இந்த தலைப்பில் எழுதினாலும் எழுதினேன், அந்த நாகரீக புயல் அனானியாக வந்து என்னை பொரிந்து தள்ளிவிட்டார். இதிலே எங்கே ஆதாரம் என்ற கேள்வி எல்லா பின்னூட்டத்திலும் கேட்டுள்ளார். இவ்வளவு பேசும் இவர் இவரது பெயரில் வந்து வாதாட வேண்டியது தானே அதை விடுத்து அனானி முகமூடி எதற்கு இந்த நாகரீக புயலுக்கு.
இந்த அனானி வாதத்திற்கு எல்லாம் நாம் பதில் சொல்ல போவதில்லை. ஆனால் அதற்கு இடையில் வந்து சென்ற மற்ற நண்பர்கள், புருனோவை நான் என்னவோ வேண்டும் என்றே வசைபாடுவதாக நினைக்கும் விதமாக அந்த அனானியின் பதிகள் அமைந்துவிட்டதால் இந்த பதிவையும் எழுதுவது அவசியமாகிறது.
நண்பர் புருனோவிடம் நாம் கேட்பது எல்லாம் இவ்வளவு தான், இராசாவை கேவலபடுத்தவேண்டும் என்று ஏன் உங்களுக்கு இவ்வளவு துடிப்பு. அந்த செயலில் புருனோ இறங்கும் போது எவ்வளவு தரம் தாழ்ந்து போகும் நிலைக்கும் கூட அவர் தயங்குவது இல்லை என்று சுட்டிக்காட்டி எழுதினோம். பாவம் இந்த ஒரு விமர்சனத்தை கூட தாங்கிக்கொள்ள முடியாத இவர் முகமூடியின் துணை கொண்டு என்னை துளைத்தெடுத்துள்ளார்.
நண்பர்களே புருனோ இப்படி பேசுவதும், வாங்கிக்கட்டிக்கொள்வதும் புதிதல்ல, இங்கே இரோசாவசந்திடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருப்பது பாருங்கள்.
“
ரோஸாவசந்த் 10:19 am on August 28, 2009 Permalink Reply
ஸாரி புருனோ, நீங்கள் இந்த 6 கருத்துக்களை ஆழ்ந்த ஆராய்ச்சி + நீண்ட பரிசீலனைக்கு பின் வந்தீர்கள் என்பதை என்னால் உணர இயலவில்லை. அப்படி இருக்க இதில் மேலும் நேரத்தை செலவிடாமல் இருப்பதுதான் உசிதமானது என்று தோன்றுகிறது. ஆனால் நீங்கள் அன்புடன் பதிலை எதிர்பார்க்கிறேன் என்று சொன்னதால் இந்த சிறிய பதில். ( ஏதாவது ஒரு கட்டத்தில் சில கருத்துக்களை சொல்லிவிட்டால் அதை மீண்டும் சொல்ல வேண்டி இருக்காது, அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என்பதற்காகவும்)
என் கருத்துக்களை என் இரண்டு பதிவுகளில் சில வருடங்கள் முன்னால் எழுதி, நீங்களும் வாசித்து பின்னூட்டம் கூட இட்டிருந்தீர்கள்.
http://rozavasanth.blogspot.com/2006/05/1.html
http://rozavasanth.blogspot.com/2006/06/2.html
இந்தி பாடல்களை கேட்டுகொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்களை ராஜா கேட்க வைத்தார் என்று சொல்லும் வாதத்தை சில ஆதாரத்துடன் வன்மையாக மறுத்திருந்தேன். உங்கள் பின்னூட்டத்தை பார்த்தால் அதை நீங்கள் ஏற்றுகொண்டதாக தோற்றமளிக்கிறது. இப்போது மீண்டும் கேட்ட 30 வருஷமாக அதே வாதத்தையே மீண்டும் சொல்கிறீர்கள். இந்தியில் இருந்து ராஜா தமிழை காப்பாற்றினார் என்பது போல எம்.எஸ்.வி போன்ற மேதைகளை கேவலப்படுத்தும் வாதம் வேறு கிடையாது. ராஜா என்று ஒருவர் பிறக்காமல் இருந்தால் கூட இந்திப்பாடல் ஆதிக்கத்திலிருந்து தமிழ் நிச்சயாமாய் தப்பியிருக்கும், நம்புங்கள்!
