Saturday, April 4, 2009

பாசகவின் "இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்" தேர்தல் வாக்குறுதியின் நோக்கம் என்னவாக இருக்கும்.

பாசக வெளியிட்டிருக்கும் அதன் மக்களவைக்கான தேர்தல் வாக்குறுதிக்கள் மொத்தத்தில் நடுத்தர மற்றும் கீழ் நடுதட்டு மக்களின் மனதை கவரும் திமுகவின் அறிவிப்புகளான 2 உரூபாய்கு அரிசி, வரிவிலக்கு என்றும் அறிவித்துள்ளது.

இவைகளை தவிர்த்து மற்றவைகள் அனைத்தும் வியாபார நோக்கில் உருவாக்கிய திட்டமாக இருக்கிறது.

1) ஓய்வூதியத்தின் மீதான வரி நீக்கபடும்

3 இலட்சம் வரை வருமான வரிவிலக்கு அறிவிக்கும் போதே, ஓய்வூதியதிற்கு வரிவிலக்கு நடுத்தர மக்களை பொருத்த வரை ஒரு ஏமாற்று வேலை.

பிறகு யாருக்கு தான் உதவியாக இருக்கும், பின் யாருக்கு ஓய்வூதியமே வருடதிற்கு 3 இலட்சத்திற்கு அதிதீதமாக இருப்போருக்கு. அதுவும் இங்கே ஓய்வூதியம் என்று வந்துவிட்டால் போது மற்றபடி எவ்வளவு என்ற வரம்பை எல்லாம் அவர்கள் சொல்லவில்லை. இதை பார்த்தால் அனேகமாக அம்பாணி சகோதரர்கள் அனேகமாக பாசக ஆட்சி வந்தால் ஓய்வு பெறுவதாக அறிப்பார்கள் போலும்....

2) பாதுகாப்பு படையினருக்கு வருமான வரியிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும்.

பாவம் பாதுகாப்பு படையினர்கள் வருத்திற்கு 6 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை வருமான வரி கட்டுகிறார்கள். இவர்கள் அதில் விலக்கு கொடுத்து அவர்களது வாழ்க்கையில் கோடி கோடியாக மிச்சம் செய்ய வழி செய்து கொடுத்துள்ளார்கள். இதை விட பாதுகாப்பு படையினர்களை கேவலபடுத்த முடியுமா. நாட்டு பற்றுடன் இருக்கும் வீரர்களுக்கு நாடி பிச்சை போடுகிறதான் இவர்கள் சொல்கிறார்கள்.

3) சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதி மறுக்கப்படும்

கவனிக்க அன்னியர்கள் சில்லரை வியாபாரத்தில் நுழைவதை தடுப்பதாகவோ, அல்லது அவர்களது முதலீட்டில் இந்துதான் இலீவர் என்றோ, சுசுகி பரமேசுவரன் என்றோ சுரண்டுவதையோ அல்லது இந்தியர்கள் வெற்றிகரமாக நடத்திவரும் சிறு தொழில்களை அழிப்பதையோ தடுப்பதாக இவர்கள் சொல்லவில்லை.

மாறாக அம்பானி சகோதர்கள் துவங்கி இருக்கும் சில்லரை வியாபாரத்திற்கு போட்டியாக வரும் அன்னிய முதலீட்டார்களை தான் இவர்கள் தடுப்பார்களாம். அதுவும் டைடு வெளுப்பான் நிறுவனம் போல் நடு தர மக்களுக்கு தரமான வெளுப்பான்களை பேட்டியாக இறக்கிய பயத்தில் இருக்கும் மிச்ச மீதி பணக்காரர்களுக்கு போட்டியாக வரும் அனைவரையும் தடுப்பதே இவர்களது நோக்கம். அதும் நடுத்தர மற்றும் அவர்களுக்கு கீழும் உள்ள மக்களுக்கு தரமான தாக எதுவும் கிட்டிவிட கூடாது போலும். அப்போது தானே அழகு அத்தை தொலைகாட்சியில் வந்து "கறை நல்லது" என்று கண்களை அழகாக திறந்து சொல்லமுடியும்.

4) பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டுவரப்படும்.

எப்படி மிக சமீபத்தில் கலாச்சார காவலில் இறங்கிய தாலிபான்களை உலகமே சபித்த ஓசை அடங்கும் முன் அவர்கள் எல்லாம் என்ன துக்கடா பசங்க என்று இராம படை ஒன்றை ஏவி பெண்களை நடுத்தெருவில் பாஞ்சாலி ஆக்கி காட்டினார்களே அவர்களது கழக கண்மணிகள். அது போல் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள் போதும், இந்த 33, 44, 55 எல்லாம். இந்து மதம் இருக்கும் வரையில் நடைமுறையில் வரப்போவது இல்லை. அப்படியே வந்தாலும் சாதி கொடுமைகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது என்று வரலாறு எழுதுகிறோமே அப்படி எழுதிக்க வேண்டியது தான்.

5) வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.


இது வரையில் மீட்டு வந்தாக எந்த ஒரு உதாரணமும் இல்லை, இது சும்மாச்சுக்கும் சொல்லி இருக்கும் ஒரு வாக்கு. எதற்கு என்றால் எதிர்கட்சிகளை மிரட்ட மட்டுமே பயன் படும் ஒரு சட்டமாக இருக்கும் இது. பொடா சட்டத்தை போல.

6) பயங்கரவாதத்தை தடுக்க பொடா போன்ற கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும்.

இந்து வெறியர்களை மனதில் வைத்துகொண்டு சொல்வது, பாசகவை பொருத்த வரையில் இது வெறும் வார்த்தைகள் மட்டுமே. ஆனால் அவர்களால் மூளை சலவை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு இந்த செய்தி ஒரு உச்சாகத்தை கொடுக்கும்.

7) மூத்த குடிமக்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இந்த வாக்குறுதிக்கும், ஓய்வூதியத்தின் மீதான வரி நீக்கபடும் மற்றும் 3 இலட்சம் வருட வருமானத்திற்கு வரிவிலக்கு என்ன வித்தியாசம் யாராவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் தயவுசெய்து. தாங்க முடியலப்பா இந்த பாசகவின் நகைச்சுவை.

8) இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்

மேலே சொன்ன எல்லா வாக்குறுதிகளுக்கும் சிகரம் வைதாற் போல் சொன்னது தான், கட்டுரையின் தலைப்பு. எல்லா இந்தியர்களுக்கும் அடையாள அட்டை கொடுப்போம் என்று.

இதற்கு பேசாமல் இட்டுலர் யூதர்களுக்கு கையிலே பட்டையை கட்டிவிட்டு தடுப்பு முகாம்களை துவங்கி அங்கே அடைத்து வைப்பது போல் காட்டிக்கொண்டு இரகசியமாக கொன்று குவித்தார்களே அதை தான் செய்ய போகின்றோம் என்று சொல்ல வேண்டியது தானே.

ஒரே ஒரு வாக்குறுதியாவது, நாட்டை முன்னேற்றும் விதமாக கொடுக்க முடிந்ததா உங்களால். இதிலே அத்துவாணி தான் தலைமை அமைச்சர் என்ற முன்னறிவிப்பு வேறு.

நீங்க வந்துடாலும் நாடு அப்படியே முன்னேறி அமெரிக்காக காப்பாத்திடும் போங்க. போய் செயலலிதாவுக்கு சேவகம் செய்யும் வேலையை பாருங்கள், நாலு காசாவது தேறும்.........

2 comments:

Anonymous said...

7. If anybody get voluntire retirement in 50 age, they are not senior citizine. For rest of ten years they get tex benefit.
2. Tax free to militarian is good one.
8.ID card is lot of use. Its not general one.Its a Computerised Biometric ID card.If this ID card is previously isued, this Kazab cannot get work in Taj hotel and Mumbai attock maybe avoided.

others also good one.I will explain later.

')) said...

வாங்க அனானி,

உங்களது பட்டியல் தொடரும் என்று காத்திருந்தேன். ஏனோ எழுத மறுத்துவிட்டீர்கள். உங்களது வார்த்தைகளே உங்களுக்கு முரனான படவில்லை. 50 வயதில் பணிவிடை பெறும் மக்கள் யார், அதுவும் ஓய்வூதிதம் 3 இலட்சத்திற்கும் மேல் வாங்குபவருக்குத்தான் இது உதவும் என்று குறிப்பிட்டு இருந்தேன். 3 இலட்சம் என்றால் மாதம், 25,000 உரூபாய் சம்பளம் என்று பொருள். இந்த பணம் மத்திய அல்லது அதற்கு கீழும் வாழும் மக்களின் சம்பளமாக இல்லை என்று தெளிவாக சொல்லி இருந்தேன்.

இராணுவ வீரர்களுக்கு வரி விலக்கு நல்லது என்று மட்டும் சொல்லியுள்ளீர்கள். இது அங்கே தெருவில் போகிறானே அவன் மிகவும் கெட்டவன் என்று சொல்வது போல் இருக்கிறது. உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டால் எனக்கு மிகவும் வேண்டியவர் ஒருவர் சொல்லி இருக்கிறார் அது தான் சொன்னேன் என்று சொல்வார்களே அப்படி இருக்கிறது.

இந்த வரி விலக்கால் அவர்களுக்கு என்ன மாதம் உரூ 500 முத உரூ 2000 வரை வருவதாக வைத்துக்கொள்வோம். அப்படி வரும் அந்த பணத்தில் இப்போது இருக்கும் விலைவாசியில் பிள்ளைகளின் படிப்பிற்காவது அது உதவுமா என்றால் இல்லை. இது ஒரு உப்புமா திட்டம் என்று தெளிவாக சொன்னேன், நீங்களோ இல்லை என்று சொன்னதோடு நிறுத்தியுள்ளீர்கள். எப்படி என்று சொல்லி இருக்கலாம், ஏனோ சொல்லவில்லை......

அடையாள அட்டையை குறித்து ஏதும் பதில் இல்லை என்று பார்த்தேன், சரியாக சொன்னீர்கள். உங்களுக்கு நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை, சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து கார்கில் போர் சமயத்தில் நமது உங்துகணைகளின் தொழில் நுட்பங்களை பாக்கிட்த்தானத்தினிடம் விற்றார்களே படித்த பொறியாளர் அவர் எந்த நாட்டிலிருந்து அங்கே வேலைக்கு வந்தவர். கோவையிலே கொழுந்து விட்டு எரிந்ததே தீயும் எண்ணிக்கை இல்லா குண்டு வெடிப்புகளும், அந்த நிகழ்வுகளை நிகழ்தியவர்கள் யார். கோத்ரா சம்பவன் நினைவில் இருக்கும் என்று நினைக்கின்றேன் அங்கே வந்து கொளுத்திய்வர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்கள் என்று தெரியுமா....

இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்ல முடியும் ஆனால் என்ன அப்படி அடுக்குவதால் வெறுப்பு தான் மிஞ்சும். அதிலே நான் சொல்ல வந்த கருத்துக்கள் அடி பட்டுப்போகும்.

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி......