செய்வது தீவிரவாதம், பாவம், கொடூரம் என்று எல்லாம் வந்து எங்களது பதிவில் எழுதிவிட்டு சென்றார்கள்.
இந்த படத்தில் நாயகன் செய்ததை தான் விடுதலை புலிகள் இத்தணை ஆண்டுகளாக செய்து வந்தார்கள். ஒரு சில தனி மனிதர்களது கோபம், ஆற்றாமை ஒன்று கூடி எதிர்க்கும் வலிமையாக மாற்றம் பெற்றது.
இந்தியாவில் இசுலாமிய சகோதர்களுக்கு எதிப்பு என்றால் ஆமாம் அவர்களை எல்லம் கொல்ல வேண்டும் என்று கண்களை கட்டிக்கொண்டு ஆதரவு தெரிவிப்பதும். அவர்களால் விளைந்தது மட்டும் தான் தீவிரவாதம் என்றும், மற்றவர்களால் வருவது எல்லாம் தக்காளி சாரு என்று எண்ணும் உங்கள் எண்ணத்தை என்ன என்று சொல்ல.............
எங்கே இந்த படத்தை பிரகாசு ராசை வைத்து எடுத்தால் எதிர்ப்பு கிளம்புமோ என்ற பயத்தில் கமலகாசனை வைத்து எடுத்துள்ளார்கள். மற்ற நடிகர்கள் செய்தால் அது நாட்டு துரோகம், ஆனால் கமலகாசன் செய்தால் அது கலைபடைப்பு ஆகுமே.
கர்னாடகத்தில் பசக ஆட்சியை பிடித்தாகிவிட்டது, ஆகையால் அவர்களுக்கு எல்லாம் பாடம் தேவை இல்லை, ஆனால் தமிழகமும், ஆந்திரமும் அடுத்த கட்ட தலைவர்களை தேடி அலையும் காலம் இது. இப்போது ஏற்றினால் தான் இந்த தீவிரவாதம் போதை அவர்களுக்கு தலைக்கு நேராக ஏறும் என்று கமலகாசனின் முகமூடியில் வைத்து பசக கொடுத்துள்ளது போலும்.
கே ராமில் கமலகாசன் கல்கத்தாவில் நடந்த கலவரத்தை காட்டி காசு செய்யவும், மத உணர்வுகளை தூண்டவும் நினைத்து அந்த படம் அப்படி இப்படி என்று எல்லாம் பேசப்பட்டது. ஆனால், அன்றைக்கு கதையின் தலைவனாக சொன்ன பாடம் ஏற்க தமிழக மக்கள் மறுத்துவிட்டார்கள். ஆனால் இன்றைக்கோ கிட்டத்தட்ட விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் வீர வணக்க நாளான்று விடுக்கு முறையீடுக்கு இணையாக கமலகாசன் முறையீடுகளை செய்துள்ளார்.
விடுதலை புலிகளுக்கு ஆதரவு என்று ஒரு புறம் தெரிந்தாலும், இந்தியர்களுக்குள் சண்டை மூட்டி அதன் மூலம் தெற்கில், தமிழகம்,ஆந்திரம் என்று ஆட்சியை கைகொள்ளும் கள்ள முயற்சியாகத்தான் இந்த படம் தோன்றுகிறது.
தமிழர்களுக்கு இந்த தீவிரவாத பெத்தடின் போதை அவ்வளவு எளிதில் ஏறிவிடுவது இல்லை தான், அதற்காக இப்படியா கொள்ளை கொள்ளையாக கொண்டு வந்து ஏற்றுவது...................
உன்னைப்போல் ஒருவன் , இந்து தீவிரவாதிகளின் பிரச்சாரபடம். எப்படி தடைவிதிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
11 comments:
hmmm muththi pochu.......onnum panna mudiyaadu
இதை தான் நானும் சொன்ன்னேன் நண்பரே, என்னுடைய கருத்துக்கு வலிமை சேர்த்ததிற்கு நன்றி.
I believe you guys dont have any job. Its a master piece movie from Kamal and Mohan lal. If you can appreciate else just dont criticize. As a comman man, I fully agree with what the movie message says.
அனானி வாங்க, அவர்கள் போட்ட பெத்தடின் ஊசி அருமையாக வேலை பார்த்துள்ளது உங்களிடம். இதை தானே அவர்களும் எதிர்பார்த்து, தமிழிலும் தெலுங்கிலும் இந்த படத்தை ஒரே சமயத்தில் வெளியிட்டுள்ளார்கள். படத்தில் சொல்லும் கருத்துக்கும் புலிகளின் சித்தாந்ததிற்கும் என்ன வித்தியாசம் கொஞ்சம் சொல்லிவிட்டு போங்களேன் அனானி................
oh my dear named friend, who said that.. atharmam nadanthaal... nee yum thevai pattal atharmam seithu.. atharmathi jeikalam.. endru Ramayanam, mahabharatam matrum palae ilakiyangal solgirathae.. Mr. Prabhakaran fought for tamilians.. may be somewhere it went wrong... pothu nalathil.. thanalum kalathirukalam.. avaragalum manthirgal thanae..
yen Raman kudae vithivalakilai...