அடுத்து ஹிந்திக்காரர்கள் எல்லாம் இப்போது தமிழ் பாட்டு கேட்டுகொண்டிருக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை. அடிப்படையில் அடிமை மனநிலையை கொண்டிருப்பவர்களுக்குதான் இந்திக்காரர்கள் இசையை அங்கீகரிப்பது என்பது ஒரு பொருட்டாக இருக்க முடியும். ராஜா தமிழ் திரை உலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கியிருந்த போது, இந்தியில் பப்பிலஹரி கொடிகட்டி பறந்தார். உங்கள் அளவுகோல் படி பப்பிலஹரி ஒரு மேதையாக தெரியலாம். நான் கட்டாயப்படுத்தி உங்கள் கருத்தை மாற்ற முடியாது.
சுமார் 40 ஆண்டுகளாக மிக வளமாக இருந்த ஹிந்தி திரை இசை, 70களிலேயே அலுப்பூட்டும் மோனொடோனஸ் இசையாக மாறி, 80 களில் குப்பையாகி, 80களின் இறுதியில் கழிவாக மாறியிருந்தது. இவைகளை உதாரணத்துடன் விளக்க முடியும். அந்த சூழலில் கூட ராஜாவால் இந்தியில் தடம் பதிக்க முடியவில்லை என்றால் அந்த வெகுரசனை கேவலமானதா அல்லது அது ராஜவின் குறையா?
நான் ரஹ்மான், ராஜா உட்பட யாரையும் ஒப்பிடுவதில்லை. ராஜாவின் இசை மட்டும் போதுமான ஒன்றாக எனக்கும் சமூகத்திற்கும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஜீனியஸ் என்ற வார்த்தைக்குள் ராஜாவை மட்டுமே என்னால் அடக்க முடியும். ஓரளவு இசை அறிவு கொண்டு மற்றவர்கள் அளித்த இசை பரிணமித்ததை பாதையை ஒரு சட்டகத்தில் புரிந்து கொள்ள முடியும். ரோஜா, ஜெண்டில்மேன் துவங்கி ̀மஸக்கலி ‘பாடல்வரை அது எவ்வாறு ஏற்கனவே இருந்த இசைகளை மிக திறமையான முறையில், நீண்ட உழைப்பிற்கு பின் manipulate செய்து உருவானது என்று புரிந்து கொள்ளமுடிகிறது. ராஜா அளித்தவைகள் இத்தகைய எந்த புரிதலுக்கும் அப்பாற்பட்டு இருப்பதாலேயே அவரை மட்டுமே நானும் பலரும் ஜீனியஸ் என்கிறோம். இதில் மாறுபடுவர்களுடன் சண்டை போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை -ஓரமாக இதை சொல்லிவிட்டு போவதை தவிர.
ராஜா செய்த அனைத்தும் அதிசயம்! ̀செந்தூரப்பூவே’யில் துவங்கி (நான் அன்னக்கிளியில் ராஜாவை துவக்க மாட்டேன்) ̀தென்றல் வந்து தீண்டும் போது’ வரை அனைத்தும் நமது புரிதல்களுக்கு அப்பாற்பட்டது. இதுவரை நாம் அறிந்த genreக்களில் அடங்காமல், அவைகளின் fusion என்றும் வகைப்படுத்த முடியாத ஒன்று. ராஜாவின் காலத்தில் இந்த அதிசயத்தை உணர்ந்தததாக சொல்ல முடியாது. அப்போது அது ஒரு ஹிட் இசை என்ற அளவில் மட்டுமே இருந்தது. 20 ஆண்டுகள் கழித்தே இதன் பல அறியாத நுட்பங்களை பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னமும் பிடிபட்டதாக சொல்ல முடியவில்லை. அதிசயிக்க மட்டுமே முடிகிறது.
ராஜாவையும் ரஹ்மானையும் ஒப்பிடுவது என்பது மிகவும் அபத்தம். நான் ஒரு அறிவுத்துறையில் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றால் இதற்கு முன்னால் பங்களித்தவர்களை தாண்டித்தான் ஏதாவது செய்யவேண்டும். அவ்வாறு தாண்டி செய்துவிட்டதால் ஐன்ஸ்டீனை விட நான் பெரிய ஆளாகிவிட முடியாது. அந்த வகையில் ரஹ்மான் ராஜாவை தாண்டி சென்றவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதை வேறு விதமாக பார்க்கலாம். (இதுவும் நேரடி ஒப்பிடல் இல்லை.)
