Wednesday, April 8, 2009

உலகம் மூன்றாம் உலக போருக்கு தயாராகுகிறதா

இரண்டாம் உலக போருக்கு பின் பல நாடுகள் காலணி ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. அடிமைகளாக பல ஆண்டுகள் ஏன் தலைமுறைகளைக்கூட கடந்த நாடுகளும் உண்டும். இந்தியாவும் அடிமை இந்தியாவும் அப்படி தலைமுறைகளை தாண்டிய நாடாக இருந்தது.


படித்துமுடித்த கையுடன் தென் ஆப்ரிக்காவிற்கு பயணம் சென்ற காந்தி ஆங்கிலேயர்களால் பற்கள் உடைக்கப்பட்டார். அன்றைக்கு அவரது பற்கள் பறிக்கப்பட்டதில் பட்ட அவமானம் அவரை இந்திய சுதந்திர போராட்டம் வரை கொண்டு வந்தது.


அனேகமாக இந்தே கால கட்டங்களில் அனேகமான காலணி ஆதிக்கதில் இருந்த நாடுகளும் சுதந்திரம் வேண்டி போராட்டங்களை நடத்திக்கொண்டு இருந்தன.


உலக போர் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் இந்த துக்கடா காரியங்களில் எல்லாம் கவனமோ அல்லது எதிர்போ செலுத்த நேரம் இல்லாத அந்த வல்லரசான இங்கிலாந்து அதன் காலணியாதிக்கத்துக்கு விடைகொடுத்து விடைபெற்றது.


உலகப்போர் மட்டும் அப்போது இல்லாமல் இருந்திருந்தால், ஐரோப்பாவிலே நடைபெற்ற மதவாத பயங்கரவாதம் எல்லாம் இன்னமும் சீற்றமுடன், மனிதனால் சகிக்கவே முடியாத வகையில் நடந்து இருக்கும். அதுவும் அந்த கால கட்டங்களில் போராடும் மனிதர்களை விட அவர்களை பார்த்து மற்றவர்களும் அவர்கள் போல் இறங்கிவிடக்கூடாது என்றதில் ஆட்சியாளர்களும் மதகுருமார்களும் மிகவும் கவனமாக் இருந்தார்கள்.


போராட்டம் நடத்துபவர்களை பிடித்துவந்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்து அவர்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்யமுடியுமோ அப்படி எல்லாம் செய்து அணு அணுவாக கொல்வதை பொதுமக்கள் அனைவரும் கண்கொண்டு பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளுவார்கள் ஆட்சியாளர்கள்.


புரட்சியாளனின் தந்தை என்றோ, மகன் என்றோ, இல்லை நண்பன் என்றோ ஒருவரும் பெருமைபட்டுக்கொள்ள முடியாத கால கட்டங்கள் அவை.


அப்படி யாரேனும் இருந்தால் அவர்களை மக்களின் முன் நிறுத்தி பெண்ணாக இருந்தால் பாலியல் அவமானம், ஆணாக இருந்தால் அணு அணுவாக அவனை சிதைத்து அவன் மறனத்திற்கு கெஞ்சும் நிலையிலும் அவனை சுய நினைவோடு வைத்து படுத்தும் பாடுகளை பார்த்த மக்களில் ஒருவர் கூட இந்த வம்பு நமக்கு ஏன் என்று ஒதுங்கும் விதமாக இருக்கும்.


மொத்ததில் நடப்பது ஒன்றே ஒன்று தான், தான் பலசாளி என்று காட்டிக்கொள்ளும் அதே வேளையில் தன்னை எதிர்க்க நினைக்கும் அனைவரது மன உறுதியையும் குலைக்கும் விதமாக பயங்கரவாதத்தை பயன் படுத்துவது தான் ஆட்சியாளர்களது தந்திரம்.


தந்திரம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், மக்களின் எண்ணிக்கையோடு நோக்கினால், இந்த ஆட்சியர்களது எண்ணிகை மிகவும் சொற்பம். இருப்பினும், இந்த ஆட்சியர்களது விருப்படிதான் அந்த எண்ணிக்கையில் மிக்க மனிதர்கள் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று ஆட்டிவைபதால்.


ஆக அரசு மக்களை பணியவைப்பதும் ஒரு பயங்கரவாதத்தினால் தான், இந்த உண்மையை இறையாண்மை, ஆட்சி, மாட்சி, அமைச்சு என்று என்ன பெயர் இட்டு ஒளித்தாலும், குன்றின் மேல் இட்ட விளக்காக அது சொலிக்க தவறியதில்லை.


