Wednesday, October 31, 2018

ரபேல் விமான இரகசியம் சீனா தான் காரணமா

ரபேல் விமான ஒப்பந்தம் பற்றிய செய்திகளை இரகசியம் என்றும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான செய்தியாகையால் விபரங்களை வெளியிட முடியாது என்றும் கூறும் இரகசியம் இதுவாக தான் இருக்க முடியும்.

இந்த ஒப்பந்தம் வெளியாகும் முன் மோடி சீனா சென்று வந்தது மக்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இந்தியாவின் விமானப்படை வலுப்பெறுவதை சீனா விரும்பவில்லை. ஆகையால் விமான படையின் வலிமையை காக்கும் விதமாக வாங்க இருக்கும் விமானங்களையும் மற்ற தவாடங்களையும் வாங்க கூடாது என்று மோடி சீனாவில் மிரட்டப்பட்டு இருக்கனும்.

அப்படி மிரட்டப்பட்டு மிரண்டு போன மோடி நாடு திரும்பியதும், தனக்கு சீனாவால் இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றும் நிமித்தமாக 128 விமானமாக இருந்த ஒப்பந்தத்தை வேண்டாம் என்று முடிவு எடுத்தது. பிறகு எதிர்கட்சிகளும் செய்தியாளர்களும் கேள்வி கேட்ப்பார்களே என்று ஒப்புக்கு 36 விமானங்கள் மட்டும் வாங்குவதாக அறிவிப்புகளை வெளியிட்டது.

அந்த 36 விமானங்களும் பொம்மை விமானங்களை கூட தயாரித்த அனுபவம் இல்லாத நிறுவனத்திடம் கொடுத்து எந்த விதமான தரமும் திரனும் இல்லாத பொம்மை விமானங்களாக தான் இருக்க வேண்டும் என்ற சீனாவின் மிரட்டலுக்கு கட்டுப்பட்ட மோடி அவ்வாரே செய்தார்.

படிப்படியாக இதே போல் இந்தியாவின் பாதுகாப்பு துறையை முற்றிலுமாக வலுவிழக்க செய்யுமாறும் மோடி மிரட்டப்பட்டுள்ளார். அதன் பொறுட்டு பிரான்சு, இசுரேல் மற்றும் இரசியாவிடம் இருந்து எந்த விதமான பயனும் இல்லாத ஆயுதங்களை மட்டும் கண்துடைப்புக்காக வாங்குவதாக சீனாவின் ஆணைக்காக செய்து இருக்கிறார் பிரதமர் மோடி.

இது புரியாமல் எதிர்கட்சிகளும் செய்தியாளர்களும் ரபேல் ஊழல் என்று பிதற்றுகிறார்கள். அதுவும் சிதம்பரமும் இதே போல் பேசுவது எரிச்சலை வரவழைக்கிறது.

இனி காலத்திற்கும் இந்தியா சீனாவின் அடிமையாக இருக்கும் படியாக பாசக சத்தம் இல்லாமல் செய்துவிட்டு, மோடி ஒருவரை பார்த்து அமெரிக்கா பயப்படுகிறது என்று தனது சங்கிகளை விட்டு செய்தி பரப்ப செய்கின்றது.......

0 comments: