Friday, April 3, 2009

You Don't Mess with the Zohan (குடும்பத்துடனோ அல்லது குழந்தைகளுடனோ பார்க்கும் படம் அல்ல இது)

இந்த படத்தை அனைவரும் பார்த்து இருப்பார்கள் என்று நம்புகின்றேன். வயது வந்தவர்களுக்கு மட்டுமே இந்த படம். அப்படி பார்க்காதவர்களுக்கு இங்கே சில சுவையான தகவல்கள்.

படம் எடுக்கப்பட்ட கதைகளம் இசுரேலியரும் பாலத்தீனத்து சச்சரவை மையாக கொண்ட அரசியல் சூழலில் வளர்ந்து வரும் இளைய சமூகத்தின் பாதிப்புகளை எடுத்து வைக்கும் மிகவும் தீவிரமான படம்.


இந்த தீவிர கருத்தை அழகாக அருமையாக நகைப்பாக சொன்னால் எப்படி இருக்கும் என்று யோசித்து யோசித்து அழகாக திரைக்கதை அமைத்து வசனங்களும் காட்சிகளும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.


நகைப்பு படத்தை மேலும் நகைப்பாக்கும் பொருட்டு ஆடம் சாண்டுலரை கதையின் நாயகனாக கொண்டுள்ளார்கள்.

படத்தின் கதை இது தான், இசுரேலின் பயங்கரவாத அழிப்பு அதிரடிப்படையின் அதிரடி வீரன் சொசோவான். நமது விசயகாந்தை போலவே வெடிகுண்டுகளை கையாலே பிடித்து எறிந்தவன் மேலே வீசுவது உட்பட நிலாவை ஒத்தை காலில் உதைத்து பூமியை காப்பாற்றும் நாகனைப்போல் சித்தரித்து இருப்பார்கள்.


அதே நாட்டின் பாலத்தீனத்தின் பகுதியில் ஒரு தீவிரவாதி அவனும் சொசோவானை போல மிகவும் பலம் பொருந்திய மனிதன். அவனை அழிக்கும் தருணத்தில் சொசோவானும் அந்த தீவிரவாதியும் இறப்பதாக இசுரேலின் படையணை கதைக்கும். அதை பயன்படுத்தி சொசோவான் அமெரிக்காவிற்கு தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள செல்கிறான்.


சொசோவானின் வாழ்க்கை இலட்சியம் பெண்களின் தலைமுடி திருத்தகத்தில் மின்சார கனவு படத்தில் பிரபு தேவாவை போல ஒரு பெரிய திருத்துவானாகவேண்டும் என்று.


அமெரிக்காவின் மிகப்பெரிய முடி திருத்தகத்தில் சென்று வேலை கேட்கிறான், அதை இதை சொல்லி வேலை தராமல் தவிர்த்துவிடவே, ஒரு பாலத்தீன பெண் நடத்தும் திருத்தகத்தில் குப்பை பெருக்குபவனாக வேலையாற்றுகிறான்.

பின்னொரு நாளில் இவனுக்கு கிடைக்கும் வாய்பினை வைத்து அந்த கடையின் போக்கையே மாற்றி ஈ கூட நுழைய இடம் இல்லா கடையாக அந்த திருத்தகத்தை மாற்றி அமைகின்றான்.


கதையின் போக்கில் கடையின் முதளாலி பெண்ணிடம் மையல் கொள்ள அவளும் இவன் யார் என்று மறுக்க முடிவு என்ன என்று மிகவும் சுவாரசியமாக முடித்து இருப்பார் இயக்குனர்.

படத்தின் முக்கிய அம்சங்கள்.


1) நாயகனும் நாயகியும் பேசும் இசுரேலிய மற்றும் பாலத்தீனத்து ஆங்கிலம், அச்சு அசலாக இசுரேலியின் ஆங்கிலமும் பாலத்தீன ஆங்கிலமும் அப்படியே வந்து அந்த நாட்டவரை கண்முன்னே கொண்டு வருகிறது.

2) வெள்ளாட்டை இழந்த பாலத்தீனன் அமெரிக்காவில் வெடிகுண்டு தயாரித்து சொசோவானை அழிக்க முனையும் காரியங்களில் சிரித்து மாளவில்லை. குறிப்பாக மருந்து கடையில் வெடிகுண்டு பொருட்களை வாங்கும் போதும், பாலத்தீனத்து தீவிரவாத முகாமுக்கு தொலைபேசியில் அழைக்கும் போதும்.

3) நாயகி காதலை மறுக்கும் போது கூறும் காரணங்கள், உலக மக்கள் அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டிய செய்திகள்.

4) இசுரேலுகாரர்கள் வாய்ப்பாளிகள்(opportunist) என்று அழகாக காட்டி இருப்பது.

5) பாலத்தீனர்களும் வேண்டா வெறுப்பாகத்தான் சண்டைக்கு நிற்கிறார்கள் என்றும் காட்டி இருப்பது உச்சம்.

6) முக்கியமாக கூமூசை எதுக்கெல்லாம் இசுரேலான் பயன் கொள்வான் என்று நகைப்பாக காட்டுவதும் உச்சம்.

7) பணக்காரனின் பலனுக்காக இசுரேலுகாரர்கள் போல் வேடம் தரித்து பாலத்தீனத்து மக்களின் கடைகளை உடைப்பதும், பாலத்தீனத்து வேடமனிந்து இசுரேளாலின் கடைகளை உடைப்பதாக காட்டி இருப்பது படத்தின் மொத்த செய்தியையும் ஒரு காட்சியில் காட்டிவிட்ட பெருமை அந்த இயக்குனருக்கு.

8) கடைசியில் இசுரேலியனும் பாலத்தீனனும் இணைந்து அந்த பணக்கார தீயனை அழிப்பது படத்தின் மகுடம்.

இப்படி எண்ணிகை இல்லா செய்திகளை அழகாக நகைப்பு கலந்து அருமையாக கொடுத்துள்ளார். படம் பார்த்தை உடன் ஒரு இசுரேலியரை கேட்டேன் படம் எப்படி என்று அவர் சொன்னார் அது ஒரு முட்டாள் தனமான படம் என்று.

ஏன் இருக்காது, இவன் செய்யும் கோமாளிதனங்களை சொன்னால், சொல்பவனை முட்டாள் என்று தானே சொல்வான்.........


மறுபடியும் சொல்கிறேன் குடும்பத்துடனோ அல்லது குழந்தைகளுடனோ பார்க்கும் படம் அல்ல இது. இருந்தாலும் நல்ல கருத்துள்ள படம்.

2 comments:

Anonymous said...

:)

')) said...

வாங்க கவின் வருகைக்கு நன்றி.