Thursday, March 20, 2008

உண்மையில் யார் இந்த "எவனோ ஒருவன்"

மகளின் பிறந்த நாளை கொண்டாட வீட்டுக்கு சொன்று கொண்டு இருக்கும் வழியில் சாலை நெரிச்சல், மணி கணக்காக அடிக்கு அடி நகர்ந்து போவதாக ஆனது அன்று. பொருத்து பார்த்தவன், வண்டியை அப்படியே சாலையில் விட்டு விட்டு நடந்தேவாது போவோம் என்று நடக்க தொடங்கிறான்.

கோடை வெயில் மண்டையை பிளக்கிறது, தான் வருவதை வீட்டிற்கு சொல்லலாம் என்றால் பொது தொலை பேசியில் பேச நாணயங்கள் இல்லை. அருகே இருக்கும் கடைக்கு சென்று சில்லரை கேட்கிறார். கடைக்காரரோ சில்லரை எல்லாம் இல்லை, வேண்டும் என்றால் ஏதாவது வாங்கி மீதி சில்லரை வேண்டுமானால் தருகிறேன் என்கிறார். ஏதாவது பானம் வாங்கலாம் என்றால், வெளியில் கொதிக்கும் வெயிலை விட மோசமாக கொதிக்கிறது குளிர் பெட்டியில் இருக்கும் பானம். பானத்தின் விலையும் அதன் குளிர் தன்மையும் கண்டு விலை மிகவும் அதிகம் என்று வாதாடுகிறான். தவிற விலை போக மீதியில் தொலைபேசிக்கு பத்தாது விலையை குறைக்கவும் என்று வாக்குவாதம் தொடர, கடைகாரரோ எகதாளமாக விளையாட்டு மட்டையை எடுத்து மிரட்ட. கைகலப்பில் கட்டை கை மாறுகிறது. கடையை அடித்து தூளாக்கிவிட்டு பானமும் மீதம் சில்லரையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்படுகிறான்.

நல்ல உடையில் கையில் பெட்டி சகிதமாக அருகே இருக்கும் குப்பத்தில் நுழைந்து செல்லுகையில் கால் சோடுகள் கிழிந்து கால் தரையில் உரைவதை கவனித்து தாள்களை அதில் தினித்து புறப்படும் போது அங்கே இருக்கும் கலக்கூட்டத்தினர் இருவர் அவனிடம் வழிபறிக்க முற்பட. கொண்டு வந்த கட்டையால் ஒரு போடு போடுகிறான். உதை வாங்கியவர்கள் மான்களாக சென்று ஓடி மறைகிறார்கள், போகிற போக்கில் அவர்களிடம் இருக்கும் மடக்கு கத்தியை பிடுங்கி கொண்டு விரட்டி விடுகிறான் அவன்.

இதற்கு இடையில் கடைக்காரர் காவல் துறையில் புகார் தெரிவிக்க, அன்றைக்கு பணிவிடை பெரும் திருட்டு மற்றும் கொள்ளை பிரிவை சேர்ந்த அதிகாரி தனது அலுவலக கடைசி பணியாக துப்பு துலகக்கி கொடுக்க முன் வருகிறார்.

குப்பத்து சண்டையிலிருந்து சென்ற அவன் அருகே இருக்கும் பொது தொலைபேசியில் வீட்டை தொடர்புகொள்ள நிற்க. அடிவாங்கியவர்கள், தனது கூட்டாளிகளுடன் ஏராளமான ஆயுதங்களுடன் இவனை தேடி வருகிறார்கள். ஆளை கண்டதும் இயந்தர துப்பாகியால் சல்லடையாக துளைகிறார்கள் வண்டியிலே சென்றுக்கொண்டு. அவனை தவிற மற்ற அனேகருக்கும் குண்டடிபடுகிறது. பதட்டதில் எதிரே வரும் வண்டியில் மோதி அந்த கலககும்பல் அடிப்பட்டு இறக்கிறது. அவர்களை அப்போது தான் கவனித்த அவன் அருகே சென்று பார்கிறான், பின்னர் அவர்கள் வைத்திருக்கும் ஆயுத பையை எடுத்துகொண்டு அங்கிறுந்து செல்கிறான் அவன்.

கடைகாரனின் புகாரை விசாரித்து கொண்டிருக்கும் போதே கலககும்பலின் துப்பாக்கி கொலைகள் காவல் துறையின் காதுகளுக்கு எட்ட. கடைக்காரரை நேரில் சென்று விசாரிக்க செல்லும் வழியில், இந்த கலவரங்களை நிகழ்த்தும் மனிதன் யாராக இருக்கும் என்று ஒரு துப்பு கிடைக்கிறது.

இதற்கு இடையில் பசிக்காக உணவகத்தில் நுழைந்த அவன் கேட்டதை இல்லை என்று சொல்ல, இயந்தர துப்பாக்கியின் முனையில் அழகு தத்துவங்களை பேசி முடித்து கேட்டதை பெற்றுக்கொண்டு, உண்டுவிட்டு பணம் கொடுத்து முடித்து விட்டு செல்கிறான்.

செல்லும் வழியில் கிழிந்த தனது சோடுகளுக்கு பதிலாக நல்ல சோடுகளை வாங்க அருகே உள்ள கடையில் நுழைய. கடைக்கரரோ ஒரு பேரினவாதி. கடையில் நுழைந்தவன் சோடுகளை தேடிக்கொண்டு இருப்பவனை பார்த்ததும் கடைக்காரருக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு. இடையில் அருகே நடந்த உணவக இடர்களை விசாரிக்க வந்த காவலர்கள் இந்த கடையில் வந்து இவனை பற்றி விசாரிக்க, இவன் கடையில் இருப்பதை மறைத்து விட்டு காவலர்களை அனுப்பிவிட்டு, இவனுடன் ஓரிண சேர்க்கைக்கு முற்பட. அங்கேயும் ஒரே போடு அவனை, அந்த கையோடு அங்கே இருக்கும் பசூக்காவை எடுத்துக்கொண்டு செல்கிறான்.

இதற்கிடையில் அவனின் முகவரியை கண்டு பிடித்த காவலர்கள் அவனது அம்மாவிடம் சென்று விசாரிக்கிறார்கள் அவன் வீட்டிற்கு போவதாக எல்லோரிடமும் சொல்லி செல்கிறான் எங்கே செல்கிறான் என்று. அங்கு அவனது அம்மா அவனை பற்றிய உருக்கமானதொரு கதையை சொல்கிறார். மிகவும் ஒழுக்கமான தொரு வளப்பில் நாட்டு பற்றுடன் வளர்க்கப்பட்டவன். எதிலும் நேர்மை, நியதி என்ற கொள்கை தவறாதவன். அவனை போல் எல்லோரும் நேர்மையாகவும் நியதியாகவும் இருக்கவும் வேண்டும் என்று எதிர்பார்ப்பவன். அவனது அம்மாவிற்கு அவனது மனைவியும் மகளும் வாழும் இடம் தெரியவே இல்லை என்று உறுதிபடும் போது காவல்துறை சொல்கிறது அவனுக்கு வேலை போய் ஒரு மாததிற்கு மேல் ஆகுகிறது என்றும் வழியில் அவன் செய்து போகும் செயல்களை சொல்லி மேலும் துப்புகளை சேகரிக்க செல்கிறார்கள்.

ஒரு வழியாக வீட்டருகில் வந்ததாக வீட்டிற்கு கூப்பிட்டு அவன் சொல்ல, அவனது மனைவி குழந்தையை கூப்பிட்டுக்கொண்டு வெளியே ஓடுகிறாள் அருகில் இருக்கும் கடற்கடரை மேடையிக்கு. அங்கே இருப்பதை ஊகித்தவனாய் செல்ல, மனைவி மிரண்டு பயந்து நடுங்க. அப்பாவியாய் சொல்வான் எனது மனைவியையும் மகளையும் பார்ப்பது தவறா என்று. மனைவி சொல்வாள் நீங்களும் நானும் சட்டப்படி தம்பதியர் இல்லை, தவிர எங்களுக்கு 100 அடிக்குள் நீங்கள் வருவதே குற்றம் என்று நீதிமன்றம் சொல்லி இருக்கிறது என்று. இப்படியாக வாக்குவாதம் தொடர, அருகில் இருப்பவர்கள் என்ன ஏது என்று கேட்க்க துப்பாகி முனையில் விரட்டபடுகிறார்கள் பொது மக்கள்.

அப்படி இப்படி என்று அவனை தேடி கண்டுபிடித்து அங்கேயே வரும் காவலர் அவனை அங்கே மடக்கி, அவனை காப்பாற்ற அவன் சொல்வான் நேர்மையின் பொருள்விளங்க சொன்ன அத்தனையையும் கடைபிடித்தேன் அதையே கொள்கையாகவும் கொண்டு வாழ்ந்தும் வந்தேன். அதனால் என்னை யாருக்குமே பிடிக்கவில்லை. மற்றவர்கள் எல்லோரும் அதற்கு நேர்மாறாகத்தான் நடக்கிறார்கள், அவர்களுக்கு இந்த உலகம் பொன்னையும் பொருளையும் அள்ளி கொடுக்கிறது என்று. மேலும் பேசுகையில் காவலர் சொல்வார் உனது உயிராக சொல்லும் மகளுக்காவாது நீ திருந்தி வாழக்க்கூடாதா என்றால், நான் கைதியாக இருந்தேன் என்று எனது மகள் கேட்பது நடந்து நான் உயிருடன் இருப்பதில் பொருள் இல்லை என்று சொல்லு, சட்டையில் மறைத்து வைத்திருக்கும் பொம்மை துப்பாக்கியை எடுக்க, காவலர் சரியான அவனை சுட்டுத்தள்ளுகிறார். அவன் தான் இந்த "எவனோ ஒருவன்" என்று காவல் துறை ஊடகத்திற்கு சொல்லி முடிக்கிறது.
இந்த படத்தை எப்படி தமிழ்ழில் எடுப்பது, குடும்பத்தை மதிக்காதவனாக இருக்கும் நாயகனின் படம் எல்லாம் பருத்திவீரன் போல் போவது இல்லை. அதில் கூட அவன் அவளுக்காக தான் கொலைகாரனாக சொல்வது படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று வெகுவாக சொல்வார்கள். அதனால் சீதர் மகாதேவனுக்கு குடும்பம் என்ற பாசம் எப்பவும் உண்டு. நீதி நேர்மை என்று இருப்பவன். குழந்தையை பள்ளியில் சேர்த்துகொள்ள நன்கொடை எல்லாம் கொடுக்க முடியாது என்றும் தனிபாடமாக வீட்டில் படித்தால் தான் முடியும் என்றால் நான் எல்லாம் அப்படி ஒன்றும் படிக்கவில்லையே என்று சொல்வது. அதற்கு என் அப்பா இப்படி ஒரு பாழும் கிணற்றில் என்னை இப்படி தள்ளிவிட்டாரே என்று சொல்லுவதும் வரைக்கும் வேண்டுமானால் தமிழ் படத்தில் சொல்லலாம்.

மற்றபடி "Falling Down" படத்தில் வரும் சமுதாய சீர் கேடுகளை ஆங்காங்கே அடித்து நோருக்குவதை பானக்கடையில் இருந்து அப்படியே தமிழ் படத்திலும் எடுத்து இருக்கிறார். என்ன தமிழகத்தில் நடந்தால் என்ன என்ன நடக்குமோ அவைகளை கொண்டு திரைக்கதையை அமைத்து இருக்கிறார் இயக்குனர்.
அந்த படத்திற்கும் தமிழ் எவனோ ஒருவனுக்கும் உள்ள வித்தியாசம், ஆங்கில படத்தில் அவனை திரையில் பார்க்கும் போது இப்போ பிடித்து விடுவார்களா என்றே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. தமிழ் எவனோ ஒருவனை பார்க்கும் போது, போடு அவனை அப்படி என்று இருக்கிறது.

முடிவு இரண்டு எவனோ ஒருவனுக்கும் மரணம் என்று அமைவதை பார்க்கும் போது, நீதி நேர்மை எல்ல கொள்கைகளையும் பார்த்து மொத்தமாக சாத்தான் சிரிப்பதாக கதை முடித்தற்காக இயக்குனரை கண்டிக்கமல் விடமுடியவில்லை. வேற எப்படி தான் இந்த மாதிரி கதைகளை முடிப்பது என்றால் "சத்தம் போடாதே" பாருங்கள் என்ன சொல்கிறோம் என்று புரியுமென்று சொல்லலாம்.

7 comments:

Anonymous said...

,// நீதி நேர்மை எல்ல கொள்கைகளையும் பார்த்து மொத்தமாக சாத்தான் சிரிப்பதாக கதை முடித்தற்காக//
பனிமலர்,

தமிழ்நாட்டில் சாத்தான் சிரிப்பது புதுமை அல்ல,வெறும் கதையும் அல்ல;நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள்.மஞ்ச துண்டு சிரிக்கும் கேவலமான கடவுட்கள் மூலைக்கு மூலை காணக்கிடைக்கலாம்.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் மஞ்சதுண்டின் சிரிப்பில் சாத்தானைக் காணலாம்.

')) said...

அப்படின்னா "எவனோ ஒருவன்" எங்கிருந்தோ திருடப்பட்டவனா?

')) said...

வடுவூராரே தவறுதலாக உங்களின் பின்னூட்டத்தை அழித்துவிட்டேன். மன்னிக்கவும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

வாங்க இலெமூரியன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அப்படி தான் இந்த கதையை பார்த்தால் தெரிகிறது. இந்த படம் 1998 பக்கம் வந்த படம்.

')) said...

அட! பரவாயில்லைங்க..
திரும்ப போட்டா போச்சு
“இன்னும் கார் தான் வாங்கவில்லையே.. வந்த பிறகு யோசிக்கலாம். “

')) said...

வடுவூராரே, மிக்க நன்றி.

Anonymous said...

RaistUrifsraw [url=https://launchpad.net/~buy-flagyl-without-prescription]flagyl dosage[/url] Flagyl [url=https://launchpad.net/~buy-ambien-without-prescription]ambien ultram[/url] Ambien [url=https://launchpad.net/~buy-zithromax-without-prescription]zithromax and zyrtec[/url] Zithromax [url=https://launchpad.net/~buy-codeine-online-without-prescription]diflucan codeine[/url] Codeine