So again to you folks.. see it as movie.. let everybody have their own interpretations.. you have ur rights to express ur views.. I appreciate.....
அனானி, இந்த மாதிரியான படங்கள் மக்களின் மனதை பாதிக்கும் படங்கள். மும்பையிலும், குசராத்திலும், கல்கத்தாவிலும் நடந்தது போல் தமிழகத்திலும் நடக்கவேண்டும் என்று அல்லவா இந்த இந்து தீவிரவாதம் நினைக்கின்றது.
இன்றைக்கு மாறி மாறி பாராட்டும் இதே கூட்டம், ஈழ போராட்டதை கேவலமாகவும். தீவிரவாதம் என்றும் சொல்வது தான் சந்தர்பவாதம் என்றும். இந்து தீவிரவாதம் என்றும் குறிப்பிடுகின்றோம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே....
நல்ல படம் என்று நண்பர்கள் கருத்தால் நானும் பாத்தேன் , அன்று முழுவதும் மன உளைச்சலால் தவித்தேன் , தூக்கு தண்டனையை வேண்டாம் என்று வாதாடிய விருமாண்டி எடுத்த கமல் , குற்றத்திற்கு தண்டனை மரணம் என்று சொல்லிஇருப்பது வேதனை. சமீபத்தில் new york ஹிந்தி படம் பார்த்தேன் அதில் தீவிரவாதி விசாரணை என்ற பெயரால் எப்படி வாழ்கையை இழக்கிறார்கள் என்பதை உணர்த்திய அப்படம், சிறந்தது . மற்றவர்கள் மீதான நமது வன்முறை நிருத்ப்பட்டு மனிதம் ஆக்கப்படும் வரை , மற்றவர்கள் வன்முறை நிர்காது அதை புரிந்துகொள்ள வேண்டும் . அந்த மற்றவர்களை தீவிரவாதிகள் என்ற பெயரில் கொன்றால் அடுத்து அவர்கள் உன்னை கொள்வார்கள் . இதற்கு முடிவு அடுத்தவர் தன்மானத்தை , உரிமையை , உடமையை பறிக்காமல் காப்பதுதான் இது புலிகளுக்கும் , தமிழின அழிப்பினை நடத்திய நாடுகளுக்கும் பொருந்தும் , முஸ்லிம் சகோதரர்களே முக்கிய தீவிரவாதிகள் என கூறி , முஸ்லிம் என்ற வார்த்தையையே தீவிரவாதமாக சித்தரிக்கும் அரசியலில் கமல் உண்டு என்பது உண்மையதிறது.... இது மாதிரியான பிரிவினை, வன்முறை தூபம் அரசியல் அடிவருடியாக இந்த படம் உள்ளது. இது என் கருத்து நன்றி .
Hey!
Have you seen the movie without any disturbance? The Invisible man given enough reason it is not terrorism in the name of religion. It is out of anger. By the way you are trying to justify things it is upto you. But you should not brand it as religion based terrorism. It shows your thoughts how to mess it up things.
Cheers...
bX-vx1csk
செயகுமார்,
சரியாக சொன்னீர்கள், முதலில் படம் பார்க்கும் போது நமக்குள்ளும் கோபம் எழும். அது தான் இந்த இந்து தீவிரவாதிகளிம் கலை நயம். இப்படி எத்தணை மக்களின் மனதில் கொலைவெறியை தூண்டியதோ இந்த படம். தமிழகத்தில் இல்லாத இந்த வன்முறை கலாச்சாரத்தை பரப்ப பசக என்ன பாடு படுகிறது பாருங்கள். வலையிலே எழுதிய நண்பர்கள், எனது கேள்விக்கு பதிலே சொல்லாமல் எனது எண்ணத்தில் கோளாரு இருப்பதாக எழுதியுள்ளார்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்பின் அனானி,
இந்த கோபம் இலங்கையில் நாள்தோறும் சாகும் நமது சொந்தங்களின் பால் வராமல் போனது ஏன் என்று விளக்க முடியுமா. தவிர கோத்ராவில் அப்பாவி மக்களை மதத்தின் பெயரால் அரசே கொன்று குவித்தது சரிதானா. அப்படி கொல்லப்பட்டது நமது வீட்டு ஆட்களாக இருந்தால், அப்படி மடிந்தால் என்ன என்று எழுதிக்கொண்டு இருப்போமா, விளக்குங்கள் எனக்கு........
Mumbaiyile gundu vecha NAIKKU kooda help seira kena pasanga irukkira varai UNNA MATHIRI kenaikalum iruppeenka!!
Post a Comment