Friday, April 10, 2009

உலகால் கைவிடப்பட்டது ஈழத்தமிழர்கள் மட்டுமா (தூயா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க)

மனிதனுக்கு மனிதன் உதவுதான் தமிழ் உலகுக்கு உரைத்த உரை, அந்த தமிழர்களுக்கோ இன்று உலகம் சொல்வது என்ன நீ வேண்டுமானால் அப்படி இரு ஆனால் எங்களுக்கு எல்லாம் நாங்களும் எங்கள் வளங்களும் தான் முக்கியம் அடுத்தவர்களை பற்றி எல்லாம் எங்களுக்கு எள்ளவு இல்லை அணு அவளிற்கும் அக்கறை இல்லை என்று.

இப்படி ஈழத்தமிழர்களை கைவிட்டதில் முதலிடத்தில் இருக்கும் பெருமை தமிழக தமிழர்களுக்கு. என்ன சாதனை, எத்தனை பெரிய சாதனை. எப்படி இருந்த தமிழ் சமுதாயம் நாம், இப்படி ஒரு இழி நிலைக்கு ஆளானோமே. ஏன் இந்த சுய நலம் நமக்கு. யார் கற்றுக்கொடுத்தது இந்த கொடுமையை தமிழர்களுக்கு.

சம்பந்தமே இல்லாத நாடு நார்வே, அந்த நாடு எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு, ஐ நாவையும், அமெரிக்காவையும் பகைத்துக்கொண்டு ஈழத்து சமாதானத்துக்காக இராசதந்திர முயற்சிகளில் ஈடுபடும் போது. நாம் எல்லாம் கைகட்டி வாய் பொத்தி நிற்பது நீதியா.

ஒரு வேளை தமிழக தமிழர்களுக்கு நாளை இப்படி ஒரு நிலை வரும்போது, ஈழத்தவர்கள் இப்படி இருந்தால் நாமும் இப்படிதானே வேதனையுறுவோம். அவர்களை பார்த்து இப்படி தானே கேள்விகளை கேட்ப்போம்.

ஈழத்தில் இழவு விழுகிறது, நாள்தோறும் அல்ல, நொடிதோறும். ஆனால் நாம் எல்லாம் எந்த ஒரு அதிர்வும் இல்லாமல் தேர்தல் திருவிழா என்று கொண்டாடங்கள், கொடி என்று ஆளாய் பறக்கிறோம்.

அதற்காக நாம் எல்லாம் என்ன செய்துவிடமுடியும் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. நம்மால் எதுவுமே முடியாது என்ற நிலையில் நாம் இல்லை.

நாம் நினைத்தால் இந்திய அரசாங்கத்திற்கும் தமிழக அரசாங்கத்திற்கும் ஒரு நல்ல பாடம் கற்பிக்க முடியும். அனைத்து தொகுதியிலும் ஒவ்வொருவரை நிறுத்துவோம் தமிழர்களது சார்பாக. அவருக்கு தான் நமது வாக்கு என்று வாக்கு சேகரிப்போம். வெல்லவும் செய்வோம்.

தேர்தல் முடிந்ததும், நமது காரணங்களை எடுத்துரைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்வோம். முடியாது என்றும் சொல்லும் பட்சத்தில் அனைவரையும் பதவி விலக செய்வோம்.

இப்படி அவர்கள் தமிழர்களின் பேச்சு கேட்க்கும் வரை போராடுவோம். இறுதி வரை போராடுவோம், இந்திய அரசு அடிபணியும் வரை போராடுவோம். இல்லை நாங்கள் இப்படிதான் இருப்போம் என்றால் அப்படி இருக்கும் வரைக்கும் இந்திய அரசாங்கத்தில் தமிழக பிரதினிதிகள் இருக்கபோவதில்லை என்று விலகி நிற்போம்.

மற்ற மாநிலங்களுக்கும் அவர்களது நிலையும் மெல்ல புரியவருங்கால் நமக்கு கட்டாயம் ஆதரவு தெரிவிப்பார்கள்.

கட்சிகளை நம்பி நாம் மோசம் போனதெல்லாம் போதும், இனிமேலும் இலவு காத்த கிளியாக இல்லாமல் செயல்படுவோம் இளைஞர்களே வாருங்கள்.

தூயா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிக்கபட்ட பதிவு இது. நாங்கள் எப்போதும் உங்களோடு தான் இருக்கிறோம், இன்னமும் கொஞ்சம் உழைத்தால் முழுமையாக உங்களுக்காக செயலாற்றமுடியும். செயலாற்றுவோம்.

2 comments:

Anonymous said...

கட்சிகளை நம்பி நாம் மோசம் போனதெல்லாம் போதும், இனிமேலும் இலவு காத்த கிளியாக இல்லாமல் செயல்படுவோம் இளைஞர்களே வாருங்கள்
//////////////////
இவைதான் இன்றைய தேவை!
இதனை எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்பதுதான் புரியவில்லை!
அனைத்து புலம்பெயர் தேசங்களிலும் தொடர்ச்சியான ஆதரவு,எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் வீரயமாக நடைபெறுகின்றன்! நன்றி!

')) said...

கவின் குட்டி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.