76இல் இருந்து 92 வரை ராஜா, 92இல் இருந்து 2008வரை ரஹ்மான். இந்த 16 வருடங்களை ஒப்பிடுங்கள். புகழின் உச்சத்தில் இருந்தும் ரஹ்மான் இன்னும் 100 படங்களுக்கு கூட இசையமைக்கவில்லை. ராஜாவோ சுமார் 800 படங்கள், எல்லா படங்களிலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நாம் அலசவேண்டிய நுட்பம் கொண்ட பிண்ணணி இசை. அந்த கணத்தில் நிகழ்ந்த அதிசயம் போல பாடல்கல். இவை அத்தனையும் ராஜா என்ற தனி மனிதன் முழுமையாக எழுதிக்கொடுத்தது. ரஹ்மானைப்போல விக்கி விநாயக்ராமின் பையனை(பெயர் மறந்து விட்டது) பல வகை தாளங்களை தனித்தனியே போடச்சொல்லி, பதிவு செய்து, அவைகளின் பல கலவைகளை இரவு முழுக்க ஆராய்ந்து ̀அழகான ராட்சசி’யின் தாளமாக தருவது அல்ல. ரஹ்மான் செய்வது மீது எனக்கு எந்த விமர்சனமில்லை. ஆனால் அது நாம் புரிந்து கொள்ளும் சட்டகத்தில் அடக்கும் மிக திறமை + உழைப்புக்கு பின் விளையும் இசை. ராஜா, பலர் கவனித்திருக்க வாய்ப்பு குறைவாக உள்ள, ̀பகவதிபுரம் ரயில்வே கேட்’ என்ற படத்தில் ̀செவ்வரளி தோட்டத்திலே’ அளித்தது இந்த புரிதல்களுக்கு அப்பாற்பட்ட அதிசயம்.
இருந்தாலும் ராஜாவை சினிமாவிற்கு பொருத்தமானவராக இல்லை என்றுதான் என் பதிவில் கருத்து கூறியிருக்கிறேன். இதை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதியிருக்கிறேன். “சினிமாப் பாடலிசையின் தேவைகளை மிக பொருத்தமாய் (ஒரு விஸ்வநாதனைப் போல, ரஹ்மானைப் போல) அவராய் திருப்தி செய்ய இயலவில்லை என்றும் தோன்றுகிறது” என்பதுதான் என் கருத்து.
இந்த வகையில் ராஜா குறித்தும் மற்றவர்கள் குறித்தும் பேசவும், உரையாடவும் நிறைய உள்ளது. (20 ஆண்டுகளாய் குப்பைகளை உற்பத்தி செய்த) ஹிந்தியில் வெற்றி பெற முடியவில்லை, வெள்ளைக்கார சினிமாக்காரன் ரஹ்மானை கூப்பிட்டான் ராஜாவை கூப்பிடவில்லை என்கிற வாதங்களை முன்வைத்து அல்ல. (உண்மையில் பல மேற்கின் இசை அறிஞர்கள் ராஜாவைத்தான் கொண்டாடுகிறார்கள், ரஹ்மானை அல்ல என்பதுதான் உண்மை. ஆதாரத்துடன் மேற்கோளுடன் சொல்ல முடியும்). மற்றபடி நீங்கள் கேள்வி கேட்டு பதில் சொல்லி விவாதிக்கும் விஷயம் இதுவல்ல. உங்கள் கருத்துக்களை மாற்றும் நோக்கமும் எனக்கில்லை. ராஜா மீதான் வெறுப்பு என்று காரணம் இல்லாம் பரவிகொண்டிருக்கும் அலையில் நீங்கள் விழக்கூடாது என்ற அக்கறையில் நீங்கள் கேட்டதன் பெயரில் இந்த சந்தர்ப்பத்தில் இந்த பதில். நன்றி!
புருனோ 12:56 pm on August 28, 2009 Permalink Reply
//ஸாரி புருனோ, நீங்கள் இந்த 6 கருத்துக்களை ஆழ்ந்த ஆராய்ச்சி + நீண்ட பரிசீலனைக்கு பின் வந்தீர்கள் என்பதை என்னால் உணர இயலவில்லை. //
அப்படி என்றால் நான் கூறியதில் எது தவறு என்கிறீர்கள். அப்படி தவறு என்றால் நீங்கள் கூறும் கருத்து என்ன. அதற்கு ஆதாரம் தாருங்கள்
கீழ்க்கண்ட கருத்துகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா
1. ராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர்
2. அவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை
என்ன கொடுமை சார் இது
“
இதை போலதான் இந்த நாகரீக புயல் எல்லா இடத்திலும் அதும் இராசாவை புகழ்ந்து எழுதும் அனைத்து இடங்களிலும் சென்று எழுதுவார். தான் ஒரு மருத்துவர் என்று கூறிக்கொள்ளும் இவர், அந்த படிப்புக்கு தகுந்த பக்குவம் கூட இல்லாமல் எழுதுவதும் வாதம் புரிவதும் பாவமாகவும், நகைப்பாகவும் இருக்கிறது என்று எடுத்து சொல்வது மட்டுமே இந்த பதிவுகளின் நேக்கம். நண்பர் புருனோவை இழிவு படுத்தவோ தூற்றவோ அல்ல என்று தெளிவுபடுத்திகொள்கின்றோம்.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
10 comments:
அண்ணே டாக்டரின் பல கருத்துக்களில் ஓரு இசைக் கலைஞனாக எனக்கும் கடுமையான கருத்து மாறுபாடு உண்டு.ஆனால் அவர் அனானியாக வந்து பதில் சொல்லி இருப்பார் என்பதை அவரே ஒத்துக்கொண்டாலும் அவரோடு நெருங்கிப் பழகும் என் போன்றோரால் நம்ப முடியாது.
அப்துல்லா நானாக அப்படி நினைத்துகொள்ளவில்லை, அவரது கேள்விகளும் ஆதாரம் கேட்கும் விதமும் இந்த அனானியாக வந்தவரின் வரிகளும் ஒன்றே, அவைகளை கண் கூடாக நீங்களே பாருங்கள். இதில் எனது பார்வை என்று ஒன்றும் இல்லை.........வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
/*
பனிமலர் said...
அப்துல்லா நானாக அப்படி நினைத்துகொள்ளவில்லை, அவரது கேள்விகளும் ஆதாரம் கேட்கும் விதமும் இந்த அனானியாக வந்தவரின் வரிகளும் ஒன்றே, அவைகளை கண் கூடாக நீங்களே பாருங்கள். இதில் எனது பார்வை என்று ஒன்றும் இல்லை.........வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
*/
தங்கள் ஆராய்ச்சியின் முடிவு எங்களை புல்லரிக்க வைக்கிறது....
இப்படியே போனால், அதிக படங்களில் விவேக் பேசுவது M.R.ராதா போன்று தான் உள்ளது....
நீங்கள், விவேக் தான் M.R.ராதா என்று சொன்னாலும் சொல்வீர்கள் போலே...
நீங்கள் இதுபோல் ஆராய்ச்சிகள் பல செய்து நானிலம் உய்ய பாடுபட வேண்டுகிறேன்.
நையாண்டி பார்த்து புல்லை ஆடு மாடெல்லாம் வந்து மேய்ந்துவிட போகிறது பத்திரமாக பாத்துகொள்ளுங்கள்........
/*பனிமலர் said...
நையாண்டி பார்த்து புல்லை ஆடு மாடெல்லாம் வந்து மேய்ந்துவிட போகிறது பத்திரமாக பாத்துகொள்ளுங்கள்........*/
தவறான முடிவு எடுத்ததை தட்டி கழிக்கும் முயற்சியோ???
நீங்கள் அந்த மாதிரி முடிவு எடுத்தது தவறென எண்ணினாலே போதும். நன்றி சகோதரரே.
தவறான முடிவு என்று எனக்கு தெரியவில்லை இல்லை என்று நண்பர் புருனோவையே சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.
அவர் எங்கு வாதம் செய்தாலும் அவர் சொந்த பெயரோடுதான் வாதம் செய்வார், போன பதிவில் நான் கேட்டதற்கும் பதில் இல்லை. இதில்
//ஒரு மருத்துவர் என்று கூறிக்கொள்ளும் இவர், அந்த படிப்புக்கு தகுந்த பக்குவம் கூட இல்லாமல் எழுதுவதும் வாதம் புரிவதும் பாவமாகவும், நகைப்பாகவும் இருக்கிறது என்று எடுத்து சொல்வது மட்டுமே இந்த பதிவுகளின் நேக்கம். நண்பர் புருனோவை இழிவு படுத்தவோ தூற்றவோ அல்ல என்று தெளிவுபடுத்திகொள்கின்றோம்//
இப்படி சில வரிகள், ஒருவர் மருத்துவராக இருந்தால் வாதம் செய்யக்கூடாது என்று ஏதும் இருக்கிறதா? பக்கும் என்பதற்கு அளவு கோல் என்ன? இளையராஜாவை மேதை என்று அவர் ஒத்துக்கொண்டால் பக்குவபட்டவர் இல்லை என்றால் பக்குவம் இல்லாதவரா? அவர் என்றும் தனிமனித தாக்குதல் நடத்தியது இல்லை, அவர் சிலகருத்துக்களோடு வாதங்களை வைக்கிறார், முடிந்தால் பதில் சொல்லுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள். எதற்கு தேவை இல்லாமல் அனானி கமெண்ட் போட்டார் போன்ற அவதூறுகள்.
//நண்பர் புருனோவிடம் நாம் கேட்பது எல்லாம் இவ்வளவு தான், இராசாவை கேவலபடுத்தவேண்டும் என்று ஏன் உங்களுக்கு இவ்வளவு துடிப்பு//
என்னய்யா கொடுமையா இருக்கு உலகம் ராசாவை புகழ்ந்தால் இவரும் புகழனுமா? அவருக்கு பிடிக்கவில்லை அவர் சொல்கிறார், அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு போங்கள். அதைவிட்டு கேள்வி கேட்பதே தவறு என்று சொல்லாதீர்கள்.
குசும்பன் நீங்களுமா, அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அது அவரோடு நிற்கட்டடும். எதற்கு அவரை பிடித்தவர்கள் பேசும் தளத்திற்கு வந்து வம்பு செய்ய வேண்டும் என்று தான் கேட்டோம். மேலும் அவர் இரகுமானை புகழ்வது போல் வெளிப்படையாக சொன்னாலும் அவரது நோக்கம் இராசாவை இகழ்வது மட்டுமே. அதுவும் வெறியுடன் நடக்கிறது என்று அவரின் கெஞ்சல் மூலம் சுட்டிக்காட்டினோம். இல்லை நான் அப்படி தான் பேசுவேன் என்று அவர் அடம் பிடித்தார், அது தான் நாகரீகமாக சொன்னோம்.
//அப்துல்லா நானாக அப்படி நினைத்துகொள்ளவில்லை, அவரது கேள்விகளும் ஆதாரம் கேட்கும் விதமும் இந்த அனானியாக வந்தவரின் வரிகளும் ஒன்றே, அவைகளை கண் கூடாக நீங்களே பாருங்கள். இதில் எனது பார்வை என்று ஒன்றும் இல்லை.........வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.//
மன்னிக்கவும் ப்ரூனோ அனானியாக வந்து பின்னூட்டம் போட்டார் என்பதற்கு நீங்கள் ஆதாரம் தரவில்லை. மேலே உள்ள வரிகளில் மறைமுகமான ஆதாரம் இருக்கிறது என நான் கருதுகிறேன்.
அவற்றை இவ்வாறு சொல்ல வேண்டும் என நீங்களே அனானியாக போட்டுள்ளீர்கள் என நான் சந்தேகிக்கிறேன்.
மேலும் ப்ரூனோ என்பவரை பலரும் பார்த்துள்ளார்கள். நானும் பார்த்துள்ளேன். அவரது அடையாளம் சரிபார்க்கப்பட்டுள்ளது.
ஆனால் நிங்கள் யார் என்பதே தெரியாது. வேண்டுமானால் அனானி பதிவர் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். பதிவர் எண்ணில் வருவதால் அதன் கீழ் வருபவர் எல்லோருமே பனிமல்அர் என்னும் பெயரில் செயல்படும் பதிவரே என வேண்டுமானால் அடையாளம் காட்டலாம்.
மற்றப்படி நீங்களே அனானிதான். ப்ரொஃபைல் போட்டோவில் காட்டப்படும் “பாட்டி” நீங்களாக இருக்க முடியாது.
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காட்ட நான் அதன் நகலை எனது டோண்டு பதில்கள் 03.09.2009 பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2009/09/03092009.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment