Wednesday, April 1, 2009

நான் கடவுள் - திரைவிமர்சனம் பாலா என்னை மன்னிப்பாராக

அனேகமானோர் இந்த படத்தை பார்த்துமுடித்து இருப்பார்கள் என்று நம்புகின்றேன். அதனால் எனது விரிவான விமர்சனம் யாருடைய சுவாரிசியத்தையும் கெடுத்துவிடாது என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

படத்தை பார்க்கும் முன்பே எக்கச்சக்கமான விமர்சனங்களை படித்துவிட்டமையால், படம் பார்க்கும் போது அந்தந்த பகுதிகளில் அவர்களது பார்வை நமக்கும் வருவது தவிர்க்க முடியவில்லை தான். இருந்தாலும் படம் துவங்கிய சிறிது நேரத்திற்கு எல்லாம் நாம் நமது பார்வையில் மூழ்கிப்போகிறோம், இதுவே உண்மை.

பாலாவின் பலமே இது தான், தனது பொருத்தி காட்சிகளை (Establishment shot) அமைக்கும் போதே அதனுள் அழுத்தங்களை பொருத்தி அந்த காட்சிக்குள் நம்மை அப்படியே அழுத்திவிடுவது அவரது உத்திகளில் ஒன்று.

சிறிது நேரத்திற்கு எல்லாம் அந்த பிணம் எரியும் வாடை உண்ர்வது போல் இருக்கிறது படம் பார்க்கும் போது. போதா குறைக்கு இளையராசா வேறு, கொஞ்சம் நஞ்சம் இருக்கும் நினைவுகளையும் தனது இசையால் அடித்து தும்சம் செய்து ஆளையே காலி செய்துவிடுகிறார்கள்.

கேராம்(Hey Ram) என்று கமலகாசனின் படம் அதிலே இசையில் தொடங்குதமா மோக நாடகமே என்ற ஒரு மயக்க பாடலை அமைத்திருப்பார் இளையராசா. அந்த பாடல் சாதாரணமாக தெரிந்தாலும் பாடலை கேட்ட பிறகு அந்த தாளம் மனதிலேயே அதிக நேரம் சுற்றி சுற்றி வரும்.

அதை போல இந்த படத்தில் ஒரு பாடல், நாயகனை முதலில் காட்டும் போது வரும் பாடலின் துவக்கம். நினைவைவிட்டு அகல நாட்கள் பிடித்தது.

இளையராசாவும், பாலாவும், ஆர்தர் வில்சனும் சேர்ந்து பார்ப்பவரது மண்டைகுள் சென்று ஒரு குடை குடைத்து எடுத்து இருப்பார்கள்.

செட்டப்ப மாத்தி, கெட்டப்ப மாத்தி அப்பன் வைச்ச பேரை மாற்றி பாடலுக்கு படக்காட்சி எப்படி எல்லாம் அரங்கத்துகுள் மேலும் கீழும் என சாத்தியமே இல்லாத கோணங்களில் எல்லாம் பறந்து பறந்து காண்பித்ததோ அப்படி வெளிபுற படபிடிப்பிலும் ஆர்தர் வில்சன் அசத்த தவறவில்லை. அதில் தலையை சுற்ற வைக்கும் உடுக்கையும் இன்னமும் பல நாதங்கள்.

பின் சம்பந்தமே இல்லாமல் பிச்சைகாரர்களின் வாழ்க்கைக்குள் செல்கிறது கதை.

அவர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் பசியை தவிர மற்ற எல்லா உணர்வுகளும் உண்டு என்று புதிதாக சொல்வதாக பாலாவும் சரி செயமோகனும் வரிந்துகட்டிக்கொண்டு காணிளிகளை கொடுத்து வருகிறார்கள்.

1992 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் ஒரு படம் வந்தது படம் City of Joy. இந்த படம் இந்தியாவின் கல்கத்தாவில் ஒரு சேரியில் படமாக்கபட்டு இருக்கும். அதுவும் எப்படி பட்ட சேரி தெரியுமா, தொழு நோயாளிகளை கொண்ட சேரி அது. அவர்கள் மட்டுமே வாழும் சேரி அது. அந்த மக்கள் அனேக மக்களின் அருவருப்புக்குட்பட்டவர்களாக படத்தில் காட்டுவார்கள்.

Ben-Hur படத்திற்கு பிறகு ஆலிஉட்டு அதிகம் தொழு நோயாளிகளை படத்தில் கொண்டு இருப்பது இந்த படத்தில் தான் என்று நினைக்கிறேன்.

படத்தின் நாயகன் ஒரு அமெரிக்கன், அவன் சேவை புரியும் மனதுடன் இந்தியா வருவான். அங்கு வரும் வேற்று நாட்டார்களை எப்படி எல்லாம் குடிக்க வைத்து விபச்சாரிகள் கொண்டு கொள்ளை அடிக்கிறார்கள் என்று துவங்கி தொழு நோயாளிகளிடம் கூட வாங்கி திண்று தான் ஒரு பொறுக்கி கும்பல் வாழ்வை நகர்த்தி வருகிறது என்று தெள்ளத்தெளிவாக காண்பித்து இருப்பார்கள்.

பிச்சை போடும் மனிதர்கள் கூட இரண்டு அடி தூரே நின்று காசைவிட்டெரியும் நிலையில் இருக்கும் அந்த தொழு நோயாளிகளின் சேரியில் ஆணும் பெண்ணும்மாக காதல் கொள்வதும் பிறகு பிரசவத்தில் அந்த பெண் தவிப்பதும். அந்த பிரசவத்திற்கு அம்ரிசு பூரியும், அவரது மனைவியாக சாப்னா ஆசுமீயும், இங்கிலாந்து பெண் மருத்துவரும் அமெரிக்க மருத்துவரும் என்று தொட்டு சேவை செய்வதாக மிகவும் மன தாக்கத்தை உண்டாக்கும் விதத்தில் படமாக்கி இருப்பார்கள்.

அந்த காட்சிகளின் தாக்கம் இந்த படத்தில் அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது. சரி போனால் போகட்டும் என்று பார்த்தால், இவர்கள் இருவரும் பாலாவும், செயமோகனும் கொடுக்கும் நேர்காணலில் இவர்கள் அடிக்கும் தம்பட்டங்களை பார்த்தால் இதை எழுதாமல் தவிர்கமுடியவில்லை. பாலாவும், அவரது இரசிகர்களும் என்னை மன்னிப்பாராக.

தவிர, அந்த அகோரியின் வாழ்க்கை கதையை பார்த்தால் பிபிசி நிறுவனம் தயாரித்த விவரணப்படம்

http://www.youtube.com/watch?v=W0bGrvKVxac

http://www.youtube.com/watch?v=fAIv7R8yk5c&feature=related

http://www.youtube.com/watch?v=u_rJu_20Aps&feature=related

http://www.youtube.com/watch?v=n8lDTLlmvwk&feature=related

http://www.youtube.com/watch?v=fc-TsGzhsN8&feature=related

http://www.youtube.com/watch?v=soKFraGA-oU&feature=related

இந்த படத்தை பார்க்கவும், இந்த படத்தில் வரும் சம்பவங்களுக்கும் நான் கடவுளில் வரும் சம்பவங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம். இங்கே அந்த அகோரி, தனது இல்லத்து மக்களையும் ஏற்றுக்கொண்ட சித்தனாக இருக்கிறான். அங்கே அனாதையாக்க பட்ட கோபத்தில் பெற்றோரை எற்க மறுக்கும் சித்தனாக நாயகன் இருக்கிறான். மற்றபடி இந்த விவரணத்திலும் இடையில் வந்து செல்லும் பிச்சைகார கூட்டத்தனையும் நீங்கள் பார்ப்பீர்கள்.

இந்த விவரணம் மிகவும் தெளிவாக அகோரியின் வாழ்க்கையை காட்டி இருக்கிறது பாலாவைவிட. பாலாவும் இப்படி ஒரு முயற்சிக்கு தான் பாடுபட்டிருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால், எப்படி தீபா மேத்தாவை அலையவிட்டார்களோ அதே போல் பாலாவைவும் அலையவிட்டிருக்கவேண்டும் இந்த இந்துமதவாதம்.

எவ்வளவோ முயன்றும் கடைசியில் இலங்கையில் சென்று தண்ணீர் (water) படத்தை பிடித்தாரோ அதே போல் அகோரியின் கதையை வெட்டவில்லை என்றால் படமே வெளியே வராது என்று மிரட்டி, அந்த பிச்சைகாரர்களது வாழ்க்கையை பிரதான கதையாக பாலா கையாண்டுள்ளது போல் தெரிகின்றது.

படத்தின் ஒரே ஆருதல் படத்தின் இசை மட்டுமே மிஞ்சு நிற்கிறது. அதுவும் பாடல்கள் எல்லாம் பழைய பாடல்கள் என்ற ஒரு விமர்சனங்களோடு. என்னை பொருத்தவரை, காட்சிக்கு தகுந்தார்போல் மனதை கவரும் பழைய பாடல்களை கையாண்டு இருப்பது பாலாவின் மற்றும் இளையராசாவும் எப்படி கதையில் மூழ்கி போய்யுள்ளார்கள் என்று காட்டுகிறது. அதுவும் அந்த தொடர்வண்டியில் (Train) அவள் பாடும் பாடல் அருமையிலும் அருமை.

மொத்தத்தில் நான் கடவுள் ஒரு தடம்மாற்றபட்ட ஒரு விவரணம்.

2 comments:

')) said...

நீங்கள் எழுதிவிட்டீர்கள். நான் பலரிடம் கூறியது. இதே போல் பல விபரணப் படங்கள் பார்த்துள்ளேன்.
நீங்கள் குறிப்பிட்ட ஆங்கிலப்படத்துடன், சலாம் பம்பே கூட இப்படியான இந்தியாவின் மறுபக்கத்தை அதாவது மேல்நாட்டார் படமாக்க விரும்பும் பகுதிகளில் படமாக்கப் பட்டதே!!
அப்படங்களைப் பார்க்காதோருக்கு
இது புதிதே!

')) said...

யோகன் நீங்கள் சொன்னதை போல் சலாம் பாம்பேவும் சரி, இந்த சாய் ஆப் சிட்டியும் சரி, இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்தது தான் இசலம் இடாக்கு மில்லினர் படம். இந்த படத்தை பர்த்ததும் விமர்சனம் எழுத வேண்டும் என்று இருந்தேன். அதற்குள் ஆசுகர் விருதுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. அப்படியே எழுதி இருந்தாலும் காழ்ப்பில் எழுதுகிறேன் என்ற விமர்சனம் வருமே என்று விட்டு விட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன்.