இந்த அரச பயங்கரவாதத்திற்கு மதங்களும் உறுதுணையாக இருக்கும். காரணம், மதங்களையும் ஒரு ஆயுதமாகத்தான் ஆட்சியர் பயன்படுத்தியுள்ளார்கள் என்றது படிக்காத பாமரனுக்கும் நன்றாகவே தெரியும்.


ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கும் அப்பால் இன்று உலகில் மக்களாட்சி பெரும்பாலும் உள்ள நாடுகளில் கூட மக்கள் எதற்கு எதிராக போராடி வெள்ளையர்களை விரட்டினார்களோ அந்த காரணங்கள் இன்னமும் அப்படியே இருப்பது எவரும் மறுக்கமுடியாத உண்மை.


இந்தியாவை பொருத்த அளவில் காந்தி சொன்ன அந்த கனவு நாள் இன்னமும் எந்த ஊரிலும் இல்லை என்றதே சோகமான உண்மை.


இப்படி மக்களாட்சியிலும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற நிலையில், எங்களுக்கு நீங்கள் செய்த உதவிகள் எல்லாம் போதும். நீங்கள் எங்களை ஆளவும் வேண்டாம், நாங்களி உங்களிடம் அடிமைபட்டு இருக்கவும் வேண்டாம் என்று மக்கள் கூட்டம் கூற துவங்கியுள்ளதுடன் நில்லாது. போராட்டங்களையும் நடத்தி வருகிறது.


இரண்டாம் உலக போர் காலத்தில் மன்னர்களையும் முடியாட்சியின் இழி நிலை மற்றும் வக்கிரங்களை மேடையேற்றி இத்தணை தாக்குதலுக்கும் இடையிலும் சுதந்திர போராட்டத்தை விதைத்து வளர்த்து வழி நடத்தி. மன்னர்களி முடியாட்சிகளை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சி மலர்ந்ததே நமக்கு எல்லாம் சொர்கம் கிடைப்பபோகின்றது என்றார்கள் சுதந்திர போராளிகள்.


ஐம்பது ஆண்டுகாலம் கூட ஆகவில்லை, அதற்குள் மக்களாட்சியின் மேல் படிந்துள்ள முடியாட்சியின் கோரகரங்களது கீரல்கள் மக்களாட்சியின் மக்களின் நெஞ்சங்களில் கீரி கொஞ்சம் கொஞ்சமாக இரத்தம் சொட்டவைத்து தவணை முறையில் உயிர் நீக்கும் வேலையை வெகுவாக வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதை போல் செய்துகொண்டிருக்கிறது.


இன்றைக்கு மக்களாட்சி பல் இளிக்கும் இடங்களில் எல்லாம், மக்கள் வீதிக்கு வந்து போரட்டங்களை வைத்துள்ளது. அப்படியும் நசுபபடும் நாடுகளில் ஆயுத போராட்டம் வரை கொண்டு வந்து இருக்கிறது.


இப்படி நீதிக்கு புறம்பாக நடக்கும் ஆட்சியாளர்களின் நெறிமுறையில் மாறுபாடு கண்ட மக்கள் விலகி நிற்கும் பட்சத்தில். போராளிகளோடு சேர்த்து அவர்களுக்கும் கொல்லப்படுவதை மீண்டும் ஒரு முறை ஆட்சியாளர்கள் நிகழ்த்தி காட்டியுள்ளார்கள்.


உலகமும் தனது பங்கிற்கு பயங்காரவாதத்தை ஒழித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு போராளிகளை அழிக்க முயலுவதையும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.


போராளிகளை அழிக்கத்துடிக்கும் அவர்களது செய்கையில், போரட்டத்தின் அடிப்படை காரணம் ஆராயப்படுமானால் போராட்டமே வெடித்திருக்காதே. ஆனால் ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள், இப்போதைக்கு போராட்டத்தை அடக்குவோம். அதற்கு பிறகு போராட்டம் நடத்தும் எண்ணம் கூட மக்களின் மனதில் தோன்றா வண்ணம் முடியாட்சியில் கையாண்ட அனைத்து அழிவு வழிகளையும் அறிவியல் வழிகொண்டு இன்னமும் கோரமாக நடத்திமுடிப்போம் என்று செல்கிறது.


அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்தார்கள் போராளிகள். வெறும் இரண்டே கோபுரங்கள், ஆனால் அதன் விளைவு இன்றைக்கு உலகமே திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. என்ன தான் தேனொழுக பேசினாலும் அமெரிக்காவினால் இன்னமும் எழுந்து நிற்கமுடியவில்லை, இதுவே உண்மை. என்ன தான் மூடி மறைத்தாலும் விழுந்தது குதிரை என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அமெரிக்காவின் நிலையே மலையின் உச்சில் இருந்து விழுந்த இடைனோசரசு நிலைக்கு ஆளாகி நிற்கிறது.


அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்தார்கள் போராளிகள். வெறும் இரண்டே கோபுரங்கள், ஆனால் அதன் விளைவு இன்றைக்கு உலகமே திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. என்ன தான் தேனொழுக பேசினாலும் அமெரிக்காவினால் இன்னமும் எழுந்து நிற்கமுடியவில்லை, இதுவே உண்மை. என்ன தான் மூடி மறைத்தாலும் விழுந்தது குதிரை என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அமெரிக்காவின் நிலையே மலையின் உச்சில் இருந்து விழுந்த இடைனோசரசு நிலைக்கு ஆளாகி நிற்கிறது.


இந்த அழகில் இந்தியாவின் மிக அருகில் இருக்கும் இலங்கையில் நடக்கும் அரச பயங்கரவாதத்தின் எல்லை மீறிய தாக்குதல்கள் அந்த மண்ணின் போராளிகளை அழித்துவிட்டதாக அறிவிக்கின்றது. அதுவும் 30 வருடம் கழித்து எல்லை இல்லா அளவிற்கு பொருட் செலவுகளை செய்து இந்த செயலை செய்து முடித்ததாக சொல்கிறது. மேலும் வாங்கிய கடன் பத்தவிலை, மேலும் கடன்களை குவித்து அழித்த இடங்களில் புனர்வாழ்வுக்கு வழிகோளுவோம் என்று சொல்கிறது.


அந்த மண்ணின் போராளிகளது போராட்டம் வரலாறா அல்லது போராட்டம் தொடர்கிறதா என்று விவாதிக்கவில்லை. ஆனால், அந்த போராட்டத்தை அழிக்கும் முயற்சியில் இலங்கையும், இன்னமும் பிற நாடுகளும் காட்டிய ஆர்வத்தில் ஒரே ஒரு சதவிகிதமாவது போராட்டத்தின் காரணத்தை பரிசீலிக்க செலவிட்டுருந்தால் போராட்டம் நல்லவழியில் பயணித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.


ஆனால் அரசோ என்ன செய்தது, முடியாட்சியில் மன்னர்கள் நடந்துகொள்வதை போல் போராளிகளையும். அந்த போராட்டத்தை ஆரரிக்கும் மக்களையும் ஒருங்கே கொன்று குவித்தது. போராட்ட பூமியில் இன்று ஒரு புல் பூண்டு கூட இல்லாமல் அழித்துவிட்டோம் என்று அரசு கருதுகிறது. ஆனால் போராட்டத்திற்கான காரணம் இன்னமும் அப்படியே இருக்கிறதே. அது இருக்கும் வரையில் போராட்டம் ஓயப்போவதில்லை. அந்த காரணம் தான் போராளிகளை உருவாக்கியதே தவிர போராளிகள் போராட்டத்தை உருவாக்கவில்லை.


ஒரு வேளை அன்று இந்தியா சுதந்திர போராட்டம் நடத்தும் போது ஒரு உலக போர் நடந்தது போல், இன்றைக்கும் உலகலாவிய ஒரு போர நடந்து கொண்டிருந்தால், ஒரு வேளை ஈழமும் சுலபமாக மலர்ந்து இருக்குமோ என்னவோ.


அல்லது மக்களாட்சி தோற்றுப்போன நாடுகளில் எல்லாம் வெடிக்கும் போராட்டம் பின்னாளில் ஒரு உலக போருக்கு வழிவகுக்குமா என்றும் தோன்றுகிறது. நாடு பிடிக்கும் ஆசையில் அன்று சப்பான் மற்றும் இட்லரின் படைகள் நாளாபுறமும் படை எடுக்க. அதை தடுக்கும் விதமாக மற்ற அனைத்து நாடுகளும் போராடும் வேளையில். குட்டி நாடாக இருந்த இந்தியா போன்றோர்கள் பலன்களை அனுபவித்தார்கள். அதுபோல் இன்றைக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்துகொண்டு சந்தை பொருளாதாரத்தை நிலை நிறுத்தும் போரில் ஈடுப்பட்டுவருவதில் எதிர்தாக்குதலும் அதன் விளைவாக உலக போர வந்தாலும் ஆச்சரியபடுவத்ற்கு இல்லை தான்.


ஒபாமாவின் ஆட்சியில் பொருளாதாரத்தை நிலைகொள்ள செய்வது நடக்காத ஒன்றாக தோன்றுகிறது. அமெரிக்கா மூழ்குவதுடன், அது உலகையும் அதனுடன் இழுத்து செல்லும் வேலையையும் அழகாக செய்கிறது. மற்ற நாடுகள் இவர்களை கைகழுவி நிற்கையில், வேறு வழியில்லாமல் அமெரிக்காவே உலக போரை துவக்கினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

4 comments:

')) said...

மக்கள் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவருகிறார்கள் என்று தாங்கள் சொல்லும் கருத்தை வழிமொழிகிறேன்.

பேராசை, சுயநலம் இவை எல்லாம் இருந்து அதற்கு பாதுகாப்பும், செயல்படுத்தும் வழிமுறையும் சட்டத்தின் துணையுடன் நடந்தால் மக்கள் ஆட்சி, மன்னர் ஆட்சி எல்லாம் ஒன்று தான்.

மக்கள் ஆட்சியில் பிறநாட்டு மன்னர்கள் படையெடுத்து வந்து சீர்குலைப்பார்கள், மக்கள் ஆட்சியில் யானன தன் தலையில் தானாக மண் அள்ளிப் போடுக் கொள்ளும் கதை.

நீங்கள் சொல்வது போல் அமெரிக்ககவில் வறுமை தலைவிரித்து ஆடினால் அதன் தாக்கம் போராகத்தான் இருக்கும்.

ஏனெனில் வறுமை அதன் மீட்சிக்கு எதைப் பற்றியும் சிந்திக்கத் திறனற்று முழுப் பலத்தையும் திரட்டி நிமிர முடியுமா என்று முயற்சிக்கும்.

மிகுந்த பசி எடுத்தவன் கண்ணுக்கு முன்னே ரொட்டித் துண்டுடன் ஒருவர் சென்றால் சும்மா இருக்க மாட்டான்

')) said...

அந்த மண்ணின் போராளிகளது போராட்டம் வரலாறா அல்லது போராட்டம் தொடர்கிறதா என்று விவாதிக்கவில்லை. ஆனால், அந்த போராட்டத்தை அழிக்கும் முயற்சியில் இலங்கையும், இன்னமும் பிற நாடுகளும் காட்டிய ஆர்வத்தில் ஒரே ஒரு சதவிகிதமாவது போராட்டத்தின் காரணத்தை பரிசீலிக்க செலவிட்டுருந்தால் போராட்டம் நல்லவழியில் பயணித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.
//


என்ன அழகான வார்த்தைக் கோர்வைகள் இவை. அற்புதமான , ஆழமான கருத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்

வாழ்த்துக்கள்

பதிவு அருமையோ அருமை!.

')) said...

கோவி எனது கருத்தோடு உங்களது கருத்துகள் ஒத்து போவதாக நினைக்கின்றேன். இந்த 50, 60 வது ஆண்டு கால மக்களாட்சியில் எஞ்சி இருப்பது வெறும் வெறுப்பும் அதிகார மையங்களும் தான். தமிழக கவிஞர்கள் சொல்வது போல் சுதந்திரம் என்ற பெயரில் அந்த வெள்ளையகளிடம் இருந்த நாட்டை பிடுங்கி இந்த கொள்ளையகளிடம் கொடுத்துவிட்டோமோ என்ற வாசகம் முழுக்க மெய்யாகிவருவதை நிகைக்கவே வேதனையாக இருக்கிறது. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

')) said...

மதி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,
வேதனையில் கொட்டிய வார்த்தைகள் அண்ணா அவைகள். எல்லோருக்கும் தெரிந்த கருத்துகள் தான் இவைகள். இருப்பினும் அப்படி ஏதும் இல்லை என்று அனைவரும் நம்ப மறுப்பது தான் வேதனையாக இருக்கிறது. அழிவில் இருந்து காப்பாற்று என்று கதறும் வேளையில் அந்த மரணபிடியில் இருப்பவனிடம் சொன்று நீதியை பற்றியும் அரசியல் தீர்வுகள் இன்னமு இப்படி பல பிதற்றல்களை கொட்டும் மக்களை பார்க்கும் போது எனது ஆற்றாமையில் கொட்டிய வார்த்தைகள் அண்ணா அவைகள்.